உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்திக்கு இடமில்லை
தமிழக அரசு நடவடிக்கை
சென்னை, டிச.8 ""உலகத் தமிழா ராய்ச்சி நிறுவனத்தில் 'இந்தி'யா? கிளர்ச்சி வெடிக்கும்"" என தமிழர் தலைவர் எச்சரிக்கையைத் தொடர்ந்து, தமிழக அரசு இந்தித் திணிப்பைக் கைவிட்டுள்ளது.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் போராட்ட எச்சரிக்கையை அடுத்து உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்பிக்கப்படாது என்று அமைச்சர் மாபா. பாண்டியராஜன் அறிவித்து பின்வாங்கியுள்ளார்.
சென்னையிலிருந்து செயல்படும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்பில், பிஎச்டி மாணவர்களுக்கு விருப்பப் பாடமாக இந்தி, பிரெஞ்சு மொழிகளைக் கற்பிக்கும் வகுப்பு களை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் கடந்த திங்கட்கிழமையன்று துவக்கி வைத்தார். இதற்கென ஆறு லட்ச ரூபாயை தமிழக அரசு சமீபத்தில் ஒதுக்கீடு செய்திருக்கிறது.
ஆனால், தமிழைப் பரப்புவ தற்காகவும் ஆராய்ச்சிப் படிப்பு களுக்காகவும் துவக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழி கற்பிக்கப்படுவது சரியல்ல சரியான செயல் அல்ல என்று திரா விடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் போராட்ட அறிக் கையை 5.12.2019 அன்று வெளியிட்டி ருந்தார். எதிர்க்கட்சியான தி.மு.கவும் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.
இது தொடர்பாக விளக்கமளித்த தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாபா. பாண்டியராஜன், மாணவர்க ளுக்குக் கூடுதலாக வேலை வாய்ப்பை ஏற்படுத்தித்தரும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் இந்தியைப் பயில்வது கட்டாயமல்ல என்றும் தெரிவித்தார்.
இதற்குப் பிறகும் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதிக் கப்பட்டது. மேலும் உலகத் தமிழா ராய்ச்சி நிறுவனத்தின் முன்பாக ஆர்ப் பாட்டங்களும் நடத்தப்பட்டன.
இந்த நிலையில், உலகத் தமிழா ராய்ச்சி நிறுவனத்தில் இந்தியை விருப்பப்பாடமாக கற்பிக்கும் முயற் சிகள் கைவிடப்படுவதாகத் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
"இந்த விவகாரம் அரசியலாக்கப் படுவதால் இந்த முடிவை எடுத்தி ருக்கிறோம். இந்திக்குப் பதிலாகத் தெலுங்கைக் கற்பிக்க முடிவு செய் திருக்கிறோம். ஏற்கெனவே முடிவு செய்தபடி பிரெஞ்ச் மொழியைக் கற்பிப்பது தொடரும். இந்தி கற்பிக்க ஒதுக்கப்பட்ட மூன்று லட்ச ரூபாய் தெலுங்கு மொழி கற்பிக்க ஒதுக்கீடு செய்யப்படும்" என கூறினார் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர்.
மாணவர்கள் கேட்டதால்தான் இந்தி கற்பிக்க முடிவுசெய்தோம். ஆனால், தி.மு.க. இதைத் தேவையில்லாமல் சர்ச்சையாக்கிவிட்டது என்கிறார் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் கோ. விஜய ராகவன். "120 மாணவர்களின் சாபம் தி.மு.கவை சும்மா விடாது" என்கிறார் அவர்.
தங்கம் தென்னரசு
கடும் கண்டனம்!
முன்னதாக இந்த விவகாரம் குறித்து தி.மு.கவைச் சேர்ந்த முன் னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச் சர் தங்கம் தென்னரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த முடிவு குறித்து அவரிடம் கேட்டபோது, "இது தி.மு.க. தலைவருக்குக் கிடைத்த வெற்றி. அரசின் இந்த முடிவை தி.மு.க. வரவேற்கிறது. ஆளுங்கட்சி செய்யும் தவறுகளை எதிர்க்கட்சி சுட் டிக்காட்டி அரசியல் செய்வதால்தான், அவை மாற்றப்படுகின்றன. ஆகவே இம்மாதிரி விவகாரங்களில் அரசியல் செய்வதில் தவறில்லை" என்று தெரிவித்தார்.
சென்னை தரமணியில் செயல் படும் உலகத் தமிழாராய்ச்சி நிறு வனம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழறிஞரான தவத்திரு தனிநாயகம் அடிகளின் முயற்சியால், அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த போது அறிவிக்கப்பட்டு, 1970இல் இருந்து செயல்படத் துவங்கியது.
- விடுதலை நாளேடு 8 11 19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக