திங்கள், 6 செப்டம்பர், 2021

முதலமைச்சரின் அறிவிப்பிற்கு சட்டமன்ற அனைத்துக் கட்சியினர் வரவேற்பு - பாராட்டு!


சென்னை, செப்.6 தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17 ஆம் நாளை சமூக நீதி நாளாகக் கொண்டாடுவது என்றும், அந்நாளில் தலைமைச் செயலகம் தொடங்கி அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களில் உறுதிமொழி ஒன்றை எடுப்பது எனவும் தமிழ்நாடு சட்டப் பேரவையில் விதி எண் 110-இன்கீழ் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பிர கடனப்படுத்தியுள்ளார்.

முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பிற்கு  சட்டமன்ற அனைத்துக் கட்சியினர் தங்களது பாராட்டை தெரி வித்துள்ளனர்.

பாஜக உறுப்பினர் நயினார் நகேந்திரன்

கடவுள் நம்பிக்கையோடு இருக்கும் பாரதீய ஜனதா கட்சியும் பெரியார் பிறந்த நாளான செப். 17 ஆம் தேதியை சமூகநீதி நாளாக அறிவித்ததற்கு வரவேற்பு தெரிவிக்கிறது.

அதிமுக உறுப்பினர் வைத்தியலிங்கம்

சாமானியனும் அரசியலுக்கு வரலாம் என்று அடித்தளம் இட்டவர் பெரியார். அதனால் அதிமுகவும், முதலமைச்சரின் அறிவிப்பை மனப் பூர்வமாக வரவேற்கிறோம்.

வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பு: 

அவை முன்னவர் துரைமுருகன்

பெரியாரால்தான் நாம் எல்லாம் பேரவையில் உட்கார்ந்திருக்கிறோம். அவர் இல்லையென்றால் யார் யார் பேரவையில் உட்கார்ந்து இருப்பார்கள் என்பது 50-க்கு முன்னால் நடைபெற்ற தேர்தலில் நடந்தது தெரியும்.

கலைஞரின் அதே சுயமரியாதை உணர்வோடு முதலமைச்சர் இந்த அறிவிப்பை வாசிக்கும்போது தெரிந் தது. திராவிட இயக்கத்தை யாரும் அழிக்க முடியாது. எதிரி தோன்றினால் தான் திராவிட இயக்கத்தை அழிக்க முடியும். அதுவும் தோன்ற முடியாது.

பேரவைத் தலைவர் அப்பாவு

பெரியாராக, அண்ணவாக, கலை ஞராக முதலமைச்சர் வாழ்ந்து வருகிறார்.

ஈரோடு கிழக்கு உறுப்பினர் திருமகன் ஈவெரா

பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவித்ததற்கு எங்கள் குடும் பத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக