பினாங்கு துணை முதல்வர் ராமசாமி
தமிழ், தமிழர்களின் வர லாறு குறித்தெல்லாம் ஏதும் தெரிந்து கொள்ளாத நடிகர் ரஜினிகாந்த் தேவையற்ற விஷ யங்களைப் பேசி தன்னைத் தானே அசிங்கப்படுத்திக் கொள் வதாக மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசி ரியர் ராமசாமி தெரிவித்து உள்ளார்.
பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்துள்ளார் பேராசிரியர் ராமசாமி.
அண்மையில் துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவில் ரஜினி தெரிவித்த சில கருத்துகளுக்காக அவரை குற்றவாளி எனச் சாட இயலாது என்றபோதிலும், தமிழர்களின் கலாச் சாரம், வழக்கம் மற்றும் மரபுகள் ஆகியவற்றைத் தொடும் விஷயங்கள் தொடர்பாக கருத்து தெரிவிப்பதை அவர் தவிர்ப்பது நல்லது என்றார் ராமசாமி.
கேள்வி: பல ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு சம்பவம் தொடர்பான ஊடகச் செய்தியை எடுத்துச் சொல்லி ரஜினி தன் கருத்தைச் சொல்ல முற்பட்டது தவறா?
பதில்: கருத்து தெரிவிக்க எல்லோருக்கும் உரிமை உண்டு. ராமர் சிலை மீது காலணிகள் வீசப்பட்டதாகக் கூறு கிறார் ரஜினி. அதே காலகட்டத்தில் பெரியார் மீதும் எத்த னையோ தாக்குதல்கள் நடந்துள்ளன. அதை மறுக்க இய லுமா? அது குறித்து ரஜினிகாந்த் ஏன் பேசவில்லை? புனி தங்களை சுட்டுப் பொசுக்கியவர் தமிழன் உருப்பட வேண்டும், சாதிகள் ஒழிய வேண்டும், பிராமண ஆதிக்கம் முடிவுக்கு வர வேண்டும் என்பதற்காகப் பாடுபட்டவர் பெரியார் என்பதுதான் வரலாறு. ரஜினி ஏன் அதைப் பற்றிப் பேசவில்லை? மக்களுக்காக பெரியார் எவ்வளவோ போராட்டங்களை நடத்தினார். ரஜினி அதுபோன்று தொடர்ந்து போராடியுள்ளாரா?
கேள்வி: ரஜினி மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தப்படுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: அதற்கு அவசியம் இல்லை என்பதே என் கருத்து. அண்மைய நிகழ்வில் அவர் பெரியார் குறித்துப் பேசிவிட்ட தால் அவரைக் குற்றவாளி என்று சொல்வதற் கில்லை. அதேசமயம் தமிழர்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை ரஜினி புரிந்து, தெரிந்து கொண்டு செயல்பட்டால் நன்றாக இருக்கும்.
திராவிட வரலாறு குறித்தெல்லாம் ஏதும் தெரிந்து கொள் ளாமல் தேவையற்ற விஷயங்களைப் பேசி ரஜினி தன்னைத் தானே அசிங்கப்படுத்திக் கொள்கிறார்.
தந்தை பெரியாரின் கொள்கைகள் சிலவற்றை இப் போதும் கூட நான் ஏற்பதில்லை. அதேசமயம் மூட நம்பிக் கைகளை ஒழிக்க வேண்டும், மக்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதே பெரியாரின் முதன்மை விருப்பமாக இருந்தது என்பதை மறுக்க இயலாது. அவர் பல உயர்ந்த நோக்கங்களைக் கொண்டிருந்தார்.
அவரது இந்த எண்ணத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே பேரணி, பொதுக்கூட்டம் உள்ளிட்ட சில ஏற்பாடுகளைச் செய்த னர். அந்த 1971ஆம் ஆண்டு நிகழ்வும் அப்படிப்பட்ட ஒன்றுதான்.
கேள்வி: சில விவகாரங்கள் தொடர்பாக ரஜினி அவ் வப்போது தெரிவிக்கும் கருத்துக்கள் சர்ச்சையாகின்றன. அதற்காக கருத்தே சொல்லாமல் மௌனம் காக்க வேண்டும் என்பது சரியா?
பதில்: யாரும் அப்படிச் சொல்லவில்லை. ரஜினி அடிப் படையில் ஒரு நடிகர். ஏற்கெனவே அவர் தெரிவித்த சில கருத்துகள் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. சில கருத்துகளால் சர்ச்சை ஏற்பட்டது.
தொழில்முறை நடிகரான அவர் ஒன்று தன் தொழிலில் கவனம் செலுத்த வேண்டும் அல்லது முழு நேர அரசியலுக்கு வர வேண்டும். ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்றிருக்கக் கூடாது. அரசியலுக்கு வருவதும் வராததும் அவரது விருப்பம்.
கேள்வி: ரஜினியை எதிர்ப்பதற்கு என்ன காரணம்?
பதில்: ரஜினி திரையுலகில் நல்ல நடிகர். பல வெற்றி களைக் கண்டவர். அவர் அதே துறையில் நீடிப்பது நல் லது. மாறாக எதுகுறித்தும் விரிவாக தெரிந்து கொள்ளாமல் பேசக்கூடாது என்றுதான் சொல்கிறேன்.
முதலில் ஆன்மீக அரசியல் குறித்துப் பேசியவர், அதிலி ருந்து பின்வாங்கியதாகக் கூறப்பட்டது. பாஜக இந்தியாவில் பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நல்ல தலைவராக செயல்பட்டு வருகிறார்.
எனினும் அந்தக் கட்சி தமிழகத்தில் வலுவாகக் காலூன் றுவது அவ்வளவு சுலபம் அல்ல. அது மட்டுமல் லாமல் ரஜினியை நம்பி தமிழகத்தில் பாரதிய ஜனதா களமிறங்கினால் மிகப்பெரும் தோல்வியைச் சந்திக்கும்.
தமிழகத்தில் பாஜக வெற்றி பெற வேண்டுமானால் ஒரு தமிழரை நம்பிக் களமிறங்க வேண்டும். மாறாக ரஜினியை முன்னிறுத்துவது சரியல்ல.
ரஜினியைப் போன்றவர்களுக்கு பெரியார் போன்ற வர்களுடைய அருமை தெரியாது. திராவிடக் கட்சிகள் வேண்டுமானால் திசைமாறிப் போயிருக்கலாம். ஆனால் திராவிட சித்தாந்தம் என்பது தமிழர்களுக்கு நிச்சயம் தேவை.
அதிமுகவின் நிலைப்பாடு என்ன?
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
பெரியார் பற்றி ரஜினிகாந்த் கருத்து தெரிவித்தது குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறிய தாவது:-
தந்தை பெரியாரின் கருத்துகள் கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை. என்னைப் போன்றவர்கள் உயர்ந்த நிலையை அடைய தந்தை பெரியாரே காரணம். பெரியாரின் கருத்துகளை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு ரஜினிகாந்த் பேச வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்
சென்னை ராயபுரத்தில் 22.1.2020 அன்று காலை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் அமைச்சர் ஜெயக் குமார் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு அதிமுக தக்க நேரம் எதிர்பார்த்து கொண்டிருப்பதாக அமைச்சர் பாஸ்கரன் கூறியிருப்பது, அவரது சொந்த கருத்தாகும். நடைபெறாத ஒரு விஷயத்தை கூறி, மக் களை ஏன் ரஜினி திசைதிருப்ப பார்க்கிறார் என தெரிய வில்லை. அண்ணா, பெரியார், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய 4 தலைவர்களுக்கு எந்த இழுக்கு ஏற்பட்டாலும், நாங்கள் அதை கண்டித்து குரல் கொடுப்போம். ரஜினி பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ரஜினி விவகாரம் தற் போது நீதிமன்றம் வரை சென்றுள்ளது. நீதிமன்ற நடவடிக் கையை பொறுத்திருந்து பார்ப்போம். ரஜினியை கண்டு அதிமுக பயப்படாது’ என்றார்.
அமைச்சர் செல்லூர் ராஜூ
அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியா ளர்களை சந்தித்தபோது கூறியதாவது:
50 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவத்தை நடிகர் ரஜினி பேச வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பினார். ரஜினி மீது எங்களுக்கு எந்த வருத்த மும் இல்லை என்றும் தெரிவித்தார். 95 வயதிலும் ஜாதி மற்றும் தீண்டாமை ஒழிப்பிற்காக பாடுபட்டவர் தந்தை பெரியார் என்றார். மாபெரும் தலைவரின் போராட்டத்தை, பெருமையை சீர்குலைத்து பேசுவது தவறானது என்றும், எப்பொழுதும் பொறுமையாக பேசும் ரஜினியை யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள் என்றும் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டினார்.
இன்று பெண்கள் ஊராட்சித் தலைவர்களாக அமர்ந் திருக்கிறீர்கள் என்றால் அதற்கு காரணம் பெரியார். பெரியாரை பெண் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மறக்க கூடாது என்றும் தெரிவித்தார். ராஜீவ்காந்தியை கிராமத் தில் இருப்பவர்கள் மறக்க கூடாது. கிராம ராஜ்யம் கொண்டு வந்தவர் ராஜீவ்காந்தி தான். இந்த நாட்டுக்காக சேவையாற்றியவர்களில் கலைஞருக்கும் பங்கு உண்டு. அதை என்னால் மறுக்க முடியாது என தெரிவித்தார். மேலும், எது நடந்தாலும் உடனே வாட்ஸ் ஆப்பில் வந்துவிடுகிறது. எனவே ஊராட்சித் தலைவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
விருதுநகரில் நேற்று செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது
''குறிப்பிட்ட சமுதாயத்தை மட்டும் தாக்கி பிழைப்பு நடத்துகிறது தி.மு.க. ஆன்மிகவாதிகளைப் பழிதீர்க்கும் செயலை தி.க-வினர் தொடர்ந்து செய்து கொண்டிருக் கின்றனர்.
ரஜினிகாந்த் நியாயவாதி, நல்ல மனிதர். மனதில் பட்டதை பேசுபவர். ரஜினி பேசியதின் நியாயத்தை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். தி.மு.க-வின் முகமூடி தான் தி.க. தமிழச்சியைத் திருமணம் செய்த ஒரு மனிதனை அவமரியாதை செய்வது கண்டிக்கத்தக்கது. ரஜினி ரசிகர்கள் பொறுமை காப்பது சங்கடமாக உள்ளது. ரஜினியை மிரட்டிப் பார்க் கிறார்களா?
ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் என்ன பயங்கரவாதிகளா. அவர்கள் எங்கு குண்டு வைத்தார்கள்? மகாத்மா காந் தியைக் கொலை செய்தது ஒரு கொலைகாரன். அவன் ஆர்.எஸ்.எஸ் அல்ல. ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்திய வர்கள் தேசியவாதிகள்.
பெரியார் போன்றவர்கள் இல்லையென்றால் நான் அமைச்சராக இருக்க முடியாது. ஆனால், ஆன்மி கத்தைப் பொறுத்தவரை ரஜினி கூறியதில் தவறு இல்லை. ரஜினி ரசிகர்கள் பொறுமையாக உள்ளனர். நேர்மையாக வாழ்ப வர்கள் ஆன்மிகவாதிகளே'' என்று செய்தியாளர்களிடம் பேசினார்.
சிபிஅய் பொதுச்செயலாளர் டி.ராஜா
சிபிஅய் பொதுச்செயலாளர் து.ராஜா கூறுகையில், "பெண்கள் விடுதலைக்காகவும் சமூகநீதிக்கா கவும் போராடிய மாபெரும் பகுத் த றிவாளர் தலைவர் தந்தை பெரியார். எவர் ஒருவரும் இது போன்று அவர்குறித்து விமர்சிக் கக் கூடாது. ஒப்பற்ற தலைவர் குறித்து பேசும் போது மிகவும் எச்சரிக்கையாக பேச வேண்டும்" என்றார்.
முதல்வர் நாராயணசாமி
புதுவை முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பகுத்தறிவு ஆசானாக இருந்து மக்கள் மத்தியில் இருக்கும் மூட நம்பிக் கைகளை போக்க வாழ்நாள் முழுவதும் போராடியவர், தனிமனித உரிமைக்கும் தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் தந்தை பெரியார். நடிகர் ரஜினிகாந்த் விழா ஒன்றில் பேசும்போது பெரியார் பற்றி விமர்சனம் செய்துள்ளார். உண்மையாக அந்த சம்பவம் நடந்ததா? என ஆராய்ந்து பேசி இருக்க வேண்டும். சில தகவல்களை வைத்து தந்தை பெரியாரையும் திராவிடர் கழகத்தையும் பேசி இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. எந்தவிதமான முகாந்திரமும் இல்லாமல் பேசியிருப்பது வருத்தத்துக்குரியது. அவர் கருத்தை திரும்ப பெற்று இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த சர்ச் சையில் அவர் தலையிடாமல் இருப்பது நல்லது. இவ்வாறு நாராயண சாமி கூறினார்.
தி.மு.க. பொருளாளர் துரைமுருகன்
திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதா வது: பெரியார் மறைந்து பல ஆண்டுகள் கடந்தாலும் விவாதப் பொருளாக இன்றும் நிலைத்து நிற்கிறார் என்று நாமக்கலில் திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார். பெரியார் பற்றி ரஜினிகாந் துக்கு தலையும் தெரியாது, வாலும் தெரியாது என்பதால் அவர் பேசாமல் இருப்பது தான் நல்லது என அவர் தெரிவித்துள்ளார்.
நாஞ்சில் சம்பத்
நாஞ்சில் சம்பத் தனது சுட்டுரைப் பக்கத்தில் ரஜினியை கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்துள்ளார். அந்த பதிவில், அவுட்லுக் குன்னு சொல்றாரு..ஹிந்து குழுமம்னு சொல்றாரு..அது செரி நக்குற நாய்க்கு செக்கு எது சிவ லிங்கம் எதுன்னு தெரியவா போகுது! என குறிப்பிட்டுள்ளார்.
- விடுதலை நாளேடு 24 1 20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக