திங்கள், 15 மார்ச், 2021

அன்னையாரின் 102 ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று: ஆரியத்தை வீழ்த்தி, வீரியத்துடன் இலட்சியத்தை நோக்கி வீர நடை போட சூளுரை ஏற்போம்!


திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியரின்  உறுதிமொழி அறிக்கை!

இன்று (10.3.2021) அன்னை மணியம்மையாரின் 102 ஆம் ஆண்டு பிறந்த   நாள்ஆரியத்தை வீழ்த்திவீரியத்துடன் இலட்சியத்தை நோக்கி வீர நடை போட சூளுரை ஏற்போம் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள உறுதிமொழி அறிக்கை வருமாறு:

இன்று (10.3.2021) நம் அன்னை .வெ.ராமணியம்மையாரின் 102 ஆம் ஆண்டு பிறந்த நாள்!

தந்தை பெரியாரிடம் - அவர்தம் இயக்கத் திடம் முழுநேரத் தொண்டராகதுணையாக யாரும் கேட்காமலேயே தாமே முன்வந்து தனது பள்ளிப் படிப்பை முடித்துமேற்கொண்டு குலசேகரப்பட்டினத்தில் புலவர் படிப்பு படிக்க முன்வந்துஅதிலும் சேராதுதந்தையின் செயலாளராய்தாதியாய்சேவகியாய் தன்னை ஒப்படைத்துக் கொண்டார் அன்னையார்!

ஓர் அரிய வாய்ப்பு;

ஒரு திருப்புமுனை!

1933 மே மாதத்திற்குப் பிறகு ஒரு பத் தாண்டுகள் தன்னந்தனியராய் சுற்றுப்பயணம் செய்து, 1943 வரை கடுமையாக உழைத்து வந்த தந்தை பெரியாருக்கு சரி வர உணவுகவனிப்பு போதிய அளவில் கிட்ட வாய்ப் பில்லைஆனால்அவர் ஒரு துறவிபோல் அதைப்பற்றி எல்லாம் கிஞ்சிற்றும் கவலைப் படாமல் இயக்கப் பணிகளை - போராட் டங்களை - ‘சிறைப் பறவையாகஅலுப்பு சலிப்பின்றி செய்ததால்வயிற்றுப் புண் - வலிசில நேரங்கள் மயக்கம் - இப்படி உடல்நலம் குன்ற ஆரம்பித்த நிலையில்தான்தந்தை பெரியாரைப் பாதுகாக்கும் மாமருத்துவராக - உடல்நலம் - இயக்கப் பணி கவனிக்க  வேலூர் கே..மணியம்மை கிடைத்தது ஓர் அரிய வாய்ப்புஒரு திருப்புமுனையே!

அதற்குப் பிறகு 6 ஆண்டுகளில் அய்யா வின் முழு நம்பிக்கைக்குரியவராகி அவர்தம் சொத்துக்களுக்கும் பாதுகாவலராகிஅவர்தம் இயக்கத்திற்கும் அய்யாவின் மறைவுக்குப் பிறகு முழுக்காவலராக மாறிசேதாரம் சிறிதுமின்றி சிறப்பாகத் தொண்டாற்றினார்!

பிற்காலத்தில் புரியாதவர்களுக்கும்

புரிய வந்தது!

‘‘திருமணம் என்பது சட்டப்படிக்கான ஒரு பெயரே தவிரமற்றபடி இயக்கப் பாதுகாப் பிற்கான ஓர் ஏற்பாடே ஆகும்'' என்பது பிற்காலத்தில் புரியாதவர்களுக்கும் புரிய வந்தது!

இடையில் ஏற்பட்டது அரசியல் திருப்ப மாகும் - அதுவும் நன்மையாகவே முடிந்தது!

இன்று திராவிட இயக்கத் தத்துவம்லட்சிய ரீதியாகவும்சமூகப் புரட்சி இயக்கமாகவும்அரசியல் மாற்ற இயக்கமாகவும் உயர ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாகதந்தை பெரியார் அவர்களும்அவர்களால் உருவாக்கப்பட்ட அறிஞர் அண்ணாகலைஞர் ஆகியவர்களால் அமைக்கப்பட்டுஅவர்கள் இல்லா அடுத்த பொறுப்பாளர்கள் பலத்தோடு வலம் வருவதற்கு முக்கிய அடிப் படை அன்னையாரின் தியாகம்தியாகம்!!

சர்வபரித் தியாகம் செய்தவர் அன்னையார்!

வலிமையை விட இளமையைத் தொண் டறத்திற்காகஇயக்க - கொள்கைப் பாதுகாப் புக்காக தன்னையே தந்து சர்வபரித் தியாகம் செய்தவர்!

எங்கள் அன்னையேஉங்களால் இன்றும் திராவிடம் வாழுகிறதுஎன்றும் வாழும்!

காரணம்இதன் ஆணிவேர் எங்கே என்பது பலருக்கு குறிப்பாக நம் இன எதிரிகளுக்குத் தெரியாது.

ஆயிரங்காலத்துப் பயிரான திராவிடத் தைப் பாதுகாப்பது அதுதான்கொள்கை லட்சியம் - சுயமரியாதைச் சூட்டுடன்!

புதியதோர் அரசியல் திருப்பத்திற்கும் மூலகாரணமான மறைந்தும் மறையாத நம் அன்னையின் ஒப்பற்ற தியாகம்உயரிய தொண்டறம்.

இலட்சியத்தை நோக்கி

வீர நடை போட சூளுரை ஏற்போம்!!

எனவேஉங்கள் பிறந்த நாளில் புதிய பூமியை - புதிய வானத்தை - புத்தாக்கத் திராவிடத்தை வெல்லச் செய்வோம்!

ஆரியத்தை வீழ்த்திவீரியத்துடன் இலட்சியத்தை நோக்கி வீர நடை போட சூளுரை ஏற்போம்!


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

10.3.2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக