வியாழன், 25 மார்ச், 2021

அத்துமீறுகிறவர்களுக்குப் பதிலடி என்ன? மகாதானபுரம் மஹாதானபுரமாக மாற்றப்பட்டது, எப்படி?


தமிழ் இனி மெல்ல பாஜகவினரால் அழிக்கப்படும் என்பதற்கு அடுத்த சான்று,

 கரூர் மாவட்டத்தில் உள்ள மகாதானபுரம் என்ற பெயர் கொண்ட ரயில் நிலையத்தின் பெயர் பலகையை எடுத்துவிட்டு புதிய பெயர்பலகையில் மஹாதானபுரம் என்ற வடமொழிச்சொல்லைச் சேர்த்து எழுதப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ரயில் நிலைய மேலாளர் சக்திவேல் கூறியதாவது:

‘‘ரயில் நிலையத்தின் சேலம் கோட்டத்தில் இருந்து எங்களுக்குப் பெயர் மாற்றச்சொல்லி உத்தரவு வந்தது. அதில் தமிழில் இருந்த மகாதானபுரம் என்பதில் உள்ள ‘‘கா'' என்பதை மட்டும் அகற்றிவிட்டு ‘‘ஹா'' என்று சேர்த்துள்ளனர். தலைமையிடமிருந்து  வந்த உத்தரவை நாங்கள் மீற முடியாது. ஆகவே, பழைய எழுத்துப்பலகையில் இருந்த பெயரை அழித்துவிட்டு புதிய பெயரைச் சேர்த்துள்ளோம்'' என்று கூறினார்.

இது தொடர்பாக சேலம் கோட்டம் இதுவரை எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை.

 பாஜகவின் தேர்தல் அறிக்கை என்று ஒன்றை வெளியிட்டவர்கள் அதில் முதல்பக்கமே வழக்கொழிந்து போன எழுத்துருவிலேயே இல்லாத ‘‘      ” பயன்படுத்தி தங்களின் தமிழ் வெறுப்பைக்  காட்டி னார்கள்.

 ஆனால், மோடி தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் தமிழில் பாரதி, திருக்குறள், அவ்வையார் பாட்டு எல்லாம் அவருக்கும் புரியாமல், நமக்கும் புரியாமல் வித்தியாசமான உச்சரிப்பில் பேசிவிட்டுச் செல்வார். அவர் இதைத்தான் சொல்கிறார் என்று, அடுத்த நாள் ஊடகத்தில் வந்த பிறகுதான் தெரிந்து கொள்ளவேண்டிய அவலம் உள்ளது.

 இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஊடுருவி உள்ள வட இந்திய அதிகாரிகள், தங்களின் தமிழ் வெறுப்பை எந்த அளவு   அரங்கேற்ற வேண்டுமோ அந்த   அளவு செயல்படுத்தி வருகின்றனர்.

 கடந்த ஆண்டு முழு அடைப்பின் போது சேலம் கோட்டத்தில் அதிக அளவு வட இந்தியர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். அப்படிச் சேர்ந்தவர்களின் நடவடிக்கையே தற்போது வெளிவந்துள்ளது, இந்தி பேசுபவர்களை திட்டமிட்டே மத்திய அரசு தமிழகத்திற்கு அனுப்புகிறது என்பதற்கு இது ஒன்றே சாட்சியாகும்.

தமிழுணர்வு தலைநிமிர்ந்து நிற்கும் தமிழ்நாட்டை இந்தி  மயமாக்க - இந்து மயமாக்கத் துடிப்போர்க்குப் பதிலடி கொடுக்கவேண்டாமா?

பா.ஜ.க.வுக்கு அடிமையாகிவிட்ட அதிமுகவுக்கும் வட்டியும் முதலுமாகப் பாடம் கற்பிக்க வேண்டாமா?

ஆதரிப்பீர், தி.மு.க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக