வெள்ளி, 8 அக்டோபர், 2021

தமிழ்நாடு அரசு கடைப்பிடிக்காத EWS 10 விழுக்காட்டை செயல்படுத்த பல்கலைக் கழகங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?

 

 எம்.டெக்பயோ டெக்னாலஜிஎம்.டெக் கம்ப்யூடேஷனல் பயாலஜி முதலிய படிப்புகளை அண்ணா பல்கலைக் கழகம் நிறுத்தியது ஏன்?

 தமிழ்நாட்டில் இயங்கும் பல்கலைக் கழகங்கள்

தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டை  பின்பற்றாதது ஏன்?

சமூகநீதிக்கான சரித்திர நாயகர்முதலமைச்சர்

மாண்புமிகு மு..ஸ்டாலின் தீர்வு காணவேண்டும்!

அண்ணா பல்கலைக் கழகத்தில் பயோ டெக்னாலஜி பாடங்கள் பல நிறுத்தப்பட்டது குறித்தும்தமிழ்நாட்டில் இயங்கும் பல்கலைக் கழகங்கள் தமிழ்நாடு அரசு பின்பற்றும் இட ஒதுக்கீட்டு அளவைப் பின்பற்றாமல் ஒன்றிய  அரசின் இட ஒதுக்கீட்டின் விழுக்காட்டைப் பின்பற்றுவதும்தமிழ்நாடு அரசு பின்பற்றாத பொருளாதாரத்தில் நலிந்த உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடங்களைப் பின்பற்றுவதும் எந்த அடிப்படையில்?

தமிழ்நாடு அரசுகுறிப்பாக முதலமைச்சர் இதில் தலையிட்டு தீர்வு காணவேண்டும்  என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

அகில இந்திய நுழைவுத் தேர்வான GAT-B (Graduate Aptitude Test in Biotechnology) மூலம் இந்தியாவில் பல்வேறு கல்லூரிகளில் பயோடெக்னாலஜி சார்ந்த பட்டமேற்படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறதுஇந்தத் தேர்வின் மூலம் சேரும் மாணவர்களுக்கு மாத உதவித்தொகையாக பன்னிரெண்டாயிரம் ரூபாயும்ஆராய்ச்சி நிதியாக தலா எண்பத்து அய்ந்தாயிரம் ரூபாய் (ரூ.85,000/-) வரையிலும் ஒன்றிய அரசு வழங்கி வருகிறதுதமிழ்நாட்டில் உள்ள எட்டு கல்லூரிகளில் கடந்த ஆண்டு இந்த தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதுஆனால் இந்த ஆண்டு சேர்க்கை நடத்தும் கல்லூரிகள் பட்டியலில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம் மட்டும் நீக்கப்பட்டுள்ளது(பட்டியல் அருகே காண்க)

இடஒதுக்கீடு காரணமா?

இந்த இரு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை கடந்தாண்டு அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தியது கவனத்துக்குரியதுஒன்றிய அரசு நிதிப்பங்களிப்பு செய்வதால்மாநில அரசின் 69% இடஒதுக்கீட்டு கொள்கைக்கு மாறாக ஒன்றிய அரசின் 49.5% இடஒதுக்கீடை அமல்படுத்த ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும்அதற்குத் தீர்வு காண முடியாமல் மாணவர் சேர்க்கையை நிறுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது.  அதற்கு எதிராக பாதிக்கப்பட்ட மாணவர்கள் தொடர்ந்த வழக்கில்மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

கரோனா கால கல்லூரி சேர்க்கைக்கான அவசர வழக்காக இதை விசாரித்த நீதிமன்றம்மிக விரைவாக வழக்கை முடித்து மாணவர் சேர்க்கையை நடத்த ஏதுவாக 49.5% இடஒதுக்கீட்டு முறையையே கடந்த ஆண்டு கடைப்பிடிக்க உத்தரவிட்டதுஇதற்கு மாறாக இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் 69% இடஒதுக்கீட்டு முறையை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை அண்ணா பல்கலைக்கழகம் முன்னெடுக்கும் என்பது மாணவர்களின் எதிர்பார்ப்பாக இருந்ததுஆனால்அதற்கு மாறாகஒட்டுமொத்த திட்டத்தில் இருந்தும் அண்ணா பல்கலைக்கழகம் நீக்கப்பட்டுள்ளது எந்த வகையில் சரிஇது வளர்ச்சிப் போக்காவீழ்ச்சிப் போக்காசக மாணவர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ்நாட்டின் பல்கலைக் கழகங்களில் 10% EWS!

GAT-B  நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்திய தமிழ்நாட்டின் இதர பல்கலைக்கழகங்கள்  மதுரை காமராஜர்காரைக்குடி அழகப்பாகோவை பாரதியார் மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகங்கள் ஆகும்அவை 49.5% இடஒதுக்கீடு முறையை கடைப்பிடித்ததோடு மட்டுமல்லாமல் கூடுதலாகஉயர்ஜாதியில் வருமானம் குறைந்தோர்க்கான  10% EWS (Economically Weaker Section)  இட ஒதுக்கீடு முறையையும் கடைப்பிடித்தனஇது தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவுக்கு எதிரான செயலாகும்.

 இந்த நான்கு பல்கலைக்கழகங்களும் இவ்வாண்டு பட்டியலில் இடம்பிடித்துள்ளனஇவற்றில் இந்த ஆண்டாவது 49.5% மற்றும் 10% EWS முறையை ரத்து செய்து தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீடு முறையை கடைப்பிடிக்க தமிழ்நாடு அரசு தக்க ஆவன செய்ய வேண்டும்.

இவை போகசென்னை வேல்டெக் ரங்கராஜன் அறிவியல் தொழில்நுட்பக்கல்லூரிதிருச்செங்கோடு கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரிதிருச்சி நேஷனல் கல்லூரி ஆகிய தனியார் கல்லூரிகளும் இந்தப் பட்டியலில் உள்ளனஇவற்றிலும் கடந்த ஆண்டு ஒன்றிய அரசின் இடஒதுக்கீடு முறையே பின்பற்றப்பட்டுள்ளதுஅங்கும் நமது 69% முறை கடைப்பிடிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்தப் பல்கலைக் கழகங்கள் எல்லாம் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்பொழுதுஇட ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசின் இட ஒதுக்கீட்டின் அளவைப் பின்பற்றிட இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

மாநில உரிமை

மாநில அரசின் பல்கலைக்கழகங்களில் மாநில அரசின் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழுவும் (UGC - University Grants Commission), அகில இந்திய தொழிநுட்பக் கல்விக் குழுமமும் (AICTE - All India Council for Technical Educationவரையறுத்துள்ளன.

UGC GUIDELINE:

All centrally funded Universities/colleges/lnstitutions are required to ensure strict compliance of Government of lndia orders/rules on the reservation in their institutions. State Universities including its affiliated/constituent colleges and other lnstitutes functioning within the State should follow the percentage of reservation for SC/ST & OBC as prescribed by the concerned State Government.

(UGC guideline : F 1-8/2014(SCT) 1st February,2021)

AICTE GUIDELINE:

The reservation of seats in admission is decided by the respective State Government authorities depending upon the reservation policy.

For ensuring higher education within the reach of OBC, the concerned state government ususally lays down the norms for reservation to OBC, which is implemented through the centralized admission process of admission.

(F.No.AICTE/PQ.No.2673/July/2014/73 dated 31.7.2014)

இந்நிலையில் நிதிப்பங்களிப்பு என்னும் பெயரில் ஒன்றிய அரசு மாநில இடஒதுக்கீட்டில் தலையிடுவது மாநில உரிமையை மீறும் செயலாகும்இதில் தமிழ்நாடு அரசு உடனே தலையிட்டு விரைந்து நீதி பெற்றுத் தர வேண்டும்.

மாணவர்களின் கல்விக் கனவு நிறைவேறுமா?

இந்தியாவில் GER (Gross Enrollment Ratio)  எனப்படும் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை என்பது தமிழ்நாட்டில் தான் அதிகமாக உள்ளதுஇந்தியாவின் சராசரி GER 27% ஆகும்இதில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதோடு நில்லாமல் சீனாவின் 50.5% அய்விடவும் முன்னணியில் உள்ளதுஎனவேதமிழ்நாட்டு மாணவர்கள் படிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டிய நிலையில்ஒன்றிய அரசின் இடஒதுக்கீடு என்னும் பெயரில் நமது மாணவர்களின் இடங்கள் மற்ற மாநிலங்களுக்கு திறந்துவிடப்படுவது மாணவர்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதியாகும்மேலும்ஒன்றிய அரசின் நிதிப்பங்களிப்பு என்பதும் மாநில அரசிடம் இருந்து பெறப்பட்ட நிதியே ஆகும்.

மாணவர்களின் கோரிக்கைகள்:

1. GAT-B நிதிப்பங்களிப்பு திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகம் மீண்டும் அந்த திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்மேலும் தமிழ்நாட்டின் 69% முறை பின்பற்றப்பட வேண்டும்.

2. இத்திட்டத்தில் பங்கேற்றுள்ள இதர அனைத்து தமிழ்நாடு பல்கலைக்கழகங்களிலும் மற்றும் கல்லூரிகளிலும் ஒன்றிய அரசின் 49.5%+10% EWS  கைவிடப்பட்டுதமிழ்நாடு அரசின் 69% இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும்

மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிதமிழ்நாடு மாணவர்கள் அநீதியாக இழந்த கல்வி உரிமையை மீட்பது மட்டுமல்லாது சமூகநீதியையும் காக்க தமிழ்நாடு அரசு துணை புரிந்து மாணவர் நலன் காக்க தக்க நடவடிக்கைகள் எடுக்க ஆவன செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

ரூ. 9000 வருமான வரம்பு ஆணை நீக்கப்பட்டு பிறகு புதிய ஆணை பிற்படுத்தப்பட்டவர்க்கு (50 சதவிகிதம் ஒதுக்கீடுபல்கலைக்கழகங்களால் கட்டாயம் பின்பற்றப் பட வேண்டும் என்ற அரசு ஆணை ஏன்எப்படி காற்றில் பறக்க விடப்பட்டது?

The reservation of seats as per the above orders shall be a condition for the payment of any grant-in-aid from the funds of this Government to any private management or Local Body or to the Universities (in respect of courses conducted and institutions run directly by them). (G.O. No. Ms. No. 73, dated 1.2.1980).

குறிப்பாக "சமூகநீதிக்கான சரித்திர நாயகர்மாண்புமிகு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள் இதில் முக்கிய கவனம் செலுத்துவார் - செலுத்தவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்வலியுறுத்தவும் செய்கிறோம்.

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

8.10.2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக