சனி, 1 பிப்ரவரி, 2020

தஞ்சை கோவில் குடமுழுக்கு மக்கள் மொழி தமிழையும், செத்த மொழி சமஸ்கிருதத்தையும் சம அளவில் பார்ப்பதா?

தமிழர் தலைவர் கண்டனம்

அரக்கோணம், ஜன.30  தஞ்சை கோவில் குட முழுக்கு பிரச்சினையில் மக்கள் மொழியையும், செத்த மொழி சமஸ்கிருதத்தையும் சம அளவில் பார்ப்பதா? என்று திராவிடர் கழகத் தலைவர் தமது கண்டனத்தை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தஞ்சை கோவில் குடமுழுக்கு தமிழில் நடத்துவது தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள சர்ச்சை குறித்து  அரக்கோணத்தில் நேற்று (30.1.2020) செய்தியாளர்களுக்கு  அவர் அளித்த பேட்டி வருமாறு:

தமிழ் மொழிக்கு

உரிய, உறுதியான நிலை வேண்டும்

தமிழனான ராஜராஜ சோழன் கட்டிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்று சொல்லும்பொழுது, மக்களுக்கு சம்பந்தமில்லாத மொழியான - தமிழை நீஷ பாஷை, மிலேச்ச பாஷை என்று சொல்லக்கூடிய, சமஸ்கிருதத் தையும் வைத்து ஒன்றாக குடமுழுக்கு நடத்துவோம் என்பது, எல்லா வகையிலும் தமிழகத்தில் இருக்கின்ற இந்த அரசு, இரட்டைக் குரல் - இரட்டை வேடம் - இரட்டை நாக்கு - இரட்டைப் போக்குடையது என்பதற்கு அடையாளம்; இது விரும்பத்தக்கதல்ல. கண்டனத்திற்குரியது. தமிழுக்குத்தான் முதல் இடம் கொடுக்கவேண்டும் என்பதற்கு உரிய, உறுதியான நிலையை தமிழக அரசு எடுக்கவேண்டும்.

ஏனென்றால், இது தமிழ்நாடு, தமிழ் செம்மொழி, தமிழ் மக்கள் மொழி. அதேநேரத்தில், சமஸ்கிருதம் மக்கள் மொழியல்ல.

எனவேதான், நீஷ பாஷை என்று சொல்வதும் - தேவ பாஷை என்பதும், இரண்டையும் ஒன்றாக வைத்து ஒரே தகுதி உள்ளவை என்று சொல்வதும் இரட்டைப் போக்கு என்பதற்கு அடையாளமாகும்.

விலை கொடுத்தே தீரவேண்டும்!

செய்தியாளர்: டி.என்.பி.எஸ்.இ. குருப் 4 தேர்வு முறைகேட்டில் பல அதிகாரிகள் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்;  அதுபோல, அரசு  துறைகளில் நடைபெறக்கூடிய எல்லா தேர்வுகளிலும் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என்ற ஓர் அச்சம் மக்களிடையே ஏற்பட்டு இருக்கிறதே, அதுபற்றி உங்கள் கருத்து?

தமிழர் தலைவர்: அச்சமல்ல. எப்பொழுது எழுதியவுடன் அழியும் பேனாவை கண்டுபிடித்தார்களோ, அப்பொழுதே இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு இருக் கிறது. இதற்கான விலையை சம்பந்தப்பட்டவர்கள் கொடுத்தே ஆகவேண்டும் என்பதுதான் தீர்வாகும்.

- இவ்வாறு செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தெரிவித்தார்.

- விடுதலை நாளேடு 30 0120

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக