ஞாயிறு, 1 மார்ச், 2020

‘பெல்' வ.மாரியப்பன் பணி நிறைவு பாராட்டு விழா

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கலந்து கொண்டு வாழ்த்துரை

திருச்சி, பிப். 20- ‘பெல்' நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராகவும், திருவெறும்பூர் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவராக, விடுதலை, உண்மை முகவராக பணியாற்றிய ‘பெல்' வ.மாரியப்பன் வருகின்ற 24 ஆம் தேதி இந்நிறுவனத்திலிருந்து பணி ஓய்வு பெறுகிறார்.

முன்னதாக அவருக்கு பணிநிறைவு பாராட்டு விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டு, பெரியாரின் சமூகப்பணி எனும் தலைப்பில் கருத்தரங்கம் 17.2.2020 அன்று மாலை 5 மணியளவில் ‘பெல்' சமுதாய கூடத்தில் சி.கிருஷ்ணகுமார் தலைமை யில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு மாவட்ட தலைவர் ஞா. ஆரோக்கியராஜ், மாநில தொழிலாளரணி செய லாளர் மு.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில் திராவிடர் கழகத் துணை தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்  கலந்து கொண்டு பேசுகையில்,

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ‘பெல்' நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி, ஒப்பந்த தொழிலாளராகவே பணி ஓய்வு பெறும் ஓர் அவலம் தொடர்ந்து கொண்டே தான் இருக் கிறது. தொடர்ந்து இப்பிரச்சினையை மய்யப்படுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், வழக்குகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

இப்படி நமது இயக்கம் இப்பிரச்சினையில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றது. நீதிமன்றங்கள் உத்தரவு போட்டாலும் கூட நிர்வாகம் அதனை ஏற்க மறுக்கிறது. ஆனால் நமது இயக்கம் எந்தக் காரியத்திலும் தமது முயற்சியை நிறுத்தியது இல்லை. அது ரத்த ஓட்டத்திலும் கிடையாது. கண்டிப்பாக இப்பிரச்சனையில் வெற்றியை பெறு வோம் என்பதில் இரண்டு கருத்து இருக்க முடியாது.

பணி ஓய்வுபெறுகிற மாரியப்பன் இயக்கப் பணி களை இந்நிறுவனத்திற்குள் மிகச் சிறப்பாக செய்தவர். தீவிரமாக இயக்கப் பிரச்சாரங்களை தொழிலாளர்கள் மத்தியில் கொண்டு சென்றவர். தொழிலாளர்களுக்கு அடிப்படையில், பகுத்தறிவு சிந்தனையை உருவாக்க வேண்டும். இந்த பணியை செய்தவர்களில் மாரியப்பனும் ஒருவர். ‘பெல்' நிறுவனம் மாரியப்பனை வீட்டிற்கு அனுப் பினாலும், ஆனால் நாங்கள் அவரை இயக்க பணியாற்ற அழைத்து செல்ல வந்திருக்கிறோம்.

அவர் இவ்வளவு சிறப்பாக நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டு இயக்கப் பணிகளையும் தொடர்ச்சியாக செய்ததற்கு  அவரது வாழ்விணை யரும் காரணம். அவரது ஒத்துழைப்பு இல்லாமல் இப்பணியை செய்திருக்க இயலாது. எனவே அவர்களை நான் வாழ்த்துவதோடு, அவர் ஓய்வு பெற்றாலும் ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சினையில் அவர் தொடர்ந்து போராடுவார் என்று பேசினார்.

கலந்து கொண்டோர்

திமுக நகர செயலாளர் காயாம்பு, சி.பி.எம் புறநகர் மாவட்டக்குழு உறுப்பினர் பழனிச்சாமி, எல்.அய்.சி. ராஜேந்திரன், காட்டூர் காமராஜ், மாவட்ட மகளிரணித் தலைவர் ரெஜினா பால்ராஜ், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் அம்பிகா, விடுதலை கிருஷ்ணன், வி.சி.வில்வம், மண்டல மகளிரணி செயலாளர் கிரேசி, சிவானந்தம், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் தமிழ்ச்சுடர், ஆண்டிராஜ், சிங்கராஜ், கண்ணதாசன், பஞ்சலிங்கம், அசோக்குமார், அசோக்ராஜ், திலீபன், சுப்ரமணியன், சுரேஷ் உள்ளிட்ட கழக பொறுப் பாளர்கள் தோழர்கள் மற்று ‘பெல்' ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக சுதர்சன் வரவேற்புரையாற்றினார். நிறைவாக செ.பா.செல்வம் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியினை ‘பெல்' திராவிடர் தொழி லாளர் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.

- விடுதலை நாளேடு 20 2 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக