உலகு தொடங்கிய நாள் முதலாய் இன்றும் வளமையுடைய உயிர்மொழியாய் நின்று நிலைப்பது தமிழ்தான் என்பது வெள்ளிடை மலையாயிற்று. வந்தேறிகளான வடவாரியப் பார்ப்பனர்கள் காலங்காலமாய் திராவிடர்க்குத் துரோகமிழைக்கத் தவறியதே இல்லை. அந்த வகையில் தினமணி கே.வைத்தியநாதன் தன் சுயபுராணம் கூறற்கு (கலாரசிகன்) அந்த செய்தி ஏட்டை பயன்படுத்துவது ஊரறிந்த உண்மை. இந்த வேலை இன்று நேற்றல்ல; ஏன், என்.சிவராமன் காலத்திலிருந்தே நடந்து வருகிற ஒன்று.
தமிழுக்கு பாரதியை விட்டால், கல்கி கிருஷ்ணமூர்த்தியை விட்டால், உ.வே.சாமிநாதனை விட்டால் வேறு கதியே இல்லை என்று துதிபாடிக்கொண்டிருப்பவர் தான் இந்த கி.வைத்தியநாதன். இலக்கிய ஜாம்பவான்களான சாகித்ய அகாதெமி மற்றும் ஞானபீடப் பரிசு பெற்ற அகிலன், ஜெயகாந்தன் இவர்களைப்பற்றி என்றாவது சொல்லியிருப்பாரா? இராவண காவியம் பாடிய புலவர் குழந்தை, கம்பனைவிட எந்த வகையில் குறைச்சல்? புரட்சிக்கவிஞரில் தொடங்கி சுரதா, முடியரசன், ‘தென்மொழி’ பெருஞ்சித்திரன், ஈரோடு தமிழன்பன், கவிக்கோ அப்துல் ரகுமான் வரையிலான கவிஞர் கூட்டத்தைப் பற்றி எங்காவது, என்றைக்காவது எழுதியிருப்பாரா? இல்லை, பேசித்தான் இருப்பாரா இந்த ‘வைத்தி’?
திருவையாறு அரசர் கல்லூரியை சமஸ்கிருத கலாச்சாலை யாகக் கண்டவர்களை திருப்பாதிரிப் புலியூர் ஞானியாரடிகளால் அல்லவா தமிழ் புலவர் கல்லூரியாயிற்று! தனித்தமிழியக்கங்கண்ட மறைமலை அடிகள் தானே சமஸ்கிருத சாகுந்தல நாடகத்தைத் தமிழில் தந்தார். இன்னும் மகிபாலற்பட்டி பண்டிதமணி மு.கதிரேசனார் தாமே ‘மிருச்சகடிகா’வை மண்ணில் சிறு தேராக ‘தமிழாக்கிக் கொடுத்தார். மனுநீதி, சுக்கிர நீதிகளையும் தமிழர் அறியச் செய்தார்‘.
எத்தனையோ சங்கச்சான்றோர்கள் தமிழர் நாகரிகத்திற்கும், பண்பாட்டிற்கும் தமது பங்களிப்பைத் தவறாது தந்திருக்கிறார்கள்.
‘தமக்கென முயலா நோன்றாள்!
பிறர்க்கென, முயலுநர் உண்மையானே!
“உண்டால் அம்ம இவ்வுலகம்“ என்று தொண்டறம் பாடிய புலவர் முதல் ‘நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின் என்று தமிழறம் பாடிய புலவரிலிருந்து ‘மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
“பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே”
பாடிய அரசன் தொட்டு, “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்று அறிவுறுத்தி ‘தன்னை அறிய தனக்கொரு கேடில்லை’ என்று உணர்த்திய திருமந்திரம் வரை மிகப்பல சான்றோர்கள் வாழ்ந்த தமிழகத்தில், நினைவுப் பரிசு என்ற ஒன்றை அரசுவழி கொடுப்பதற்கு, ‘கபிலர் தானா கிடைத்தார்? அந்தப் பரிசும் ‘பிராமணனுக்குப்’ போக வேண்டும் என்பதற்காக ஒரு பார்ப்பனக் கபிலனை பரிந்து செய்திருக்கிறதே இந்த ஆரியக் கூட்டம்!
உலக வழக்கு அழித்தொழிந்த சமஸ்கிருதத்தை நாங்கள் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்று சுடுகாட்டு நிலத்தை காஞ்சி சங்கராச்சாரி ஆசியோடு சாஸ்த்ரா பல்கலை நடத்துபவர்கள், ‘சிறுபான்மை அந்தஸ்து’ கேட்டு நீதிமன்றம் வரை சென்றார்களே, வழக்கில் வென்றார்களா? சமஸ்கிருதம் யாருக்கும் தாய்மொழியல்ல என்பதுதானே தீர்ப்பு! வீட்டிலே அத்திம்பேர், அம்மாமி கொச்சைத் தமிழ்பேசிக் கொண்டு, ‘ஸ்லோகத்தோடு’ நின்றுவிட்ட சமஸ்கிருதத்திற்கு வரிந்துகட்டிக்கொண்டு நிற்கின்ற பார்ப்பனர்களைப் பார்த்தீர்களா?
தமிழ் ஹார்வேர்டு பல்கலை. வரை சென்றுவிட்ட வயிற்றெரிச்சலில், தினமணி வைத்தி, பாரதிக்கு உலகப் பல்கலையில் ‘இருக்கை’ வைக்க வேண்டுமென்று கூறத்தொடங்கியுள்ளார்.
தமிழின் தொன்மை பற்றி ஆர்.இ.ஆஷர் தொடங்கி ‘செக்‘ அறிஞர் கமெஸ் துமில் ஸ்விலபேல் வரை பதிவு செய்துள்ள மொழிநூல், மொழியியல் வரலாறுகளை அறிவாரா இந்த ‘வைத்தி’? அமெரிக்க மொழி நூலகர் எல்.புளும்ஃபில்டு என்பார் தம் ‘மொழி’ (Language) நூலில் தமிழ் ஒலியனில் பற்றி சொல்லியுள்ள விளக்கம் தெரியுமா?
தமிழால் இணைவோம் என்று பெயரளவில் ஒரு மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு, பார்ப்பன எழுத்தாளர்களுக்கு மட்டுமே வெளிச்சம் போட்டுக் கொண்டிருக்கும் ‘வைத்தி’யின் தினமணியை மானமுள்ள தமிழன் எவனும் தொட மாட்டான் என்று இதன் மூலம் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
- பட்டுக்கோட்டை தமிழ் அன்பன்
- வடுதலை ஞாயிறு மலர், 29.2.20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக