பாராட்டத்தக்க செயல் - காணொலிமூலம் கோரிக்கை விடுத்து திருமணத்தை தடுத்து நிறுத்திய சிறுமி

லக்னோமார்ச். 18  உத்தரப்பிரதேசத்தில் படிக்க ஆசைப்பட்ட சிறுமியை  திருமணம் செய்துவைக்க முயன்ற தந்தையின் மீது காணொலிமூலம் பேசி காவல்துறை உதவி வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார் ஒரு சிறுமிஉத்திரப் பிரதேசம் ஆக்ரா மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் 7 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிதற்போது கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் வீட்டிலேயே கல்வி கற்றுவரும் அந்தச் சிறுமியை திருமணம் செய்து கொடுக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர்.

இதனை அடுத்து அவர் தான் மேற்படிப்பு படிக்கவேண்டும்இப்போது திருமணம் வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தார்ஆனால் அவரை திருமணம் செய்யுமாறு தொடர்ந்து மிரட்டல் விடுத்தும் அடித்து துன்புறுத்தியும் வந்தார்இந்த நிலையில் மாப்பிள்ளை வீட்டார்களும் வந்து சிறுமியை மிரட்ட ஆரம்பித்து விட்டனர்.  இதனை அடுத்து சிறுமி ஆன்லைனில் படிக்க வைத்திருந்த அலைபேசியில் ஒரு காணொலியை பதிவு செய்தார்அதில் தான் படிக்க விரும்புவதாகவும்தன்னை தனது தந்தை மற்றும் மாப்பிள்ளை அவரது பெற்றோர்கள் மிரட்டுகிறார்கள் என்று காட்சிப் பதிவை தனது நண்பி ஒருவருக்கு அனுப்பினார்இதனை அடுத்து அவர் காவல்துறைக்கு அந்த விடியோவை அனுப்பி யுள்ளார்.    காவல்துறை இந்த காணொலி  தொடர்பாக விசாரணை நடத்தியதுபின்னர் சிறுமியின் வீட்டிற்குச் சென்று அவரது தந்தையைக் கைதுசெய்ததுமேலும் மாப்பிள்ளை வீட்டார் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.