பெரியாருக்கும் கல்விக்கும் சம்பந்தம் இல்லையா? பார்ப் பனர் அல்லாத மக்களின் கல்விக் கண்களைக் குத்த ஆச்சாரியர் குலக் கல் வித் திட்டத்தை திணித்த போது அதனை எதிர் கொண்டு ஒழித்ததோடு, ஆச்சாரியாரையே ஆட் சியை விட்டு ஓட விரட்டி யவர் பெரியாரல்லாமல் வேறு யார்?
ஆச்சாரியாரை விரட்டிய இடத்தில் காமராசரை அமர வைத்து கல்வி வள்ளல் காம ராசர், பச்சைத் தமிழர் காமராசர் என்று பெரியார் போற்றிப் பாராட்டிடவில்லையா?
தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர் களுக்கும் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்காக அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வரப்படுவதற்குக் காரணமாக இருந்தது யார் தினமலரே?
- - - - -
மானமிகு வீரமணி
துடிக்கத்தான் செய்வார்
'நீட்' தேர்வு வந்த பிறகு பாதிக்கப்படுவோர் யார்? எங்கள் மக்கள் தானே, கிராமப்புறத்தவர்கள்தானே தாழ்த்தப்பட்ட பிற் படுத்தப்பட்ட முதல் தலைமுறையாகப் படிக்க முனையும் மக்கள் தானே!
கல்லூரிகள் அதிகரித்து பயன் என்ன? எங்கள் மக்களுக்கு இடம் இல்லையே என்று கேட்கிறார் வீரமணி என்றால் இந்நாட்டு மக்களின் மீதான அக்கறையால்தானே!
மத்திய ஆட்சியின் பொருளாதார சரிவு குறித்து ஆட்சியின் ஆலோசகர்களே புலம்புகிறார்களே அதற்கு என்ன பதில்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக