அன்று 1971இல் சேலம் நிகழ்ச்சிகளை வெளியிட்ட துக்ளக்கை பறிமுதல் செய்ததன் மூலம் முதல் அமைச்சர் கலைஞர் 'துக்ளக்'கின் "சேல்ஸ் மேனேஜர்" ஆனார். (சோ கூறியதுதான்) இப்பொழுது ரஜினி விஷயத்தைப் பெரிதாக்கி யதன் மூலம் துக்ளக்குக்கு விற்பனை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக திருவாளர் குருமூர்த்தி அய்யர் புளகாங்கிதம் அடைந்துள்ளார்.
திராவிடர் கழகத்துக்கும், திராவிடர் கழகத் தலைவருக்கும் பதில் கூறுவதாக நினைத்துக் கொண்டு 'துக்ளக்' பெரும்பாலான பக்கங்களை ஒதுக்கியுள்ளது.
அவர்கள் பாணியில் சொல்ல வேண்டுமென்றால் 50 ஆண்டுகளுக்கு முன் சேலத்தில் - ராமனுக்கு செருப்படி விழுந்ததை புதிய தலைமுறையினருக்கு நினைவூட்டி உற்சாகப்படுத்தியுள்ள துக்ளக்குக்கு "நன்றி" கூறுகிறோம்.
ஓ., ஓ., இராமனுக்கு செருப்படி விழுந்ததா? - இராமனின் அம்பறாத் தூளியில் இருந்த அம்புகள் எல்லாம் சுத்த கப்சாதானா என்று இத்தலைமுறை இளைஞர்களும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பினை துக்ளக் ஏற்படுத்தி விட்டது. பார்ப்பானுக்கு எப்பொழு துமே முன் புத்தி கிடையாது என்று தந்தை பெரியார் மிகச் சரியாகத்தான் கூறியிருக்கிறார். (எப்பொழுதுமே அவர் கணிப்பு மிகத் துல்லியமாகத்தானிருக்கும்)
வரிந்து வரிந்து எழுதும் துக்ளக் ரஜினி சொன்ன ஒன்றை மூடி மறைப்பானேன்?
ராமன் - சீதா படங்களை நிர்வாணமாக எடுத்துச் சென்றார்கள் என்று சொல்லுவதன் உள்நோக்கம் என்ன? ஒரு பெண் என்றும் பாராமல் இப்படி ஊர்வலமாக எடுத்துச் சென்றிருக்கிறார்களே தி.க.வினர் என்ற கெட்ட எண்ணத்தை உருவாக்குவது தானே இதன் நோக்கம்.
குருமூர்த்தி அய்யர்வாளிலிருந்து திருவாளர் நாராயணன் (மாலன்) வரை இந்த இடத்தில் நரிப் புத்தியோடு நடந்து கொள்வானேன்?
சீதை மீது சந்தேகப்பட்டு தீக்குளிக்கச் சொன்ன ராமனின் ஆண் ஆதிக்கத் திமிரை அம்பலப்படுத்தியவர் பெரியார்.
இராமனை செருப்பால் அடிப்பது என்பது ஒரு சாதாரண செயல். அப்படி அடித்ததை ஒப்புக் கொள்ள வீரமணி தயங்குகிறார். நாங்கள் ராமனை செருப்பால் அடித்தால் என்ன தவறு என்று அல்லவா கேட்க வேண்டும் என்று ரொம்பவும் தான் 'துக்ளக்' ஆயாசப்படுகிறது.
அதன் ஆசை வீரமணி ராமனை செருப்பாலடிக்க வேண்டும் என்பதோ!
எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. எதைச் செய்வதாக இருந்தாலும் அதனை முன்கூட்டியே அறிவித்து விட்டுத்தான் செய்வோம்.
சேலம் ஊர்வலத்தில் ராமனை செருப்பாலடிப்பது என்பது எங்கள் திட்டத்தில் இல்லாத ஒன்று - ஜன சங்கத்தாரால் இன்றைய பிஜேபி., சங் பரிவாரின் பாட்டனால் வீசப்பட்ட செருப்பின் எதிர் வினைதான் அது - அதனை மூடி மறைப்பானேன்?
நாங்கள் திட்டமிடாத ஒன்றை அபாண்டமாக கூறுவது தவறு என்பதுதான் எங்கள் நிலைப்பாடே தவிர பின் வாங்கும் பேச்சுக்கே பெரியார் அகராதியில் இடமில்லை.
ஒரு பெரிய ஊர்வலத்தில் அதற்கு எதிர்ப்பாகக் கருப்புக் கொடி காட்டுவதற்கு பொதுவாக எந்த அரசும் அனுமதி கொடுப்பதில்லை.
முதல் அமைச்சர் கலைஞர் அவர்களின் பெருந்தன் மையினால் எதிர்ப்பாளர்களுக்கும் அந்த உரிமை உண்டு என்ற ஜனநாயகப் முறைப்படி அனுமதி கொடுத்தார்.
ஆனால் அந்த மரியாதையை அவர்கள் காப்பாற்றிக் கொண்டார்களா?
அந்தக் கயமைத்தனத்தைக் கண்டித்து ஒரு வரி எழுத யோக்கிய பொறுப்பு இல்லாத 'துக்ளக்' கூட்டம் எதிர்வினையாக ராமன் படத்தின் மீது தொண்டர்கள் செருப்பாலடித்ததைப் பற்றி மட்டும் பெரிதுபடுத்து வானேன்?
'மனுநீதி ஒரு குலத்துக்கொரு நீதி' என்ற புத்தி அவர்களின் குருதியில் எப்பொழுதுமே குடி கொண்ட ஒன்றுதானே!
ஆச்சாரியார் (ராஜாஜி) முதல் அமைச்சராயிருந்த போது பிள்ளையார் உடைப்புப் போராட்டம் என்று முன்கூட்டியே அறிவித்து குறிப்பிட்ட நாளிலே அதனை நடத்திக் காட்டியவர்கள் கருஞ்சட்டையினர் என்பது நினைவில் இருக்கட்டும்!
விக்னேஸ்வரர் - துயரம் இல்லாமலே காப்பாற்றக் கூடிய கடவுள் என்று 'பீலா' விடுகிறார்களே, கருஞ்சட் டையினரால் அந்த விக்னேஷ்வரன் உடைத்து நொறுக்கப்பட்ட போது என்ன நடந்து விட்டது?
அது கூடப் பரவாயில்லை, காஞ்சீபுரத்தில் மச்சேஸ்வரர் கோயிலில் - தேவநாதன் என்ற குருக்கள் பார்ப்பான் கருவறையை கரு உண்டாக்கும் அறையாக மாற்றி காமக் களியாட்டம் நடத்தினானே, அதனை செல்போனில் படமாக எடுத்தும் உலாவ விட்டானே அந்த மச்சேஸ்வரன் என்ன செய்து கிழித்தான்?
ஓ, தேவநாதனாகிய இந்திரனின் கதைகளை எண்ணி மச்சேஸ்வரன் காவலாளியாக இருந்தானா?
சிறீவில்லிபுத்தூர் கோயிலில் பத்ரிநாத் என்னும் பார்ப்பான் கோயில் கருவறையை பள்ளியறையாக மாற்றினானே - அப்பொழுது அந்தக் கடவுள்தான் என்ன செய்துது?
கோயிலில் நடந்த இந்தக் காமக் குரூரங்கள் குறித்து கண்டித்து ஒரே ஒரு வரி சோ.ராமசாமியோ, மாலன் நாராயணன்களோ எழுதியதுண்டா?
குஜராத் மாநிலம் தபோயில் உள்ள சுவாமி நாராயணன் கோயில் குடியிருப்பில் குருக்கள் பார்ப் பான் சந்திதேவ் வல்லப் அடித்த லூட்டி சந்தி சிரிக்க வில்லையா? வீடியோ காட்சிகளாக வெளிவந்தனவே - ஆகாயத்தை பிளந்து கட்டி எழுதும் இந்த பார்ப்பன ஏடுகள் மூச்சு விட்டதுண்டா?
ஏன்? அவை எல்லாம் அவாள் ஆத்து சமாச்சாரம். அப்படியே அமுக்கி விடுவார்கள் - காலமெல்லாம் அவாளுக்கே உரிய கைவந்த கலை- இந்த அமுக்கல்கள்!
பெரியாரைக் கை நீட்டிப் பேசும் யோக்கியதை இந்த நாட்டில் எவருக்கும் இல்லை என்கிற போது - இந்தப் பார்ப்பன குஞ்சுகளுக்கு அதற்கான அருகதை அறவே கிடையாது.
தனி வாழ்விலும், பொது வாழ்விலும் ஒழுக்கத்தின் ஞான ஊற்றாக - பண்பாட்டின் பெட்டகமாக வாழ்ந்து காட்டிய தந்தை பெரியார் எங்கே - இவர்கள் பெரியவாள் என்று ஊதிப் பெருக்கச் செய்யும் சங்கராச்சாரியார் எங்கே?
அனுராதா ரமணன் என்ற பெண் எழுத்தாளர் (பார்ப்பனப் பெண்மணிதான்) கண்ணீரும் கம்பலையுமாக தொலைக் காட்சியில் குமுறிக் குமுறி அழுது கூறினாரே - நினைவிருக்கிறதா?
மடத்தின் சார்பில் பத்திரிகை ஒன்று நடத்துவதற்காக தன்னை வரச் சொன்ன சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி பேசிக் கொண்டு இருந்த போதே என் கையைப் பிடித்து இழுத்தார் என்று சொல்லவில்லையா?
இதில் என்ன வெட்கக்கேடு என்றால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கம் நின்று நியாயம் கேட்காமல், காம +கோடியின் பக்கம் நின்று அந்தப் பெண்ணின் மீது பழி சுமத்தவில்லையா இந்தக் குருமூர்த்தி?
சங்கரமடத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து, பிறகு காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் மேலாளராக இருந்த சங்கரராமன் - சோமசேகர கனபாடிகள் என்ற பெயரில் ஜெயேந்திரர் பற்றி எழுதிக் குவித்த 'லீலா விநோதங்கள்' - கொஞ்சமா நஞ்சமா!
சங்கரராமன் ஒரு பட்டப்பகலில் வரதராஜ பெருமாள் கோயில் சந்நிதியிலேயே வெட்டிக் கொல்லப்படவில்லையா? அந்தக் குற்றத்தின் தொடர்ச்சியில் வேலூர் சிறையில் ஜெகத்குரு கம்பி எண்ணவில்லையா?
அப்பொழுதெல்லாம் இந்தத் துக்ளக்கோ, மாலன் களோ எங்கே போனார்கள்? மாறாக பெரியவாள் விஷயத்தில் அநீதி இழைத்து விட்டது அரசு என்று எழுதியவர்தானே திருவாளர் சோ.
தான் பங்கு கொள்ளும் பொது நிகழ்ச்சியில் கடவுள் வாழ்த்துப் பாடப் பெற்றால், தள்ளாத வயதிலும் காலுன்றி தன்னளவில் நிற்க முடியாத நிலையிலும் கூட, இருபக்கங்களிலும் உள்ள தமது தொண்டர்களின் தோள்களில் கையைப் போட்டுக் கொண்டு, அந்த கடவுள் வாழ்த்துப் பாடல் முடியும் வரை நின்று கொண்டே இருக்கும் அவை நாகரிகத்தின் ஆசான் தந்தை பெரியார் எங்கே - தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய போது குத்துக் கல்லாக உட்கார்ந்திருந்த ஜெகத் குருக்கள் எங்கே?
பெரியாரைப் பற்றிப் பேசும்பொழுதோ, எழுதும்போதோ நிதானம் தேவை என்று ஒரு முறை ஜீவா சொன்னார், அந்த நிதானத்தை இந்தப் பூணூல் கூட்டத்திடம் எதிர் பார்க்க முடியுமா?
தந்தை பெரியாரைப் பின்பற்றும் இலட்சிய தோழர்களை 'துக்ளக்' பெரியாரின் விசிறிகள் என்று எழுதுகிறது என்றால் இவர்களின் தரம் என்ன என்பது விளங்கும். ரஜினியின் விசிறியாகி விட்டவர்களின் புத்தி அப்படித்தான் மேயும்.
ஜாதி, தீண்டாமை ஒழிப்புக்கும் பெண்ணுரிமைக்கும், சமூக நீதிக்கும், மூடநம்பிக்கை ஒழிப்புக்கும், தங் களையே அர்ப்பணித்து கருப்பு மெழுகுவர்த்திகளாக பொது வாழ்வில் ஜொலிக்கும் கருஞ்சட்டை தொண்டர்களை பெரியாரின் விசிறிகள் என்று எழுது கின்ற 'துக்ளக்'குக்கு இன்னும் பதிலடிகள் உண்டு.
- விடுதலை நாளேடு 2.2. 20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக