ஜெர்மன் நாட்டு கொலோன் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த பி.எச்.டி. ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர் ஸ்வென் வொர்ட்மென் (பெரியார் பன்னாட்டு மய்யம், ஜெர்மனி கிளை) இன்று (13.3.2020) சென்னை - பெரியார் திடலில் தமிழர் தலைவரைச் சந்தித்து உரையாடினர். தந்தை பெரியார் பற்றியும் அவர் நிறுவிய இயக்கமான திராவிடர் கழகம் பற்றியும், அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் நூற்றாண்டு பற்றியும் சுருக்கமாக, ஆழமாக தமிழர் தலைவர் எடுத்துரைத்தார். வருகை தந்த மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார். தமிழர் தலைவரைச் சந்தித்த குழுவில் ஸ்வென் வொர்ட்மென் உடன் பேராசிரியை குல்கார்தி பார்போசா, பி.எச்.டி ஆராய்ச்சி மாணவர்கள் ரெனாபி தாவலோஸ், பெரினா யோகராஜா, டொமினிக் க்ரோப் அடங்குவர். பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடம், பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகம், பெரியார் நூல் நிலையம் ஆகியவற்றை குழுவினர் சுற்றிப் பார்த்தனர்.
- விடுதலை நாளேடு 13 3 20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக