டில்லியில் வன்முறை: காவல்துறையினர் கண்முன்னே தாக்குதல்...
வீடுகளுக்கு தீவைப்பு... வைரலாகும் பத்திரிகையாளரின் வாக்குமூலம்!
புதுடில்லி, பிப்.27 வடகிழக்கு டில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு என்ற பெயரில் ஒரு கும்பல் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட தில் 35உயிர்கள் பறிபோய் இருக்கின்றன. 200 க்கும் அதிகமானோர் படுகாய மடைந்துள்ளனர். வடகிழக்கு டில்லியே பெரும் போர்க்களமாகியுள்ளது.
டில்லியில் நடந்து வரும் வன்முறையில் சிக்கி இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 250 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் டில்லி முதலமைச்சர் அர விந்த் கெஜ்ரிவால், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டில்லியில் நடைபெற்ற போராட்டங் களில் வன்முறை வெடித்தது. வடகிழக்கு டில்லியின் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், சந்த்பாக் என பல்வேறு பகுதி களிலும் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
நேற்றுவரை நடந்த மோதல்களில் கடைகள், கார்கள் என தங்கள் கண்ணில் பட்டவற்றையெல்லாம் வன்முறையாளர் கள் தீ வைத்துக் கொளுத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்சுகளும் மருத் துவமனைகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த வன்முறை சம்பவங்களில் தலைமைக் காவலர் ரத்தன் லால் உள்பட 35 பேர் உயிரிழந்தனர். சுமார் 250 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டில்லியில் வன்முறை கட்டுக்குள் வந்துள்ள அதேசமயம், அண்டை மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் நொய்டா மற்றும் காசியாபாத் பகுதி களில் வன்முறை ஏற்படலாம் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் ரோந்து சுற்றி வரு கின்றனர்.
பத்திரிகையாளர்மீது தாக்குதல்
பத்திரிகையாளர்களின் கேமராக் களைப் பறித்து பதிவு செய்யப்பட்ட காட்சிகளை வன்முறை கும்பல் அழித் திருக்கிறது. டில்லி வன்முறை கும்பலிடம் சிக்கிய ‘டைம்ஸ் ஆப் இந்தியா'வின் செய்தியாளர் தமக்கு நேர்ந்த கொடூ ரத்தை பகிரங்கப்படுத்தியுள்ளார். அவ ரது இந்த வாக்குமூலம் சமூக வலைதளங் களில் வைரலாக பரவி வருகிறது.
வன்முறைக் கலவரம் குறித்து அவர் கூறியுள்ள தகவல்கள் வருமாறு:
‘‘போராட்டக்காரர்களிடையே மோதல் முற்றி விட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு ஆயுதங்களுடன் அதிரடிப் படையினர் வந்தடைந்தனர். அப்போது நிலைமை மோசமடைந்து விட்டதை அடுத்து, அந்தப் பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு அவசரத் தகவல்கள் அனுப்பி பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டது.
கலவரம் நடந்த அன்று நண்பகல் 12 மணி வரையிலான நேரத்தில் மஜ்பூர், பாபர்பூர், கபீர்நகர், மேற்கு ஜோதி நகர், கோகுல்பூரி ஆகிய இடங்களில், ஆயுதங் களுடன் வந்த இளைஞர்கள் தாக்குதலில் ஈடுபடத் தொடங்கினர்.
இது குறித்து அங்குள்ள கோயில் பூசாரி தெரிவிக்கையில், ‘‘இரவு முழுவதும் நாங்கள் தூங்கவே இல்லை. இனி இது போன்று தவறு நடக்க விடமாட்டோம். எங்களை பாதுகாத்துக் கொள்ள நாங்கள் தயாராகி விட்டோம்'' என்றார்.
வன்முறை: பா.ஜ.க. எம்.எல்.ஏ. பாராட்டு
சஜ்ஜபூர்- -காபிர் நகர் சாலையில், காவல்துறையினர் பார்த்துக் கொண்டி ருக் கும் போதே ஆயுதங்களுடன் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள், அந்தப் பகுதியில் தாக்குதல் நடத்தினர். இவர்கள் அந்தப் பகுதியை விட்டு வெளியே வந்த வுடன், பாபாபூர் சட்டமன்ற உறுப்பினர் கோபால் ராய் அவர்களை சந்தித்து பாராட்டியுள்ளார். முற்பகலில் வந்த இளைஞர் குழுவினர் அங்கிருந்த கடை களின் போர்டுகளை இரும்புக் கம்பி களைக் கொண்டு அடித்து நொறுக்கி விட்டுச் சென்றுள்ளனர்.
மஜ்பூர் சவுக்கில் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இஸ்லாமிய இளைஞர்களை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியது. இதைத் தொடர்ந்து வன்முறை நடந்த மத்திய மற்றும் வடகிழக்கு டில்லி பகுதிகளில் மார்ச் மாதம் 24- ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய காவல் துறையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தாக்குதல்கள் நடந்தேறியுள்ளன. பாது காப்பு பணியில் இருந்த காவல்துறையினர் வெறுமனே பார்த்துக் கொண்டி ருந்தனர். இந்நிலையில், அந்த இளை ஞர்கள் தாக்கப்பட்டதுடன், அவர்களி டம் இருந்த கைப்பேசிகள், அடித்து நொறுக்கப்பட்டன.
பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மெட்ரோ ரயில் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தாக்குதலுக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கலவரப் பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற நான்கு பத்திரிகையாளர்களை தடுத்து நிறுத்திய கும்பல் ஒன்று, அவர்கள் அடையாள அட்டையை காட்டிய பின்னர், அவர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தெரிந்து கொண்ட பின்னர் அவர்கள் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். மூன்று மணி வரை நடந்த சம்பவங்களை படம் பிடித்த தனியார் ஊடகப் பத்திரிகையாளர் இரண்டு பேர் தாக்கப்பட்டனர். மற் றொரு இடத்தில் பத்திரிகையாளர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
மஜ்பூர் சவுக்கில், கவுரி சங்கர் என்பவர், முகமூடி அணிந்த அய்ந்து பேரிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டது அங்கிருந்த மளிகைக் கடைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த கேமராவில் பதி வாகியுள்ளது. மஜ்பூர் சவுக்கில் கூட்டம் மேலும் அதிகரித்ததால், காவல்துறையினர் மூன்று கண்ணீர்ப்புகை குண்டு களை வீசினர். இதையடுத்து அங்கிருந்த கூட்டம் பின்நோக்கி ஓடியது. இந்த நிலையில் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று கையில் கையெறி குண்டுகளை வைத் திருந்ததைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. இவர்கள் கண்ணாடி பாட்டில் களில் பெட்ரோல் ஊற்றி கையில் எடுத் துச் சென்றதும் தெரிய வந்துள்ளது. அவர்கள் தங்கள் கையில் இருந்த பாட் டிலை தூக்கி காற்றில் வீசினர். இது பறந்து சென்று ஒரு வீட்டின் மீது மோதி தீ பற்றியது.
முஸ்லிம் அடையாளப் பெயர்ப் பலகைகள் அகற்றப்பட்டன
காவல்துறையினர் இல்லாததால், தீ வைத்த கும்பல் எளிதாக அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. பழுதுபார்க்கும் கடையிலிருந்து வாகனங்களை வெளியே இழுத்து போட்ட அந்த கும்பல், அந்த வாகனங்களையும் தீ வைத்து எரித்தனர். இதையடுத்து, முஸ்லீம் உரிமையாளர் களின் பெயர்களைக் கொண்ட அடை யாள விளம்பரப் பலகைகள், முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியி லிருந்து அகற்றப்பட்டன.
பெட்ரோல் பங்க்குடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் கோகுல்பூரி டயர் சந்தைக்கு வெளியே, நிறைய வாகனங்கள் தீப்பிடித்தன. இறுதியாக, சந்தைக்கு வெளியே எரிந்து கொண்டிருந்த தீப் பிழம்புகள் தணிந்தன. சில மீட்டர் தூரத்தில், பெரிய வன்முறைக் கும்பல் சுதந்திரமாக சுற்றி வருவதையும், குறிப் பிட்ட சொத்துக்களை குறிவைத்து தாக்குவதையும் காவல்துறையினர் பார்த்துக் கொண்டே இருந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறை அதிகாரிகள், எரிந்து கொண்டிருந்த தீ யை அணைத்தனர். இருந்தபோதும் உருகிய டயர்கள் மற்றும் உடைந்த கண்ணாடி துண்டுகள் போன்றவை சாலை முழுவதும் சிதறிக் கிடந்தன.''
- இவ்வாறு ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஏட்டின் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
- விடுதலை நாளேடு 27.2.20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக