வெள்ளி, 1 அக்டோபர், 2021

முத்தையன் - நாகவள்ளி திருமணத்தை நான்தான் நடத்தினேன்; பேத்திகளின் திருமணத்தையும் நானே நடத்தி வைப்பேன்!


 மணமக்களேதோற்றுப் போவதில் ஒருவருக்கொருவர் முந்துங்கள்!

டாக்டர் கனிமொழி - டாக்டர் சிறீஜித் மணவிழாவில் தமிழர் தலைவர் கருத்துரை

சென்னைஅக்.1 முத்தையன் - நாகவள்ளி திருமணத்தை நான்தான் நடத்தினேன்பேத்திகளின் திருமணத்தையும் நானே நடத்தி வைப்பேன்மணமக்களேதோற்றுப் போவதில் ஒருவருக்கொருவர் முந்துங்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கடந்த 18.9.2021 அன்று காலை சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர்  முத்தையன் - நாகவள்ளி ஆகியோரின் மகள்  டாக்டர் மு.கனிமொழிசசி - சுனிதா ஆகியோரின் மகன் டாக்டர் .சிறீஜித் ஆகியோருக்கு நடைபெற்ற வாழ்க்கை இணை யேற்பு விழாவிற்குத் தலைமை தாங்கி மணவிழாவை நடத்தி வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

அவரது வாழ்த்துரை வருமாறு:

மணமக்கள் டாக்டர் மு.கனிமொழி - டாக்டர் .சிறீஜித்

மிகுந்த மகிழ்ச்சியோடும்எழுச்சியோடும் நடை பெறக்கூடிய நம்முடைய அன்புச்செல்வர்கள் டாக்டர் கனிமொழி - டாக்டர் சிறீஜித் ஆகியோருடைய வாழ்க்கை இணையேற்பு விழா நிகழ்ச்சிக்கு வருகை புரிந்துசிறப்பான வகையில் மணமக்களைப் பாராட்டி யும்மணமக்களது பெற்றோருடைய சிறப்பான கொள்கை உணர்வுகளையும்இசைவினையும் பாராட்டி யும்இங்கு வந்திருக்கின்ற அனைவரையும் வரவேற்றும் உரையாற்றி அமர்ந்துள்ள கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

பொருளாளர் தோழர் வீ.குமரேசன் அவர்களேமாநில அமைப்பாளர் ஒரத்தநாடு குணசேகரன் அவர் களேஅமைப்புச் செயலாளர் தோழர் பன்னீர்செல்வம் அவர்களே,

மற்றும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற தலைமைக் கழகச் சொற்பொழிவாளர்கள் அதிரடி அன்பழகன் அவர்களேஇராம.அன்பழகன் அவர்களேஇரா.பெரியார்செல்வன் அவர்களே,

மற்றும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திக் கொண்டிருக்கக் கூடிய சென்னை மண்டல தலைவர் மானமிகு தோழர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் தி.இரா.இரத்தினசாமி அவர்களேசென்னை மண்டல செயலாளர் தோழர் செயல்வீரர் கோபால் அவர்களே,

தாம்பரம் மாவட்டச் செயலாளர் தோழர் நாத்திகன் அவர்களேவேலூர் மண்டலத் தலைவர் தோழர் சடகோபன் அவர்களேவேலூர் மாவட்டத் தலைவர் தோழர் சிவக்குமார் அவர்களேஆவடி மாவட்டத் தலைவர் தோழர் தென்னரசு அவர்களேமகளிரணி மாநில அமைப்பாளர் தோழர் தேன்மொழி அவர்களேபட்டுக்கோட்டை மாவட்டச் செயலாளர் தோழர் சிதம்பரம் அவர்களே,

இந்நிகழ்வில் சிறப்பாகக் கலந்துகொண்டிருக்கக் கூடிய கொள்கையாளர்சீரிய பகுத்தறிவாளர்திராவிட முன்னேற்றக் கழகத்தின் கலை இலக்கிய அணியின் பொறுப்பாளர் அருமைத் தோழர் ஆதிமாறன் அவர் களேதிருவாரூர் .தி.மு.அம்மா பேரவையின் செயலாளர் பைங்காநாட்டின் பெருமகனார் திருவாளர் அன்புச்சகோதரர் இராதாகிருஷ்ணன் அவர்களேசோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரன் அவர்களேசெயலாளர் ஜெயராமன் அவர்களேமாண வர் கழக மாநில அமைப்பாளர் செந்தூர் பாண்டியன் அவர்களேவெள்ளம்போல் திரண்டிருக்கக் கூடிய அருமைத் தோழர்களே,

தாம்பரத்தில் நடந்திருக்குமேயானால்ஒரு பெரிய மாநாடுபோன்று நடைபெற்று இருக்கும்

இந்தக் கரோனா கால கட்டுப்பாட்டின் காரணமாகஅந்தக் கட்டுப்பாட்டினை பெருமளவிற்குக் கடைப் பிடித்த காரணத்தினால்தான்இங்கே எனக்கு முன்னால் உரையாற்றிய கழகத் தோழர்கள் சொன்னதைப்போலதாம்பரத்தில் இந்த நிகழ்வு நடந்திருக்குமேயானால்ஒரு பெரிய மாநாடுபோன்று நடைபெற்று இருக்கும்.

ஆனாலும்கட்டுப்பாட்டிற்குள்  வைத்தேஇந்த அளவிற்குத் தோழர்கள் திரண்டு வந்துள்ள நிலைதாம்பரம் மாவட்டத் தலைவர் அருமைச் சகோதரர் தோழர் முத்தையன் அவர்களுடைய அன்புஅவரு டைய பண்பு அனைவரையும் ஈர்க்கக் கூடியது கட்சிகளுக்கு அப்பாற்பட்டுகொள்கையில் அவர் என்றைக்கும்அந்தக் குடும்பம் என்றைக்கும் சமரசம் செய்துகொண்டதில்லை.

முத்தையன் அவர்களானாலும்அருமை மகள் நாகவள்ளி அவர்களானாலும்அந்தக் குடும்பம் எங்கள் குடும்பம்நடைபெறுவது எங்களுடைய பேத்திக்குத் திருமணம் நடைபெறுகிறது என்கிற பெருமிதத்தோடு இந்த மணவிழாவினை நடத்தி வைக்கக்கூடிய உணர்வோடும்உறவோடும் நாங்கள் இருக்கிறோம்.

கொள்கையில் சமரசம் செய்துகொள்ளாதவர்நட்பில் சமரசம் செய்துகொள்ளக் கூடியவர்

அப்படிப்பட்டவர்களாகிய அவர்கள்கொள்கையில் சமரசம் செய்துகொள்ளாதவர்ஆனால்நட்பில் சமரசம் செய்துகொள்ளக் கூடியவர்கட்சி வேறுபாடுகருத்து மாறுபாடு -இவற்றிற்கு நட்பிலே இடமில்லைகாரணம்எல்லோரும் அவரை விரும்புவார்கள்அவர் எல்லோ ரையும் விரும்புகின்ற காரணத்தால்.

அந்த அடிப்படையில்இந்த மணவிழாஒரு சிறந்த மணவிழாவாக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக் கின்றதுஇங்கே நடைபெறுவது ஒரு சிறு பகுதிதான்தாம்பரத்தில் நடந்திருந்தால்பெரிய அளவில் நடந்திருக்கும்.

இந்தக் கரோனா காலகட்டத்தில்கட்டுப்பாட்டை நாம் கடைப்பிடிக்கவேண்டும் என்பதற்காகத்தான்எல்லோரும் முகக்கவசத்தை அணிந்திருக்கிறார்கள்.

இந்தக் காலகட்டத்தில்மணவிழா அழைப்பிதழ் கொடுக்கும்பொழுது கூட நீங்கள் மணவிழாவிற்கு வராமலேயே வாழ்த்துங்கள் என்று சொல்லக்கூடிய அளவில்ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.

எல்லோரும் ஒரு வாரத்திற்கு முன்பே வந்து வாழ்த்துங்கள் என்று சொன்ன காலம் மாறிமூன்று நாளாகிமூன்று நாள் ஒரு நாளாகிஒரு நாள் அரை நாளாகிஅதற்கும் பிறகுஇந்தக் கரோனா போன்ற கால கட்டத்தில்உங்களுக்கு அழைப்பிதழ் கொடுத்திருக் கிறோம்வராமலேயே அங்கே இருந்தே வாழ்த்துங்கள்அது மணமக்களுக்கும் சரிஉங்களுக்கும் சரிஎல்லோருக்கும் சரி உதவி செய்வதாக இருக்கும் என்று சொல்லக்கூடிய  அளவிற்குகால மாற்றங்களும்நெருக்கடிகளும் நமக்கு ஏற்பட்டிருக்கின்றன.

ரத்த உறவைவிடகொள்கை உறவு மிகவும் பலமானது

அந்த வகையில்இந்த மணவிழாவில் கலந்து கொண்டு வாழ்த்துவதுநடத்துவது என்பவை ஒரு சம்பிரதாயமல்ல - சடங்கல்ல - நான் சொன்னபடிஇது கொள்கை உறவு சம்பந்தப்பட்டதாகும்.

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில்பெரியார் தொண்டர்களைப் பொறுத்தவரையில்ரத்த உறவைவிடகொள்கை உறவு மிகவும் பலமானது.

எங்களிடத்தில் இருக்கின்ற ரத்த உறவுகளைவிடகொள்கை உறவுகளை நாங்கள் பலமாக ஆக்கிக் கொண்டிருப்பதன் விளைவுதான் - நேற்று தமிழ்நாடு என்னஉலகம் முழுவதுமே  தந்தை பெரியாருடைய பிறந்த நாள் விழாவினை - ஒரு பெரிய திருவிழா போன்று கொண்டாடி இருக்கிறார்கள்.

டோக்கியோவில் பிறந்த நாள் விழா -

அமெரிக்காவில் பிறந்த நாள் விழா -

நேற்று மலேசியாவில் நடைபெற்று இருக்கிறது - இன்றும் நடைபெறுகிறது.

பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழுகிறது!

இப்படி பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழக் கூடிய அளவிற்குஇந்தக் கொள்கை வென்றிருக்கிறது.

இந்தக் காலகட்டத்தில்கவிஞர் அவர்கள் சொன் னதைப்போலஎல்லையற்ற மகிழ்ச்சி ஏற்பட்டு இருக் கிறதுகாரணம் என்னவென்றால்ஓர் உண்மையான சிறந்தஇதற்கு முன்பு தமிழ்நாடு இவ்வளவு ஒரு அருமையான சூழலை அரசியலில் கண்டதில்லை என்று சொல்லக்கூடிய அளவிற்குஒரு பண்பட்ட கொள்கையாளர் முதலமைச்சராக இன்றைக்குப் பொறுப் பேற்றுஒரு 150 நாள்களுக்குள் இந்தியாவின் முதல் முதலமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றிருக் கிறார்.

அன்றாடம் சாதனைகளுக்கு மேல் சாதனைகள் வளர்ந்து கொண்டிருக்கின்றனஅந்த சாதனைகள்சரித்திரம் படைத்த சாதனைகள் என்பதினால்தான்நாம் அவரை ‘‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்'' என்று அழைத்தோம்அதை மகிழ்ச்சியோடுபெருமையோடு சொல்லக்கூடிய வாய்ப்பைப் பெற்றோம்.

சமூகநீதி நாள் என்று நமக்கு விழி திறந்த வித்தகரான தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளைக் கொண் டாடுகின்ற நேரத்தில்அதனுடைய தொடர்ச்சிதான் இந்த மணவிழா.

உங்களுக்கெல்லாம் வியப்பாக இருக்கும்.  அதனு டைய தொடர்ச்சிதான் என்று ஆசிரியர் சொல்கிறாரே என்று.

ஆம்தொடர்ச்சிதான்காரணம் என்னவென்றால்இந்த மணவிழாவைப் பொறுத்தவரையில்நம்முடைய அருமை கவிஞர் அவர்கள் சொன்னார்கள்இந்த மணவிழாவின் சிறப்பு என்ன என்பதை மற்றவர்களும் இங்கே சுட்டிக்காட்டினார்கள்.

முத்தையன் - நாகவள்ளி மணவிழாவினை

1990 ஆம் ஆண்டு நடத்தி வைத்தேன்!

முத்தையன் அவர்களுடைய மணவிழாவினை 1990 ஆம் ஆண்டில் நான்தான் நடத்தி வைத்தேன்இன்றைக்கு அவருடைய பிள்ளைகளுடைய திருமண விழாவினையும் நான் நடத்தி வைக்கி றேன்நிச்சயமாகஅவருடைய பேரப் பிள்ளை களுடைய மணவிழாவினையும் நடத்தி வைப்போம்.

இவருக்கு என்ன இவ்வளவு பெரிய பேராசை என்று நீங்கள் எல்லாம் நினைக்கலாம்அறிவியல் அந்த அளவிற்கு வளரும் என்கிற நம்பிக்கைதான்அறிவியலுடைய சாதனைதான்.

சராசரியாக இருந்த 20 வயது - இப்பொழுது 80 வயதாகி இருக்கிறது என்றால்அது அறிவியலினுடைய சாதனைதான்.

கரோனா காலகட்டத்தில்கூடநேரிடையாக சந்திக்க முடியாதவர்கள் - காணொலிமூலம் உலகம் முழுவதையும் ஒன்று திரட்டிநாம் பேசிக் கொண்டிருக்கின்ற அளவிற்கு வந்திருக்கிறது என்றால்இது முப்பது முக்கோடி தேவர்களுக்குத் தெரியாத விஷயம்நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகள் அறியாத செய்தியாகும்ஆனால்அறிவியல் நமக்கு அதைக் கொடுத்திருக்கிறது.

கொள்கையில் உறுதியாக இருக்கின்ற குடும்பம்!

மூன்று தலைமுறை என்று ஏதோ பெருமைக்காக சொல்லவில்லைஇதில் ஒரு கொள்கைப் பிரச்சினை இருக்கிறது - அதற்காகத்தான் நான் அதைச் சொன்னேன்மூன்று தலைமுறையாக இந்தக் குடும்பம் மாறாத குடும்பம் - அந்தக் கொள்கையில் உறுதியாக இருக்கின்ற குடும்பமாகும்.

தம்மின் தம்மக்கள் அறிவுடைமை என்று சொல்லக்கூடிய அளவிற்குஇவரைவிடஅவருடைய மகளுக்கு இன்னும் துணிச்சல்.

கனிமொழி அவர்கள் சீனாவிற்குச் சென்று படிக்கப் போகிறேன் என்று சொன்னபொழுதுநானேகூட கொஞ்சம் யோசனை செய்தேன்.

சரிகொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று சொன்னேன்.

அதெல்லாம் நான் கவலைப்படவில்லைநான் தைரியமாக இருப்பேன் என்றார்.

இந்தத் துணிச்சல் நம்முடைய பிள்ளைகளுக்கு வந்திருக்கிறதே - அங்கேதான் பெரியார் வெற்றி பெற்றார் என்று பொருள்.

எனவேபெரியாருடைய பிறந்த நாள் விழா நேற்று நடைபெற்றது - அதனுடைய தொடர்ச்சியே நம்முடைய கனிமொழி - சிறீஜித் ஆகியோருடைய மணவிழா.

இதில்முத்தையன் - நாகவள்ளியைப் பாராட்டுவது என்பதுஇவர்கள் வீட்டு மணவிழாவினை இந்த முறையில் நடத்துவது என்பது ஒரு பெரிய அதிசயமல்ல.

இதில் மகிழ்ச்சிக்குரிய செய்திபெருமைக்குரிய செய்தி என்னவென்றால்மணமகன் டாக்டர் சிறீஜித்அவருடைய பெற்றோரையும் மிகவும் பாராட்ட வேண்டும்.

அவருடைய பெற்றோர் கேரள மாநிலம் கொல் லத்தைச் சேர்ந்தவர்கள்அவருடைய பெற்றோர் நிறைய படித்தவர்கள் என்று கவிஞர் சொன்னார்.

படித்தவர்கள் மட்டுமல்ல - ஒருவரை ஒருவர் புரிந்தவர்கள்

இந்த மணமக்களைப் பொறுத்தவரையில்அவர்கள் படித்தவர்கள் மட்டுமல்ல - ஒருவரை ஒருவர் புரிந்த வர்கள்அதுதான் மிகவும் முக்கியம்.

இது ஒரு ஜாதி மறுப்புத் திருமணம் - மாநிலம் தழு விய அளவிற்குமாநில மறுப்பையும் சேர்த்து நடத்தியி ருக்கிறார்கள்இன்னும் ஒருபடி மேலே போயிருக் கிறார்கள்.

ஏற்கெனவே நடைபெற்ற முத்தையன் இல்ல மணவிழா ஜாதி மறுப்பு திருமணம்தான்அதைவிட கூடுதலாக மதிப்பெண் பெற்றிருக்கிறார் கனிமொழி.

மணமக்கள் இருவரும் ஒருவரையொருவர் காத லித்துபுரிந்து திருமணம் செய்துகொள்ளக் கூடிய அளவிற்குஒருமனதாயினர் தோழிதிருமண மக்கள் வாழி என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னதைப் போலஇவர்கள் இருக்கிறார்கள்.

இதற்கு முழு சம்மதம் கொடுத்துஎந்தவிதமான மறுப்பும் இல்லாமல்மகிழ்ச்சியோடு வந்து அமர்ந் திருக்கிறார்களே மணமகனின் பெற்றோர் - இவர்கள்தான் புது வரவுகள் - இவர்களை நாங்கள் இயக்கத்தின் சார்பில் பாராட்டுகிறோம் - வரவேற்கிறோம்அந்த உணர்வை நாங்கள் மதிக்கிறோம்.

ஜாதிக்கு ஓர் அடையாளம்கூட கிடையாது

இன்னுங்கூட சில பைத்தியக்காரர்கள் ஜாதியைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்இன்னமும் ஆணவக் கொலைகளை செய்கிறார்கள்ஜாதிக்கு ஓர் அடையாளம் கூட கிடையாதுஇங்கே  அமர்ந்திருக்கின்றவர்களில் யார் என்ன ஜாதி என்று சொல்ல முடியுமா?

தேர்தல் நேரத்தில் வேண்டுமானாலும் ஜாதியை ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வார்களே தவிர,  ஜாதியில் வேறொன்றும் கிடையாது.

எங்களைப் பொறுத்தவரையில்பெரியாருடைய கொள்கை ஜாதி மறுப்பு - ஜாதி ஒழியவேண்டும் - சமூகநீதி இருக்கவேண்டும் - அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும்.

நேற்று எடுத்த உறுதிமொழி,

யாதும் ஊரேயாவரும் கேளிர் என்பதாகும்.

யாவரும் கேளிர் என்கிற உறுதிமொழியினுடைய தொடர்ச்சிதான் இந்த மணவிழா.

எங்களை மதம் பிரிக்காது - ஜாதி பிரிக்காது - இடம் பிரிக்காது என்று சொல்லக்கூடிய அளவில் இது ஒரு சிறப்பான மணவிழா.

இந்தியாவிற்கே வழிகாட்டிய மாநிலம்  தமிழ்நாடு

சில பேருக்கு ஓர் ஆசை - இன்னும் ஜாதிப் பட்டத்தைப் போட்டுக்கொள்வதில்ஜாதிப் பட்டத்தை முதன்முதலாக ஒழித்து - இந்தியாவிற்கே வழிகாட்டிய மாநிலம் தமிழ்நாடுசெங்கற்பட்டு சுயமரியாதை மாகாண மாநாடு.

எல்லா வகையிலும் தாம்பரம் மிகச் சிறப்பானதுமுதன்முதலாக பெரியார் நகர் என்று உண்டானது தாம்பரத்தில்தான்.

அதேபோன்றுதிராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தவுடன்அய்யாவிற்கு என்ன செய்யப் போகிறீர்கள்என்று கேட்டவர்நம்மு டைய ஆதிமாறன் அவர்களுடைய தந்தையார் முனுஆதி அவர்கள்.

உடனே முதலமைச்சர் அண்ணா சொன்னார், ‘‘இந்த அமைச்சரவையே தந்தை பெரியார் அவர் களுக்குக் காணிக்கை'' என்று சொன்னார்.

சுயமரியாதைத் திருமண முறைக்குச் சட்ட வடிவம் கொண்டு வருவதற்கான வாய்ப்பை செய்தார்.

ஒரு கொள்கையினுடைய வெற்றிப் புன்னகை இம்மணமுறை!

ஆகவேஇந்த மணமுறை என்பது இது ஒரு கொள் கையினுடைய வெற்றிப் புன்னகைஅந்த வெற்றிப் புன்னகைதான் இந்த மணமுறை.

ஒவ்வொரு நாளும் இந்த மணமுறை சிறப்பாக வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றதுஎங்கோ சில இடங்களில் ஆணவக்கொலைகள் நடக் கின்றனகூலிப் படையை வைத்துக் கொலை செய் கிறார்கள்சொந்தப் பெண்ணை கொலை செய்கிறார்கள்சொந்தப் பிள்ளையை கொலை செய்கிறார்கள்ஜாதி வெறி இன்னமும் இருக்கிறது என்பதை நாங்கள் மறைக்கவில்லைமறுக்கவில்லைஇன்னமும் பெரியார் தேவைப்படுகிறார்.

ஏனென்றால்என்னதான் கரோனா தொற்று முழு மையாக முடிவிற்கு வந்துவிட்டாலும்நாம் எச்சரிக் கையாக இருக்கிறோம் அல்லவா - மூன்றாவது அலை வருகிறதாநான்காவது அலை வருகிறதாஎன்று.

அதுபோன்றுஜாதி வெறிமதவெறி என்பதையும் எத்தனையாவது அலை வருகிறது என்று பார்க்கக் கூடிய அளவில் இருக்கிறோம்.

ஒரு குடும்பம் போன்று இங்கே கூடியிருக்கிறோம்

ஆனால்இந்த மணவிழாவில் பாருங்கள்அந்தப் பிரச்சினையே இல்லைஜாதிக்கு அப்பாற்பட்டுமதத்திற்கு அப்பாற்பட்டுஎல்லோரும் அண்ணன்தம்பிகளாகஉறவுகளாக - யாவரும் கேளிர் - இந்த அரங்கத்தைப் பார்த்தாலே தெரியும்எல்லா தரப்பு மக்களும் ஈர்க்கப்பட்டு இருக்கிறார்கள்ஒரு குடும்பம் போன்று இங்கே கூடியிருக்கிறோம்.

இதுதான் தந்தை பெரியாருடைய சாதனை - இதனால்தான்சமூகநீதி நாளாக நாம் பெரியார் பிறந்த நாளைக் கொண்டாடவேண்டும் என்று சொன்னதி னுடைய தத்துவம் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

அருமை நண்பர்களேஉங்களுக்கு ஒரு தகவலுக்காக சொல்கிறேன்,

‘‘என்னங்கமுன்பு மாதிரி இல்லையேஇப்பொழுது எங்கே பார்த்தாலும் ஜாதிக்கலவரம் நடைபெறுகிறதே'' என்று கேட்கிறார்கள்.

அவர்களுக்கு நான் சொன்னேன்ஓராண்டில் எத் தனை ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெறுகின்றன என்பது தெரியுமாவிளம்பரங்கள் இல்லாமல் நூற்றுக் கணக்கான ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெறு கின்றனஆனால்அங்கொன்றும்இங்கொன்றும் ஜாதிக் கலவரங்கள் நடைபெறுகின்றன.

பாதுகாப்பாகப் போய் சேர்ந்தது செய்தி அல்லவிபத்து ஏற்பட்டால்தான் செய்தியாகும்

சாலையில் ஆயிரக்கணக்கான கார்கள் ஓடிக் கொண்டிருக்கின்றனசில இடங்களில் விபத்து நடக்கிறதுவிபத்து நடக்காத நாளில்லைசாலைகளில் கார்கள் எவ்வளவு போகின்றன என்பதைக் கணக்கெடுத்துவிபத்து எத்தனை சதவிகிதம் நடைபெறுகிறது என்று பார்த்தால்ஒரு சதவிகிதம் அல்லது ஒன்றரை சதவிகிதம்தான் இருக்கும்.

ஆனால்பாதுகாப்பாகப் போய் சேர்ந்தது செய்தி அல்லவிபத்து ஏற்பட்டால்தான் செய்தியாகும்அது போன்றுதான் ஆணவக்கொலைஜாதிக்கலவரம் போன்றவை.

உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன்இங்கே பெரியார் திடலில்பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் இருக்கிறதுஇந்நிறுவனம் விளம்பரம் இல் லாமல்தொலைக்காட்சியில் விளம்பரம் கொடுப்ப தில்லைஅதை ஒரு தொழிலாகவும் செய்வதில்லை.

மணமக்களைப் பார்த்து ஏற்பாடு செய்வது எங் களுக்குத் தொழில் இல்லைதொண்டுகொள்கைப் பணியாகத்தான் செய்கின்றோம்.

பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் தோழர் பசும்பொன் செந்தில்குமாரி அவர்களிடம் ஒரு புள்ளிவிவரம் கேட்டேன்அவர்களும் கொடுத்தார்கள்.

இந்த ஆண்டு கரோனா காலம் என்பது உங்களுக் கெல்லாம் தெரியும்.

2021 ஜனவரி மாதத்திலிருந்து செப்டம்பர் 18 ஆம் தேதிவரை 293 மணவிழாக்கள்!

2021 ஜனவரி மாதத்திலிருந்து செப்டம்பர் 18 ஆம் தேதி காலைவரை நடைபெற்ற இணையேற்பு நிகழ்ச்சி கள் 293 ஆகும்.

இதில்ஜாதி மறுப்பு திருமணங்கள் 256.

எந்தவிதமான விளம்பரமும் இல்லாமல் நடைபெற்று இருக்கிறதுபெரிய ஏற்பாடுகள் எதுவும் இல்லாமல்பதிவு செய்கிறார்கள்அய்யா சிலை முன் ஒளிப்படம் எடுத்துக்கொள்கிறார்கள்சிலர் என்னிடமும் வந்து ஒளிப்படம் எடுத்துக் கொள்வார்கள்.

வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் இணையேற்பு விழா - 18.

அதேபோலபார்ப்பனர்கள் உள்பட இணையேற்பு விழா - 12.

இத்திருமண நிலையத்திற்கு வருகிறவர்களுக்கு வயது தகுதி இருக்கிறதாபிறப்பு சான்றிதழ்களை யெல்லாம் பார்த்துசட்டப்படி சரியாக இருந்தால்தான் மணவிழாவை நடத்தி வைப்பார்கள்.

அதேபோலமணமுறிவு ஏற்பட்டு மறுபடியும் மறுமணம் நடந்தது - 7.

இப்படி அமைதியாகஅடக்கமாக பெரியார் வென்று கொண்டிருக்கிறார்.

‘‘ஒரு காலத்தில் வீட்டைக் கட்டிப் பார்திருமணத்தை செய்து பார்'' என்று சொல்வார்கள்ஆனால்இன்றைய காலகட்டத்தில் அவையெல்லாம் எளிமையாக நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன.

அந்த வகையிலேஇந்த மணமுறை அதனுடைய தொடர்ச்சியாகும்.

எனவேதான்பெரியாருடைய பிறந்த நாளான - சமூகநீதி நாளில்அவருடைய கொள்கை எப்படிப்பட்டது என்று சொன்னால்மணமக்கள் இருவரும் டாக்டர்கள்.

சமஸ்கிருதம் தெரிந்திருந்தால்தான்மருத்துவக் கல்லூரிகளுக்கு மனுவே போட முடியும்!

ஒருகாலத்தில் நாமெல்லாம் மருத்துவப் படிப்பு படிக்க முடியுமாசமஸ்கிருதம் தெரிந்திருந்தால்தான்மருத்துவக் கல்லூரிகளுக்கு மனுவே போட முடியும்இந்த செய்திஇன்றைக்கு இருக்கின்ற பல டாக்டர் களுக்குக் கூட தெரியாது.

நீதிக்கட்சி ஆட்சி வந்து அந்த முறையை நீக்கியதால்தான் நம்மவர்கள் எல்லாம் டாக்டர்களாக முடிந்தது.

பழைய முறையை வேறு முறையில் கொண்டு வரவேண்டும் என்பதற்காகத்தான் நீட் தேர்வு என்ற வலையை விரித்திருக்கிறார்கள்அதனை எதிர்த்துப் போராடக் கூடிய அளவில் நாம் தீவிரமாக இருக்கிறோம்.

நம்முடைய மணமக்கள் டாக்டர் கனிமொழி - டாக்டர் சிறீஜத் ஆகியோர் சிறப்பான வகையில் இன் றைக்கு மணவிழாவினை நடத்திக் கொள்வதற்கு வந்திருக்கிறார்கள் என்றால்மிகவும் பாராட்டுக்குரியதுஅதேபோன்றுஅவருடைய பெற்றோர் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்.

முத்தையனுக்கும் - நாகவள்ளிக்கும் எந்தவிதமான வேலையையும் பேத்தி கொடுக்கவில்லை

நம்முடைய முத்தையனுக்கும்நாகவள்ளிக்கும் எந்தவித வேலையையும் கொடுக்கவில்லை நம்முடைய டாக்டர் கனிமொழி அவர்கள்.

ஏனென்றால் நம் நாட்டில்பண் குழந்தையை வளர்த் தால் சரியான நேரத்தில்அந்தப் பெண்ணுக்கு எல்லாமே நடைபெறவேண்டுமே என்கிற கவலை எல்லா பெற் றோருக்கும் உண்டுஅந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம்நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லுகிற அளவிற்குநம்முடைய பிள்ளைகள் பக்கு வமாகிஇன்றைக்கு அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி.

இந்தப் பேத்தி கனிமொழி மிகவும் புத்திசாலித்தனமான பேத்திஒரு நல்ல பேரனையும் பிடித்துமிகப்பெரிய அளவிற்கு சிறப்பான வாழ்க்கையைத் தேடிக் கொண்டிருக்கிறார்.

ஆகவேஅந்த அளவிற்கு அருமையான மணவிழா வினை நடத்தி வைப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

சடங்கு - சம்பிரதாயம் இல்லாமல் மகிழ்ச்சியாக நடைபெறுகிற மணவிழா!

பொதுவாக வைதீக முறையில் நடைபெறும் மண விழாக்களில்,  மாங்குச்சி சுள்ளிகளைப் போட்டுக் கொளுத்திபுகையைப் போட்டுசடங்கு சம்பிரதா யங்களை செய்யும்பொழுது மணமக்கள் கண்களை கசக்கிமிகவும் சங்கடமாக அமர்ந்து கொண்டிருப்பார்கள்.

ஆனால்,  இந்த மணவிழா முறையில்சடங்குசம்பிரதாயம் இல்லாமல் எளிமையாக நடைபெறுகிறதுமணமக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

முத்தையன் அவர்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பதினால்இவ்வளவு ஆடம்பரமாக நடைபெறு கிறதுஇல்லையென்றால்இவ்வளவு பேர் தேவையே இல்லை என்பதுதான் இந்த மணவிழாவின் தத்துவம்.

ஆகவேதான்இந்த மணமக்களைப் பொறுத்த வரையில்,

அன்பான மணமக்களே,

அறிவுரை அல்ல - வேண்டுகோள்!

நான் எப்பொழுதும் மணமக்களுக்கு அறிவுரை கூறுவதில்லைஏனென்றால்இன்றைய இளைஞர்கள் அறிவுரையை விரும்புவதில்லைஅவர்களுக்கு அறிவுரை தேவையும் இல்லை.

வேண்டுகோளாகத்தான் அவர்களுக்குச் சொல் வேன்.

வாழ்க்கையில் நீங்கள் எந்த அளவிற்கு உயர்ந்தாலும்உங்கள் பெற்றோரை மறந்துவிடாதீர்கள்.

உங்கள் பெற்றோரிடம் அன்பு காட்டுங்கள்பாசம் காட்டுங்கள்.

எளிமையாக வாழுங்கள்எளிமை - இனிமை - அதனை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

தன்முனைப்பு இல்லாமல் வாழுங்கள்சிறப்பான வாழ்க்கை வாழுங்கள்.

அறிஞர் அண்ணா அவர்கள் மிகச் சிறப்பாக சொன் னார், ‘‘விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை-

கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை'' என்பதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒருவருக்கொருவர் நீங்கள் விட்டுக் கொடுத்து வாழுங்கள்.

தோற்றுப் போவதில் முந்திக்கொள்ளுங்கள்!

விளையாட்டில்தான் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு கொடுப்பார்கள்தேர்தலிலும் வெற்றி பெற்றவர் களைத்தான் சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.

ஆனால்வாழ்க்கை என்பது அப்படியில்லைஒருவருக்கொருவர் நீங்கள் முந்திக்கொண்டுயார்யாரிடம் தோற்பது என்பதில் போட்டி போடுங்கள்அதுதான் உங்களுடைய வாழ்க்கையை சிறப்பான வாழ்க்கையாக மாற்றும் என்பதை எடுத்துச் சொல்லி,

வாழ்க்கை இணையேற்பு விழா உறுதிமொழியை நான் கூறமணமக்கள் செல்வர்கள் கனிமொழி - சிறீஜித் இருவரும் பின்பற்றிக் கூறிமணவிழாவினை நடத்திக் கொள்வார்கள்.

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த் துரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக