வியாழன், 25 மார்ச், 2021

இலங்கைக்கு எதிரான அய்.நா. தீர்மானம்: பாஜகவின் தமிழர் விரோதப்போக்கு!


இலங்கை அரசுக்கு எதிரான அய்.நா.தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு எதிராக, அங்கு 2009  இறுதிப்போரில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கும், போர்க் குற்றங்களுக்கும் இலங்கை அரசு பொறுப்பேற்க வேண்டும், முறையான விசாரணை நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தி பிரிட்டன், கனடா உள்ளிட்ட 6 நாடுகள் அய்.நா. மனித உரிமை அவையில் கொண்டுவந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்துள்ளன.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் அய்.நா. மனித உரிமைகள் அவையில் நிறைவேறியுள்ளது ஈழத்தமிழர் உரிமைப் போராட்டத்தில் மிக முக்கியமான கட்டமாகும்.

ஆனால், இந்தியாவை ஆளும் பா.ஜ.க. அரசோ எதிலும் இரட்டைப் போக்கு, இரட்டை நாக்கு என்னும் வகையில் இதிலும் இரட்டை நிலைப்பாடு எடுத்துள்ளது கண்டனத்திற்குரியதாகும்.

இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் வெளிநடப்புச் செய்ததன் மூலம் பா.ஜ.க.வின் தமிழர் விரோதப் போக்கும், துரோகமும் உலக அரங்கில் அம்பலப்பட்டுவிட்டது.

தமிழர்கள் புரிந்துகொள்ளட்டும்!

கி.வீரமணி  

தலைவர்,

திராவிடர் கழகம்

23.3.2021          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக