இந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான ஜம்மு வைஸ்ணவி தேவி சிலைக் கோவில், உஜ்ஜைன் காலபைரவர் சிலை,உத்தராகன் ஜுவாலா தேவி சிலை. கொல்கத்தா காளிகா தேவிசிலை, மோடிக்கு மிகவும் பிடித்த வாரணாசி சங்கடமோர்ச்சன் கோவில்அனுமான் சிலை. , இந்தூர் பைரவி தேவி சிலை, பூனே தகுடு சேட் கோவில் பிள்ளையார் சிலை, மகாகாலேஷ்வர் கோவில் லிங்கம், மற்றும் சோம்புரா சிவலிங்க சிலை என அனைத்திற்கும் முகத்தில் முகக்கவசம் அணிவித்து விட்டார்கள். இந்த அனைத்து கோவில் சிலைகளும் மிகவும் சக்தி வாய்ந்ததாம். இக்கோவில்களுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். சிலைகளுக்கு முகக்கவசம் குறித்து அந்த அந்த கோவில் நிர்வாகங்கள் கூறியதாவது: மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கவே இந்த சிலைகளுக்கு முகக்கவசம் அணிய உத்தரவிட்டுள்ளோம் என்று கூறியுள்ளனர். பரவாயில்லை முதல் முதலாக இந்த சிலை ஒரு நல்ல காரியத்திற்கு பயன்பட்டுள்ளது என்பது ஒருபுறம் இருக்கட்டும் - சாமி சிலைகளே சினிமா நட்சத்திரங்களின் பாணியில் விளம்பர மாடலுக்குப் பயன்படுகிறதே - இதுதான் சாமிகளின் யோக்கியதைத் தெரிந்து கொள்வீர்.
- விடுதலை நாளேடு, 20.3.20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக