மானத்தையும், வெட்கத்தையும் பாஞ்சாலியாக்கிய பார்ப்பன தினமலர் ஏடு திமிர் எடுத்துத் திரிவதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
திராவிடர் கழகத் தலைவர் சொன்னதில் தவறான தகவல் இருந்தால் தினமலர் சிண்டு விறைத்துக் கொண்டு கிளம்பலாம்.
69 சதவீதத்துக்கு ஆபத்து வந்தபோது - அதனைக் காப்பாற்றிட அதற்கான மசோதாவையே தயாரித்து கொடுத்தவர் வீரமணி என்பது உலகறிந்த ஒன்றே.
இது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி சட்டப் பேரவையில் அம்மசோதாவை நிறைவேற்றுமாறு வழிகாட்டும் வேண்டுகோளை வைத்தவரும் மானமிகு கி. வீரமணி தான்.
அதனை அப்படியே ஏற்றுக் கொண்டு முதல் அமைச்சர் ஜெயலலிதா செயல்பட்டதால்தான் 69 சதவீத இடஒதுக்கீடு காப்பாற்றப்பட்டது என்ற வரலாறு எல்லாம் தினமலர் என்னும் வருணாசிரம விரியன் குட்டிக்குத் தெரியுமா?
சொன்னாலும் சொல்லாவிட்டாலும் 69 சதவீத இடஒதுக் கீடுக்கான சட்டம் நிறைவேற்றப்பட்டபோது தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா, பிரதமர் பி.வி. நரசிம்மராவ், குடியரசு தலைவர் சங்கர் தயாள் சர்மா ஆகிய மூன்று பேரும் பார்ப்பனர்களே - இதில் எது பொய்யென்று எழுதுகிறது. தினமலர் என்னும்
...... காட்டிப் பரம்பரை
யார் இந்த சங்கர் தயாள் சர்மா?
Although the quota system might have taken away posts from Brahmin, No one could take away Brahmin's Brain (Indian Express 25.9.1994) இடஒதுக்கீடு மூலம் இடங்களைப் பறிக்கலாமே தவிர பிராமணர்களின் மூளையைப் பறித்துவிட முடியாது என்று சொன்னவர்தான். இத்தகையவர்கள் எல்லாம் ஒப்புக் கொள்ள வைக்கப்பட்டது சாதாரணமா?
இவர்களுக்குத் தாராள எண்ணம் உண்டா?
முதல் சட்டத் திருத்தம் தந்தை பெரியார் முயற்சியால் வந்தது என்றால் 76ஆவது சட்டத் திருத்தம் திராவிடர் கழகத் தலைவரால் வந்தது என்பது தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றுக் கல் வெட்டாகும்.
50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு செல்லக் கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு இருந்தும் தமிழ்நாட்டில் 69 சதவீதம் சட்டப் பாதுகாப்போடு (அதாவது ஒன்பதாவது அட்டவணை பாதுகாப் போடு) இருக்கிறதே - இதற்கு இந்தக் கருப்புச் சட்டை வீரமணி தானே காரணம் என்ற வயிற்றெரிச்சலில் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு புலம்புவதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
ஜெயலலிதா இருந்திருந்தால் வீரமணியின் தோலை உரித் திருப்பார் என்று எழுதுகிற அளவுக்கு ஆரியக் கும்பலுக்குத் தைரியம் வந்தது எப்படி? ஆட்சி அதிகார பலத்தால் சிண்டு புடைத்து நிற்கிறதா?
87 ஆண்டில் 77 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கு சொந்தக் காரரான மூத்த தலைவரை, தந்தை பெரியாரால் அடையாளம் காட்டப்பட்ட தலைவரை, மரியாதைக் குறைவாக தினமலர் அவுட்டுத்திரி கும்பல் எழுதுமானால் மரியாதை கெட்டு விடும் என்று எச்சரிக்கிறோம்.
- விடுதலை நாளேடு 6 12 19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக