தமிழ்நாட்டிலும் கொண்டு வரப்பட வேண்டும்
கருநாடகத்திலும், மகாராட் டிரத்திலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்ததுபோல, தமிழ்நாட்டிலும் கொண்டு வரப்பட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலை வர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கேரளாவில் முதல் அமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் தலைமையில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சி ஆட்சி நடை பெற்று வருகிறது.
முற்போக்குச் சிந்தனையுடன் பல்வேறு திட்டங்களையும், சட்டங்களையும் நிறை வேற்றி இந்தியாவுக்கே வழிகாட்டும் வகை யில் கேரளாவில் ஆட்சி நடைபெற்று வருகிறது.
சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குப் பெண்கள் வழிபடச் செல்லலாம் என்பது முதல் இப்பொழுது இன்னொரு முக்கிய சட்டம் செயல்பட இருக்கிறது.
மூடநம்பிக்கைக்கு எதிரான சட்டம்தான் அது; இதற்கான சட்ட முன் வரைவை உருவாக்க கேரள அரசின் சட்டத்துறை வல்லுநர்களின் ஆலோசனையின் பேரில் அதற்கான குழு ஒன்று அமைக்கப் பட்டுள்ளது.
இந்த வல்லுநர் குழுவின் அறிக்கை உள்துறையிடம் வழங்கப்பட்டு, விரைவில் சட்டமாக நிறைவேற்றப்பட இருக்கிறது என்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒன் றாகும்!
ஏற்கெனவே கருநாடக மாநிலத்திலும், மகாராட்டிர மாநிலத்திலும் இந்த வகையில் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
2017 அக்டோபரில் கருநாடகத்தில் சித்தராமையா முதல்வராக இருந்தபோது - உருவாக்கப்பட்ட சட்ட வடிவம் இப் பொழுது எடியூரப்பா முதல் அமைச்சராக இருக்கும் இந்தக் காலக் கட்டத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டது.
2013 டிசம்பரில் மகாராட்டிரத்தில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் முதல் அமைச்சராக பிருத்விராஜ் சவுகான் இருந்த போது இத்தகைய சட்டம் நிறைவேற் றப்பட்டது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 51ஏ(எச்) என்ற பிரிவு என்ன சொல்லு கிறது? மக்களிடத்தில் விஞ்ஞான மனப் பான்மையையும், சீர்திருத்த உணர்வையும் ஏற்படுத்த வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் - அடிப்படைக் கடமை என்று கூறப்பட்டுள்ளது.
அதனையொட்டித்தான் இந்த மூன்று மாநிலங்களும் சட்டங்களை இயற்றி யுள்ளன.
முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் தமது ஆட்சிக் காலத்தில் "சமூக சீர்திருத்தக் குழு" ஒன்றை அமைத்ததுண்டு.அதனுடைய விரிவாக்கமாக தமிழ்நாட்டிலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வர வேண்டியது மிகவும் அவசியமாகும்.
கி. வீரமணி,
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
17.2.2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக