மாணவர்கள்மீது தடியடி: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
புதுடில்லி,டிச.16 குடியுரிமை சட்டத் திருத்தத் துக்கு எதிராக டில்லியில் நடைபெற்ற போராட்டத்தில் 3 பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி பல்கலைக்கழகத்தில் புகுந்து மாணவர்களைத் தாக்கினர். கல்லூரி நூலகத்தையும் மோசமாகத் தாக்கிச் சிதைத்தனர். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களில் போராட்டம் வெடித்துள்ளது.
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடு முழுக்க பல்வேறு இடங்களில் போராட் டம் தொடர்ந்து நடந்து வருகிறது. டில்லியில் நடக்கும் போராட்டம் பேருரு எடுத்துள்ளது. டில்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தை காவல்துறையினர் தொடர்ந்து தடுத்து நிறுத்தி வருகின்றனர்.போராட்டத்தில் ஈடு பட்ட மாணவர்களைக் கலைந்து செல்ல காவல்துறையினர் கண்ணீர்ப் புகை குண்டு களை வீசி தடியடி நடத்தினர். காவல்துறையினரின் தடியடியையும் மீறி மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் இன்று ஜந்தர் மந்தரை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். மாணவர்களின் இப்போராட்டத்தில் பொது மக்களும் பெரும் எண்ணிக்கையில் திரண் டனர். இதையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்புகை குண்டுகளை காவல் துறையினர் வீசி தடியடி நடத்தினர். இந் நிலையில் திடீரென பேருந்துகளுக்குத் தீ வைக்கப்பட்டது. இதில் 3 பேருந்துகள் தீக்கிரையாகின.
இருப்பினும் பேருந்துகளுக்கு தீ வைக்கப் பட்ட சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் எதுவும் செய்ய வில்லை. எங்கள் போராட்டத்தை திசை திருப்ப காவல்துறையினர் இப்படி பொய்ப் புகார் அளிக்கிறார்கள் என ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இன்னொரு பக்கம் டில்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி உள்ளனர். லத்திகளை கொண்டு அங்கிருந்த மாண வர்களை மோசமாக தாக்கியுள்ளனர். மாண விகள் பலரும் இந்த தாக்குதலில் மோசமாக காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதில் சில மாணவிகள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் காவல் துறையினர் தாக்குதல் நடத்தினார்கள். அங்கு இருக்கும் வகுப்பறைகள், நூலகம் ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் புகுந்து ரப்பர் குண்டுகளால் சுட்டும் அடித்தும் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
ஜவகர்லால் நேரு, அலிகார், அய்தராபாத் மற்றும் நாடு முழுவதிலுமுள்ள பல்கலைக் கழகங்களில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.
ஜாமியா மிலியா பல்கலைக் கழக கலவரத்தை தொடங்கி தற்போது உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் பல்கலைக்கழகத் திலும் தீவிர போராட்டம் நடந்து வருகிறது. அங்கு மாணவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்த காவல்துறையினர் அங்கிருந்த மாணவர்களைஅடித்து உதைத்து, லத்தி மூலம் காயப்படுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து டில்லி, அய்தராபாத் உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள பல்கலைக்கழக மாண வர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
மு.க.ஸ்டாலின் கண்டனம்
டில்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின், மாணவர்கள் சிந்திய ஒவ் வொரு சொட்டு ரத்தத்திற்கும் பாஜக பதில் சொல்லியாக வேண்டும் என்று குறிப் பிட்டு இருக் கிறார்.
குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் திமுக போராட்டம் நடத்தியது. இந்த நிலையில் டில்லியில் நடந்த போராட்டம் தொடர்பாக தளபதி மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் மோசமாக தாக்கப்பட்டது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இங்கு மாணவர்கள் சிந்திய ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் வரும் காலங்களில் பாஜக பதில் சொல்லியாக வேண்டும். குடி யுரிமை சட்ட திருத்தத்தை பாஜக மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதற்கு நிறைய எதிர்ப்பு நிலவி வருகிறது, இதற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நிகழ்ந்து வருகிறது, என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட் டுள்ளார். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக தலைவர் ஸ்டாலின் காட்சிப் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். குடி யுரிமைச் சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்? என்ற தலைப்பில் இந்த காட்சிப் பதிவு யூ டியூபில் வெளியாகி உள்ளது. அதில் இந்த சட்டம் எவ்வளவு கொடுமையானது என்று திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் விளக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக