திங்கள், 15 மார்ச், 2021

பொதுக்குழுவில் கழகத் தலைவரின் "நவமணி" அறிவிப்புகள்


 1) திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள "தி.மு.க. கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டும்! பா.ஜ.க. - அதிமுக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் - ஏன்?" என்ற நூலை நாடெங்கும் பரப்பிட வேண்டும்.

2) கரோனா காலத்திலும் 'விடுதலை' பி.டி.எப். மூலம் வெளிவந்தது. வாசகர்கள் எண்ணிக்கை பெரிய அளவில் அதி கரித்தது - கரோனா காலத்திலும் 'விடுதலை'க் குழுமத்தினரின் பணி சிறப்பானது. அன்னையார் பிறந்தநாள் முதல் (10.3.2021) மீண்டும் எட்டுப் பக்கங் களுடன் பல வண்ணத்தில் வெளி வந்துள்ளது. 'விடுதலை' சந்தா எண் ணிக்கை பெருக வேண்டும்; கழகத் தோழர்கள் இந்தப் பணியில் முக்கியமாக ஈடுபட வேண்டும்.

நம்முடைய செய்திகளை இருட்ட டிப்பதில் ஊடகங்கள் விழிப்பாக இருப்ப தால் 'விடுதலை' பரப்பும் பணியில், சந்தா சேர்க்கும் பணியை கழகத்தினர் (பகுத்தறி வாளர் கழகம் உட்பட) தீவிரமாக ஈடுபட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

3) மே மாதத்தில் ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்தப்பட வேண்டும் (ஏலகிரி, மேட்டுப்பாளையம், குற்றலாம் உட்பட).

4) 50 வயதுக்கும் கீழ் உள்ளவர்களை பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். குறி வைக்கிறது. இதனை நாம் முறியடித்தாக வேண்டும். இளைஞர்கள், மாணவர்களுக்கான பயிற்சிப் பட்டறை, வெளியீடுகள் மூலமும், இயக்கப் பொறுப்பாளர்கள், களப்பணி யாளர்களது தக்க அணுகுமுறைகள் மூலமும் முறியடித்தாக வேண்டும்; இது பெரியார் மண் - திராவிட இயக்கச் சித்தாந்த மண் என்பது நிரூபிக்கப்பட வேண்டும்.

5) சிறுகனூரில் "பெரியார் உலகம்" பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.

மூன்று நூற்றாண்டுகளில் சமூகநீதியின் வெற்றிகள் - களங்கள்

மகளிர் எழுச்சி வரலாறு

இயக்க வரலாற்றின் முக்கிய கட்டங்கள்

கோளரங்கம்

என்று பல்வேறு அம்சங்களுடன் பெரியார் உலகம் மலரும்.

"பெரியார் உலகம் - மக்கள் பங்களிப்புடன் நடந்தேற வேண்டும்.

வீட்டுக்கு வீடு, கடைக்குக்கடை நமது தோழர்கள் நேரில் சென்று விளக்கி, நன்கொடையை திரட்ட வேண்டும்.

ரூ.10, ரூ.25, ரூ.500 என்கிற வகையில் அதற்கான நன்கொடைப் புத்தகங்கள் தலைமைக் கழகத்தால் வழங்கப்படும்.

பெரியார் பட ஊர்வலங்களை நடத்தி பெரியார் என்ன செய்தார் - அவர் தொண்டால் நம் மக்கள் பெற்ற பலன்கள் எத்தகையவை என்பதை விளக்கிப் பிரச்சாரம் செய்து நன்கொடை  திரட்டப் பட வேண்டும்.

6) கிராமங்களை முன்னிறுத்தி நமது பிரச்சாரப் பணிகள் கட்டமைக்கப்பட வேண்டும்.

7) பெரியார் திடலில் சுயமரியாதைத் திருமண நிலையம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

திருமகள் இறையனுக்குப் பிறகு அவரது மருமகள் பசும்பொன் செந்தில் குமாரி நிலையத்தின் இயக்குநராக இருந்து சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். நாள் தோறும் திருமணங்கள் அங்கு நடைபெற்று வருகின்றன.

ஜாதி மறுப்பு, மத மறுப்புத் திரும ணங்கள் ஏராளம் நடைபெற்று வரு கின்றன. தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் இந்த நிறுவனம் தொடங்கப்பட வேண்டும்.

8) இயக்கத்தில் தலைமுறை இடை வெளியின்றி இருபால் தோழர்கள் பெருகி வருகின்றனர் - இதற்கு இந்தப் பொதுக் குழுவே சாட்சி.

மூத்த தலைமுறை என்று வருகின்ற போது, இங்கு வந்துள்ளவர்களை வைத்தே கூறிவிடலாம். அய்யா ராஜகிரி தங்கராசு, நாகர்கோயில் கிருஷ்ணேஸ்வரி,  குடந்தை வசந்தா கல்யாணி என்று  குறிப்பிட வேண்டும்.

நடுத்தர வயது என்று எடுத்துக் கொண்டால் நமது பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி, இளைய தலைமுறையினர் என்று எடுத்துக் கொண்டால் மகளிர்ப் பாசறையைச் சேர்ந்த வழக்குரைஞர் மணியம்மை, வழக்குரைஞர் மதிவதனி போன்றவர் களைக் குறிப்பிட வேண்டும்.

நமது பொதுச் செயலாளர் தஞ்சை ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரன் போன்ற எண்ணற்ற தோழர்கள் தந்தை பெரியாரை நேரில் பார்க்காத தலைமுறையாவர். தந்தை பெரியார் மறைவுக்குப் பிறகு இயக்கத்தில் இணைந்தவர்கள் மட்டுமல்ல - களப்பணியாளர்கள்.

இயக்கம் மக்கள்  சக்தியோடு இயங்கிக் கொண்டு இருக்கிறது என்பதற்கு இவை எல்லாம் அடையாளங்கள்.

9) கரோனா ஒழிந்து விட்டது என்று அலட்சியமாக இருக்கக் கூடாது. முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றத் தவறக் கூடாது. குறிப்பாக முகக் கவசம், சோப் போட்டுக் கை கழுவுதல் - தடுப்பூசி இவற்றில் கவனமாக நம் தோழர்கள் இருக்க வேண்டும். மற்றவர் களுக்கும் வழிகாட்ட வேண்டும்.

நடக்க இருக்கும் தேர்தல் வெறும் ஆட்சி மாற்றம் - காட்சி மாற்றம் மட்டுமல்ல - இனத்தின் மீட்சிக்கான மாற்றம். திராவிடத்துக்கும் - ஆரியத்துக்குமான சித்தாந்தப் போராட்டம்.

234 தொகுதிகளிலும் திமுக அணியை வெற்றி பெறச் செய்ய நம் தோழர்கள் உழைக்க வேண்டும். எனது தேர்தல் சுற்றுப்பயணம் விரைவில் தொடங்கப் படும்.

குடந்தை பொதுக் குழு வரலாறு படைத்து விட்டதற்குக் காரணமான மாவட்டத் தலைவர் நிம்மதி முதல் அனைத்துத் தோழர்களுக்கும், பொறுப் பாளர்களுக்கும் பாராட்டுகள் - வாழ்த்துகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக