ஞாயிறு, 10 அக்டோபர், 2021

கரோனாவைவிட ஆபத்தானது ஆர்.எஸ்.எஸ்.- ஆர்.எஸ்.எஸின் அஜெண்டா வேறு; ஹிடன் அஜெண்டா வேறு - தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

 

இதை விளக்குவதுதான் ‘‘ஆர்.எஸ்.எஸ்என்னும்  டிரோஜன் குதிரை'' - நூல் வெளியீட்டு விழாவில் நூலாசிரியர் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

சென்னைசெப்.19- கரோனாவைவிட ஆபத்தானது ஆர்.எஸ்.எஸ்.; ஆர்.எஸ்.எஸின் அஜெண்டா வேறுஹிடன் அஜெண்டா வேறுஇதை விளக்குவதுதான் ‘‘ஆர்.எஸ்.எஸ்என்னும் டிரோஜன் குதிரை''  என்று அந்நூல் வெளியீட்டு விழாவில் நூலாசிரியர் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

‘‘ஆர்.எஸ்.எஸ்எனும் டிரோஜன் குதிரை’’

புத்தக வெளியீட்டு விழா!

கடந்த 8.9.2021  அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற ‘‘ஆர்.எஸ்.எஸ்என்னும் டிரோஜன் குதிரை'' புத்தக வெளியீட்டு விழாவில்திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

‘‘ஆர்.எஸ்.எஸ்என்னும் டிரோஜன் குதிரை'' என்ற புத்தக வெளியீட்டு விழாவின் தலைவரும்திராவிடர் கழகத் துணைத் தலைவருமான மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய அருமைத் தோழர் திராவிடர் மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே,

நாடாளுமன்ற உறுப்பினர் அன்பிற்குரிய அருமைத் தோழர் தயாநிதி மாறன்

இந்நிகழ்வில் நம் அழைப்பை ஏற்று இங்கே வந்து சிறப்பாக   ‘‘ஆர்.எஸ்.எஸ்எனும் டிரோஜன் குதிரை’’ புத்தகத்தை வெளியிட்டு ஓர் அருமையான உரையை நிகழ்த்தி விடைபெற்று சென்றிருக்கக்கூடிய இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அன்பிற்குரிய அருமைத் தோழர் தயாநிதி மாறன் எம்.பி., அவர்களே

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி.

அதேபோலஎப்பொழுதும் பெரியார் திடலுக்கு உரியார் என்ற பெருமையை உடைய நம்முடைய அன் புச் சகோதரர்திராவிட இயக்கத்தினுடைய மூன்

றாவது குழலாக இருக்கக்கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் - நாம் அழைத்தபொழுதெல்லாம் எங்கிருந்தாலும்எப்படியும் வந்து சேருவேன் என்ற முறையில்இங்கு வந்து ஓர் அற்புதமான ஆய்வுரையை ஆற்றியுள்ள அருமைச் சகோதரர் மானமிகு எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி.,  அவர்களே,

இந்நிகழ்ச்சியில் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு சிறப்பாக உரையாற்றிய அருமைச் சகோதரர் வழக்குரை ஞர் இராஜீவ் காந்தி அவர்களேவழக்குரைஞரும்இந்தத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினருமான அன்பிற்குரிய சகோதரர் பரந்தாமன் அவர்களே,

இன்றைக்கு சட்டமன்ற நிகழ்ச்சி இரவு 9 மணிவரை யில் நடைபெறுகின்ற காரணத்தினால்நம்முடைய மாண்புமிகு அறநிலையத் துறை அமைச்சரும்இந்தத் திடலுக்கு உரியவருமான அருமைச் சகோதரர் சேகர்பாபு அவர்கள்தன்னுடைய கடமையை ஆற்றிக் கொண் டிருக்கிறார்அவர் இந்நிகழ்ச்சிக்கு வந்தாலும்வராவிட் டாலும் இப்பொழுது அவரை எப்படிப் பார்க்கிறார்கள் என்று உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

இந்தியாவிலுள்ள மாநிலங்களிலேயே முதல் இடத்தைப் பெற்றிருக்கின்ற முதலமைச்சர்

அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கிபெண் களையும்  ஓதுவராக்கிஓர் அமைதிப் புரட்சியை அற நிலையத் துறையில் செய்கின்றபொழுதுதொடக்கத்தில் நீதிக்கட்சியை நடத்திய நேரத்தில் பிரீமியர் என்று அழைக்கப்பட்ட முதலமைச்சர் பனகல் அரசர் அவர்கள் எப்படி ஒரு புரட்சியை செய்தார்களோஅதே புரட்சியைஇந்தியாவிலுள்ள மாநிலங்களிலேயே முதல் இடத்தைப் பெற்றிருக்கின்ற முதலமைச்சர், 150 நாள்களிலேயே நிரூ பித்திருக்கின்ற சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுடைய ஆட்சி யில்மிகச் சிறப்பான ஒரு திருப்பத்தைக் கொடுத்துஒரு சமூக மாற்றத்தை நிகழ்த்தி - தந்தை பெரியாருக்கு இறுதி மரியாதையை  அரசு மரியாதையாக நான் அளித்தேன் - ஆனால்அவருடைய நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றவில்லையே என்று வருத்தப்பட்டார் முத்தமிழ றிஞர் கலைஞர் அவர்கள்அவருடைய வருத்தத்தைப் போக்கும் வகையில்பெரியார் நெஞ்சில் தைத்த முள் ளையும் அகற்றிஅதையும் தாண்டிநம் நெஞ்சங்களில் எல்லாம் மகிழ்ச்சிக் கொள்ளக்கூடிய அளவிற்குநேற்று முன்தினம் அவர்கள் சிறப்பான ஒரு வரலாற்றுப் பிர கடனத்தை செய்திருக்கிறார்கள்அதைத்தான் இங்கே உரையாற்றிய அத்தனை தோழர்களும் சொன்னார்கள்எழுச்சித் தமிழர் அவர்களும் சொன்னார்கள்.

வருகின்ற செப்டம்பர் 17 ஆம் தேதியன்றுபெரியார் பிறந்த நாள் என்பது ஒரு சிறந்த எடுத்துக்காட்டான நாளாக இருக்கும்வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டிய நாளாக இருக்கும்.

எப்படி என்றால்அது சமூகநீதி நாளாகதமிழ்நாடு அரசாலே கொண்டாடப்படும் என்று அவர்கள் பிரகட னப்படுத்தியதோடுஅந்த நாளில்வெறும் பிரகடனத் தோடு நிறுத்திவிடாமல்தலைமைச் செயலகத்தில் தொடங்கிஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும்கல்வி நிலையங்களிலும் உறுதிமொழி ஏற்று சூளுரை ஏற்கக் கூடிய நாளாக இருக்கும் என்று சொல்லிஅற்புதமான ஒரு முயற்சியை செய்திருக்கிறார்.

தமிழ்நாடு தொடங்கும் - இந்தியா அதனைப் பின்பற்றும்!

எப்பொழுதுமே தமிழ்நாடு தொடங்கும் - இந்தியா அதனைப் பின்பற்றும்அதுதான் வரலாறு.

அந்த வகையிலே நண்பர்களேநாம் விரைவில் பார்க்கப் போகிறோம்அடுத்தடுத்து வரக்கூடிய பெரியார் பிறந்த நாள் விழாவில்இன்றைக்கு நம்முடைய சமூகநீதிக்கான சரித்திர நாயகராக இருக்கின்ற நம்மு டைய முதலமைச்சர் அறிவித்திருக்கின்ற இந்த அறி விப்புஇந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களிலும்ஏன் ஒன்றிய அரசுகூட அறிவிக்கின்ற நாள் தொலைதூரத்தில் இல்லை என்பதை நாம் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

ஏனென்றால்சமூகநீதி என்பது இன்றைக்கு அனை வருக்கும் உரிய மூச்சுக் காற்றுஅதைத்தான் இங்கே அழகாக எழுச்சித் தமிழர் அவர்களும்தோழர்களும் எடுத்துச் சொன்னார்கள்.

அந்த சமூகநீதி நாள் என்பதை இந்தியாவுக்கே கொடுத்த பெருமை தந்தை பெரியார் அவர்களுக்கு.

முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் பயன்  இந்தியா முழுவதற்கும் கிடைத்தது

உங்களுக்குத் தெரியும்கம்யூனல் ஜி.செல்லாது என்று உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பைஉச்சநீதி மன்றம் உறுதி செய்த பிறகும்கூடதந்தை பெரியார் தொடங்கிய அந்தப் போராட்டம் - கம்யூனல் ஜி.என் றாலேபாதிக்கப்பட்டுள்ள நம்முடைய உரிமை பறிக் கப்பட்டதே - மீண்டும் அந்த உரிமை நமக்குக் கிடைக்க வேண்டும் கல்வியிலேஉத்தியோகத்திலே என்ற அந்த சிறப்புக்காக நடந்தாலும்அதனுடைய பயன் யாருக்குக் கிடைத்தது என்று சொன்னால் நண்பர்களேமுழுக்க முழுக்க அதன் பயன்  இந்தியா முழுவதற்கும் அந்த முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூல மாகக் கிடைத்தது.

இந்தியா முழுமைக்கும் பெரியார் என்பதுதான் சிறப்பானதுஎனவேநமக்காக மட்டும்தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல அந்தப் பயன்.

தமிழ்நாட்டிற்கு உருவான வெளிச்சம்தமிழ்நாட்டிற்கு உருவான மருந்து - எப்படி ஓர் ஊரில் கண்டுபிடிக்கப்பட்ட மருந்துஉலகுக்கே பயன்படுகிறதோ - அதுபோல ஓர் அற்புதமான வகையில் நடந்தது.

விடியலை நாம் தேடியிருக்கிறோம்!

அதுபோலஇன்றைய ஆட்சியிலும், 27 சதவிகிதம் - அதுபோலஏற்கெனவே இட ஒதுக்கீடு சரியாகப் பின்பற்றப்படாத ஒரு சூழல்அதற்கெல்லாம் விடியலை நாம் தேடியிருக்கிறோம்.

இன்றைக்கு அந்த வழக்கு நிலுவையில்தான் இருக் கிறதுமருத்துவ கல்லூரி சம்பந்தமான அந்த வழக்குஆனாலும்அதற்கிடையில் நாம் இந்தியா முழுவதற்கும் கட்டுப்படுத்தக் கூடிய அளவிற்குஅந்தத் தொகுப்பி லிருந்து முதன்முறையாக நாங்கள் ஒதுக்கமாட்டோம் என்று சொன்னதை மாற்றி, ‘‘நீங்கள் கொடுத்தாக வேண்டும்இல்லையானால்பதில் சொல்லவேண்டும்'' என்று சொன்னவுடன்அதனை மாற்றிக் காட்டினார்கள்.

சமூகநீதியினுடைய மீட்டுருவாக்கம் நடந்திருக்கிறது

அதுமட்டுமல்ல நண்பர்களே, 102 ஆவது அரசமைப் புச் சட்டத் திருத்தத்தை இரண்டாண்டுக்கு முன்பாகக் கொண்டு வந்தார்கள் - அதனுடைய கேட்டை நாம் தொடர்ந்து எடுத்துச் சொன்னதினுடைய விளைவாக - 102 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின்மூலமாக - மாநிலங்களுடைய உரிமைகளைப் பறிக்க உங்களுக்கு உரிமையில்லைபிற்படுத்தப்பட்டவர் யார்என்று அடையாளம் கண்டு சொல்லக்கூடிய உரிமை மாநிலங் களுக்கு உண்டுஅந்த உரிமையை, 102 ஆவது அரச மைப்புச் சட்டத் திருத்தத்தின்மூலமாகப் பறித்துக் கொண்டு விட்டீர்கள்அதனை நாங்கள் போராடிபெற்றுத்தான் தீருவோம் என்று சொன்ன நிலையில்தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகஅந்தப் போராட்டத்தை நடத்தி யதினுடைய விளைவாகத்தான் நண்பர்களே,  இழந்ததை மீண்டும் பெற்றிருக்கிறோம்பறிகொடுத்ததை மீட்டிருக்கி றோம்எனவேசமூகநீதியினுடைய மீட்டுருவாக்கம் நடந்திருக்கிறது.

எனவேசமூகநீதி நாள் என்பது வெற்று உரையல்லவெறும் பிரகடனமல்லசெயல் திட்டத்தினுடைய மலர்ச்சிஅந்த செயல் திட்டம் இந்தியா முழுவதற்கும் கலங்கரை வெளிச்சம்போல - கப்பல்கள் வருவதற்கு வழிகாட்டுவதுபோல -  சமூகநீதி கப்பல் தங்குதடையின்றி களத்திலே அவர்கள் செல்லக்கூடிய அளவிற்கு வாய்ப்புகளை உருவாக்கக் கூடிய ஒன்று.

இஸ்மாயில் ஆணையம் அதற்குச் சாட்சி!

ஆகவேஅப்படிப்பட்ட மகிழ்ச்சியான சூழ்நிலையில், ‘‘ஆர்.எஸ்.எஸ்எனும் டிரோஜன் குதிரை’’ புத்தகம் என்பது சாதாரணமானதல்லவெளிப்படையான ஆபத்துகளைக் கண்டுபிடிப்பது என்பது வேறுமறை முக ஆபத்துகளைக் கண்டுபிடிப்பது என்பது வேறுஇங்கே நம்முடைய தயாநிதி மாறன் அவர்கள் மிக அற்புதமாக சொன்னார்கள்எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி என்னவென்றால்நானும்முரசொலி மாறன் அவர்களும் சிறைச்சாலையில் ஒன்றாக இருந்தவர்கள்நம்முடைய முதலமைச்சர் போன்றோர் எல்லாம் சிறைச் சாலையில் தாக்கப்பட்டது எல்லோருக்கும் தெரியும்இஸ்மாயில் ஆணையம் அதற்குச் சாட்சிஇன்றைக்கு அதையே கூட சில பைத்தியக்காரர்கள் அவர் மிசா விலே கைதாகவில்லை என்று சொல்லிதங்களுடைய அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடிய அளவிற்கு இருக்கிறதுஇது ஒருபுறம் இருக்கட்டும்.

ஆனால்அதையும் தாண்டிஇன்றைக்கு ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டு இருக்கக்கூடிய அளவில்நல்ல மாறுதல் ஏற்பட்டு இருக்கிறது.

அப்பொழுது முரசொலி மாறன் அவர்களும்நானும் மிசா கைதியாக சென்னை மத்திய சிறைச்சாலையில் ஓராண்டு காலத்திற்கு இருந்தோம்சிறைச்சாலையில் இருந்த காவல்துறை அதிகாரிகள், ‘‘இனிமேல் நீங்கள் வெளியுலகத்தையே பார்க்க முடியாது'' என்று அச்சுறுத் தினார்கள்அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தான் நாங்கள் எல்லோரும் இருந்தோம்.

இங்கே எழுச்சித் தமிழர் சொன்னதுபோன்றுசிறைச் சாலை ஒரு நல்ல வாய்ப்புபல நேரங்களில்கொடு மைகள் இருந்தாலும்அந்தக் கொடுமைகளைப்பற்றி கவலைப் படவில்லை.

அது ஓர் அருமையான கசப்பு அனுபவங்கள்அதை அனுபவித்த பிறகுவாழ்க்கையில் நாங்கள் எதையும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்.

சிறைச்சாலையில் மூன்று மாதங்களுக்குப் பிறகுபத் திரிகைகளைப் படிப்பதற்காகக் கொடுத்தார்கள்விடு தலை அலுவலகத்திலிருந்து எல்லா பத்திரிகைகளையும் எனக்கு வாங்கி அனுப்புவார்கள்.

அந்தப் பத்திரிகைகளில் குறிப்பாக விடுதலைமுர சொலி பத்திரிகைகளில்நிறைய கருப்பு மை தடவப்பட் டிருக்கும்ஏனென்றால்அந்தச் செய்திகளை நாங்கள் எல்லாம் படிக்கக்கூடாது என்பதற்காக.

நீதிக்கட்சிதிராவிட இயக்க வரலாற்றைப்பற்றி நீங்கள் எழுதுங்கள் என்றேன்!

இன்னும் சில நாள்கள் கழித்துபுத்தகங்களைப் படிப் பதற்காகக் கொடுத்தார்கள்அப்பொழுது ‘விடுதலைநாளிதழின் பழைய தொகுப்புகளை - பைண்ட் செய்தவற்றைக் கொடுக்கச் சொல்லிதிராவிடர் இயக்க வரலாற்றைப் பற்றி எழுத ஆரம்பித்தோம்ஏனென்றால்நிறைய நேரம் இருக்கும்.

தோழர் முரசொலி மாறன் அவர்கள், ‘‘நீங்கள் படித்துவிட்டுஎனக்கும் கொடுங்கள்சில முக்கிய குறிப்புகளை எடுப்பதற்கு வசதியாக இருக்கும்'' என்றார்.

உடனே நான் அவரிடம், ‘‘நான் வகுப்புரிமையைப்பற்றி எழுதுகிறேன்நீதிக்கட்சிதிராவிட இயக்க வரலாற் றைப்பற்றி நீங்கள் எழுதுங்கள்'' என்று சொன்னேன்.

இந்த சம்பவத்தை அவர் திராவிட இயக்க வரலாற்று நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆகவேஅந்த முறையில் பயன்படக் கூடிய அளவிற்கு அந்த வாய்ப்புகள் வந்தன.

அவருடைய காலத்தில்திராவிட இயக்க வரலாறுமாநில சுயாட்சிபற்றியெல்லாம் புத்தகம் எழுதினார் முரசொலி மாறன் அவர்கள்.

வாரிசு அரசியல்வாரிசு அரசியல் என்று சொல் கிறார்களேதிராவிட இயக்கம் என்றாலேகொள்கைப் பொழில் பூத்துக் குலுங்கும்பிள்ளைகள் வேறொரு கட்சியில் இருக்கவேண்டும் என்பதில்லைஇதே கொள்கைகள் பாரம்பரியமாக வரும்.

அந்த வகையில்தயாநிதி மாறன் அவர்கள் இன் றைக்கு ஓர் அற்புதமான ஓர் உரையை ஆற்றினார்நான் அவரிடம் சொன்னேன், ‘‘ஏன் உங்களை அழைத்தோம் என்றால்இது அடுத்த தலைமுறை - இராஜீவ் காந்திபரந்தாமன்நம்முடைய எழுச்சித் தமிழர் போன்றவர்கள் அடுத்த நிலையில் வந்தவர்கள்இவர்களுடைய கையில்பெரியார் ஏந்திய சமூகநீதிச் சுடரை அப்படியே கொடுத்துவிட்டோம்மிக பாதுகாப்பாக அதனை எடுத்துச் செல்கிறார்கள்இவர்கள் எல்லாம் இந்தப் போரில் ஒரு பெரிய தளகர்த்தர்கள்போர் நடந்துகொண் டிருக்கிறதுஇன்னும் முடியவில்லை'' என்று குறிப் பிட்டேன்இறுதியான லட்சியப் போர் இன்னும் இருக் கிறதுஅந்தப் போருக்கு ஆயுதங்கள் வேண்டும் அல்லவாபழைய காலத்து ஆயுதங்களான ரதகஜதுரக படைகள் எல்லாம் இப்பொழுது கிடையாதுகண்ணிவெடிகளைப் புதைத்து வைத்திருப்பார்கள்எங்கேயோ அமர்ந்துகொண்டு ரிமோட் கண்ட்ரோல் மூலம் அதனை இயக்குவார்கள்ஆகவேஅப்படிப்பட்ட நிலையில்அதனைக் கண்டுபிடிக்கக்கூடிய ஆயுதங்கள் தேவை.

பெரியாரின் போர் முறை!

அறிஞர் அண்ணா அவர்கள் மிக அழகாகச் சொன்னார்பெரியாரின் போர் முறை என்பது மற்றவர் களுடைய போர் முறைக்கும்பெரியாருடைய போர் முறைக்கும் வித்தியாசம் உண்டுமற்றவர்களுடைய போர் முறை என்பதுகண்ணுக்குத் தெரிந்த எதிரிகளுடன் போராடுவதுபெரியாருடைய போர் முறை என்பதுகண்ணுக்குத் தெரிந்த எதிரிகளுடனும்கண்ணுக்குத் தெரியாத எதிரிகளுடனும் போராடுவதுதான்மூல பலம் எங்கே இருக்கிறது என்று தெரிந்துஅதனை முறியடிப்பதுதான் பெரியாருடைய போர் முறைஅந்த மூல பலம்தான் ஆர்.எஸ்.எஸ்இன்றைக்கு.

எனவேதான், ‘‘ஆர்.எஸ்.எஸ்என்னும் டிரோஜன் குதிரை’’ புத்தகம் இன்றைக்கு இங்கே வெளியிடப்பட்டு இருக்கிறதுஇங்கே எழுச்சித் தமிழர் அழகாக சொன் னார்ஆர்.எஸ்.எஸ்.தான் பிள்ளை பிடிக்கின்ற இயக்கம் என்றுபிள்ளை பிடிக்கின்ற இயக்கமட்டுமல்ல நண் பர்களேஅவர்களின் மறைமுகத் திட்டத்தில் ஒன்றையும் சொல்கிறேன்எங்களுடைய பிள்ளைகளைப் பிடிக்க முடியாதுஇந்தப் பிள்ளைகளை யாராலும் பிடிக்க முடி யாதுதமிழ்நாட்டுப் பிள்ளைகளை எவராலும் பிடிக்க முடியாது.

அந்த நிலையில்பிள்ளைகளை பிடிக்க முடியாது என்றவுடன்அவர்களுடைய தந்திர வியூகங்கள் எப் படிப்பட்டவை என்றால்பிள்ளையையும் கிள்ளிவிட்டுதொட்டிலையும் ஆட்டக்கூடியவர்கள்இதுதான் நம்ப வைத்து கழுத்தை அறுப்பதினுடய இன்னொரு பாகம்.

பெரியார் எரிமலையாக இருக்கிறார்எரிமலையிடம் நெருங்க முடியாது

ஆகபிள்ளையையும் கிள்ளிவிட்டுதொட்டிலையும் ஆட்டுவார்கள்இன்றைக்கு அதுதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

திடீரென்று அம்பேத்கர்மீது பக்தி அவர்களுக்குஅம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடுகிறார்கள்பெரியாரி டம் மட்டும்தான் அவர்களால் நெருங்க முடியவில்லைகாரணம்பெரியார் எரிமலையாக இருக்கிறார்எரிமலையிடம் நெருங்க முடியாதுஇமயமலையில்கூட ஏறிவிடலாம்எரிமலையிடம் வரவே முடியாது.

பெரியார் என்கிற போராயுதம் - பேராயுதம் என்பது அது மேலெழுந்தவாரியாகப் போகாது - அதை மிகச் சிறப்பாக நம்முடைய  அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள், ‘‘ஈட்டி எட்டிய வரையில் பாயும்பணம் பாதாளம் வரை பாயும்எங்கள் பெரியாரின் கொள்கைகள் இருக்கிறதேஅது அண்ட பிண்ட

சராசரங்கள் அத்தனையும் பாய்ந்துஅதற்கப்பாலும் பாயும்'' என்பார்.

அதற்குரிய வாய்ப்பை மக்களிடம் சொல்லவேண்டும்இன்றைய இளைஞர்களுக்குச் சொல்லவேண்டும்அவர்கள் ஏமாந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் ‘‘ஆர்.எஸ்.எஸ்எனும் டிரோஜன் குதிரை’’ புத்தகம்.

ஏமாற்று வேலையை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்

டிரோஜன் குதிரை என்பது என்னவென்றால்பெரிய மரக்குதிரை வருகிறதுவருகிறது என்று சொன்னவுடன்மிக ஆவலுடன் எல்லோரும் பார்த்தால்இவர்கள் குதிரையை மட்டும்தான் பார்த்தார்கள்குதிரையை நகர்த்திக்கொண்டு டிராய் நகருக்குள் போகிறார்கள்இந்தப் புத்தகத்தை வாங்குகிறவர்கள் அதனுடைய அட்டைப் படத்தை நன்றாகப் பார்க்கவேண்டும்விமானத்தின் பின்பக்கம் திறந்தவுடன்கீழே நிறைய பேர் பாராசூட்டில் பறப்பார்கள் பாருங்கள்அதுபோன்றுஅந்த மரக்குதிரையிலிருந்து நிறைய ஆட்கள் வெளியே குதித்துஅந்த நகரத்தைக் கைப்பற்றுகிறார்கள்அதுதான் அதனுடைய உருவகம்.

அந்த உருவகம் போன்றுஇது ஏமாற்று வேலைஅந்த ஏமாற்று வேலையை நன்றாக நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதுதான் அதற்கு அடையாளம்.

இங்கே சொன்னார்கள் அல்லவா - ‘‘மண்டல் - கமண்டல்.

ரத யாத்திரை - ரத்த யாத்திரை'' என்று!

பெரியாருடைய நுண்ணாடிமூலமாகப் பார்த்தால்தான் தெரியும்

இப்பொழுது மோடிதான் சமூகநீதி காப்பவராம்புராணத்தில் கடவுள் தசாவதாரம் எடுத்தார் என்று சொல்வார்கள்ஆனால்இன்றைக்கு மோடி எடுத்தி ருப்பது சதாவதாரம் - நூறு அவதாரம் - அவர் எப்படி திடீர் திடீரென்று உடையை மாற்றுகிறாரோ - அதுபோலவேஅவருடைய தந்திரங்களைப் புரிந்து கொள்ளவேண்டுமானால்பெரியாருடைய நுண்ணாடி மூலமாகப் பார்த்தால்தான் தெரியும்.

இந்தியா முழுவதற்கும் இந்தக் கருத்துகளை எடுத்துச் சொல்லவேண்டும்இன்றைக்குத் தமிழ்நாடுதான் அதற்கு வழிகாட்டுகிறதுதமிழ்நாட்டினுடைய முதல மைச்சர்தான் அதற்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒன்றிய வேளாண் மைச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம்குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்துத் தீர்மானம்ஒவ்வொரு நாளும் அறிவிப்பு மழை - வறண்ட நிலத்திற்கு வான்மழை போன்று அறிவிப்புகள் - மகிழ்ச்சிகரமான அறிவிப்புகள் எல்லாத் தரப்பினருக்கும்.

எவர் கைகளிலும் எந்த ஆயுதமும் இல்லைஎதிரிகள்ஏதாவது ஆயுதம் கிடைக்குமா என்று தேடுகிறார்கள்ஆயுதம் ஏதும் இல்லைஅவர்களுடைய கைகளில் இருக்கின்ற ஆயுதங்களை எல்லாம் பிடுங்கி வைத்துவிட்டார்நம்முடைய முதலமைச்சர்.

பெரியார் என்கிற போராயுதம்!

முதலமைச்சர் கைகளில் இருக்கின்ற பேராதயும் - மிக முக்கியமான போராயுதம் பெரியார் என்கிற போராயுதம்.

அவர் எடுக்கின்ற நடவடிக்கைகளைப்பற்றி ஏதும் சொல்ல முடியவில்லைபிள்ளையார் சதுர்த்திக்கு சில கட்டுப்பாடுகள்கடவுள் மறுப்பாளராக எல்லோரும் இருக்கமாட்டார்கள்உடனே அதனை எதிர்த்தார்கள்அதற்குரிய விளக்கத்தை நம்முடைய முதலமைச்சரும்நம்முடைய அமைச்சர் சேகர்பாபு அவர்களும் சொன்னார்கள்.

இங்கே நம்முடைய எழுச்சித் தமிழர் அழகாகச் சொன்னார்,  வட நாட்டில் வியாபாரமானது - செலா வணியானது ஏன் தமிழ்நாட்டில் எடுபடவில்லைஅதற்குக் காரணம்அடிக்கட்டுமானம்தான்இங்கே பெரியார் கட்டி வைத்திருக்கின்ற அரசியல்இங்கே பிள்ளையார் அரசியல் நடைபெறவில்லையே!

அங்கே பிள்ளையார் எப்படி வந்தார்?

ஹிந்துத்துவா என்பதுதான் ஆர்.எஸ்.எஸினுடைய அடிப்படை தத்துவம்அதனை உருவாக்கியது யார் என்றால், 5, 6 பேர்.

இதுபோன்ற தகவல்கள் எல்லாம் இந்த

‘‘ஆர்.எஸ்.எஸ்என்னும் டிரோஜன் குதிரை’’ புத்தகத்தில் இருக்கின்றதுஆங்கிலத்தில் இருப்பதை தெரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பில்லாதவர்களும்மற்றவர் களும் புதிதாகத் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற் காகத்தான் இந்தப் புத்தகம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

ஹிந்து மதம் என்றால் என்ன தெரியுமா?

சவார்க்கார் எப்படிப்பட்ட வீரர்எத்தனை முறை மன்னிப்புக் கேட்டு வந்திருக்கிறார் என்பது எல்லோ ருக்கும் தெரியும்.

ஹிந்துவை ராணுவமயமாக்கு -

ராணுவத்தை ஹிந்து மயமாக்கு.

ஹிந்து மதத்திற்கும் - ஹிந்துத்துவாவிற்கும் என்ன வேறுபாடு என்று நம்முடைய கண்ணோட்டத்தில் சொல்லவேண்டுமானால்பிள்ளையார் சதுர்த்திவிநா யகர் சதுர்த்தி என்பதற்காக வாதாடுகிறாரே புதிதாக தமிழ்நாட்டிற்கு பா...விற்குத் தலைவராக  வந்துள்ள அண்ணாமலையினுடைய ஆரோகணம்அவுரோ கணம்அரோகரோ எல்லாம்.

கடவுளை உண்டாக்கியவனும் இவன்தான்கடலில் தள்ளி ஒழிப்பவனும் இவன்தான்!

ஹிந்து மதம் என்றால்அந்த நம்பிக்கை உள்ளவன்கடவுளைக் கும்பிடுகிறவன்விநாயகர் சதுர்த்தி என்று சொல்லிஅந்தக் காலத்தில் 5 ரூபாய்க்குப் பிள்ளையாரை வாங்கி வீட்டில் வைத்துகொழுக்கட்டைசுண்டல் வைத்து கொண்டாடிவிட்டுசில நாள்களுக்குப் பிறகுகிணற்றிலோகுளத்திலோஆற்றிலோ சத்தம் போடாமல் போட்டுவிடுவார்கள்.

ஹிந்து மதத்தில்தான்உலகத்திலேயே கடவுளை உண்டாக்கியவனும் இவன்தான்கடவுளைக் கொண்டு போய் கடலில் தள்ளி ஒழிப்பவனும் இவன்தான்.

வேறு எந்த மதத்துக்காரனும் கடவுளை இப்படி அவமானப்படுத்தியது கிடையாதுசில ஆண்டுகளுக்கு முன்புபெரிய பெரிய விநாயகர் சிலைகளைப் போட்டிப் போட்டுக்கொண்டு பொது இடங்களில் வைத்துஊர் வலம் நடத்திகடலில் கொண்டு போய்அது கடலில் மூழ்கவில்லை என்றவுடன்அதனை கசாப்புக் கடையில் ஆட்டை அறுப்பதுபோன்றுதனித்தனியே அறுத்துஅடித்து நொறுக்குவார்கள்கடவுளை அவர்கள் கேவலப்படுத்துவதைவிடவேறு யாரும் கேவலப்படுத்த முடியாது.

விநாயகரையும் காப்பாற்றி இருக்கிறார் நம்முடைய தளபதி

அதற்கெல்லாம் வாய்ப்பில்லாமல் செய்திருக்கிறார் நம்முடைய தளபதி அவர்கள்அதற்கு அவர்கள் நன்றி சொல்லவேண்டாமா?

சகோதரர் தொல்திருமாவளன் அவர்கள் சொல் வதுபோன்றுவிநாயகரையும் காப்பாற்றி இருக்கிறார் நம்முடைய தளபதி.

விநாயகர் ஊர்வலத்தில்தள்ளாடிஆடிக்கொண்டுஇவன் குடித்த சாராயத்தை விநாயகர்மேல் ஊற்றிகடலில் மிதிபடாமல்அடிபடாமல் இருக்கின்ற வாய்ப்பை உருவாக்கியிருக்கின்றார் நம்முடைய தளபதி.

சிவசுப்பிரமணியம் எழுதிய ‘‘பிள்ளையார் அரசியல்’’

கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிறந்த ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் அவர்கள், ‘‘பிள்ளையார் அரசியல்'' என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.

வடநாட்டில் பம்பாயில் பிள்ளையாரை வைத்தத்தான் திலகர் அரசியலை நடத்தினார்ஆனால்இங்கே பிள்ளையாரை உடைத்துக்காட்டிஅதற்கு சக்தியில்லை என்று காட்டினார் தந்தை பெரியார்.

தயவு செய்து நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் - சாதாரணமான பக்திக்காரன்மூடநம்பிக்கையின் காரண மாகஒரு களிமண் பிள்ளையாரை வாங்கிவீட்டில் சில நாள்கள் வைத்திருந்துகிணற்றிலோஆற்றிலோ போட்டால்அது ஹிந்து மதம்.

20 அடி, 30 அடி பிள்ளையாரை தெருவில் வைத்துமற்றவர்களைப் பார்த்து நாங்கள் கேலி செய்வோம் என்று சொல்லிஅதைக் கரைப்பதற்காக ‘விசர்ஜனம்' - (சமஸ்கிருதத்தில் ‘விசர்ஜனம்என்றால்சிறுநீர் கழித்தல்என்று சொல்லிஅந்தச் சிலைகளை ஊர்வ லமாகக் கொண்டு போகிறார்கள்அந்த ஊர்வலம் கடற்கரைக்குப் போவதற்கான வழியில் செல்லாமல்மசூதி எங்கே இருக்கிறது என்று பார்த்துஅந்த வழியில் செல்லுவார்கள்.  ஒவ்வொரு முறையும் இராம.கோபா லான் வித்தை காட்டுவார்ஒரு லட்சம் காவல்துறையினர் அதற்காகப் பாதுகாப்புக்காக நிற்பார்கள்.

மனிதனை நினைக்கின்ற ஆட்சி இது!

இப்பொழுதுவிநாயகர் சிலை செய்பவர்கள் என்ன சொன்னார்கள் என்றால், ‘‘நிறைய விநாயகர் சிலையை செய்துவிட்டோமே'' என்று சொன்னார்கள்.

 பெரியார்தான் சொன்னார், ‘‘கடவுளை மற - மனிதனை நினை’’ என்றுநம்முடைய முதலமைச் சருடைய அணுகுமுறையைப் பாருங்கள்விநாயகர் வைப்பதற்கு அனுமதியில்லாததால்விநாயகர் சிலை தயாரிப்பவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய்க்குப் பதில் 10 ஆயிரம் ரூபாய் தருகிறோம் என்று சொன்னார்மனிதனை நினைக்கின்ற ஆட்சி இது.

அந்த அடிப்படையில்பிள்ளையார் அரசியலுக்கு தமிழ்நாட்டில் இடமில்லைஇங்கே கூலிக்கு ஆள்களைப் பிடித்தார்கள்; 10 அடியில் வைத்தால்இவ்வளவு பணம்; 20 அடியில் வைத்தால் இவ்வளவு பணம் என்றார்கள்வடநாட்டுப் பணம் விளையாடியதுபிறகு அது கல கலகத்துப் போனதுஆனாலும்அதை வைத்து இப் போது வித்தை காட்டுகிறார்கள்இதுதான் ஹிந்துத்துவா.

அதேபோன்று வடநாட்டில் இராமர் கோவில்  இராமரை வைத்து அரசியல் செய்கிறார்கள்அயோத் தியை சுற்றி 700 இராமர் கோவில்கள் இருக்கின்றன.

தி வீக்பத்திரிகையில் படத்தோடு செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள்பிறகு ஏன் பெரிய இராமரை வைக்கிறார்கள் என்று கேள்வி கேட்க வேண்டாமாகொள்கை அடிப்படையில் நீங்கள் செய்கிறீர்கள் அல்லவாநீங்கள் செய்தால்அது தெய்வீகம்.

திருச்சி சிறுகனூரில் பெரியார் உலகம்

அமெரிக்காவில் டிஸ்னி வேர்ல்டு என்று இருப்பதைப் போன்று - திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகத்தில்தந்தை பெரியாருக்கு  95 அடி உயர சிலை மட்டுமல்ல - கோளரங்கம் இருக்கும்குழந்தைகள் பூங்கா இருக்கும்கண்காட்சியகம் இருக்கும்படகு சவாரி செய்யும் இடம்மிகப்பெரிய அளவிற்கு திராவிட இயக்க வரலாற்றையே தெரிந்துகொள்ளக்கூடிய அள விற்கு இருக்கும்.

இந்தியாவில்தமிழ்நாட்டிற்குச் சென்றால் பார்க்க வேண்டியதில் முதல் இடம் எது என்று சொன்னால்திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகம் என்று எல்லோரும் நினைக்கக்கூடிய அளவில்அத்தனை அம்சங்களும் ஒரே இடத்தில் இருக்கக்கூடிய அளவிற்குத் திட்டமிட்டுசெயல்படுத்தப்படவிருக்கிறதுஎனவேஅது எல்லோருக்கும் பயன்படக்கூடியதுஎதிர்க்கின்றவர்களின் பேரப் பிள்ளைகளும் அதனை சுவைப்பார்கள்.

ஆகவேஇராமரை வைத்துக்கொண்டு அரசியலை இங்கே நடத்த முடியவில்லைகமண்டலத்தைத் தூக்கிக் கொண்டு அரசியலை இங்கே நடத்த முடியவில்லை.

மண்டல்தான் இன்றைக்கு நிற்கிறார்வி.பி.சிங் சொன்னாரேமண்டல் காற்று வரும்அது சாதாரணமாக எப்பொழுதும் அடித்துக்கொண்டே இருக்கும் என்று சொன்னார்.

ஜாதியை ஒழிக்காமல்தீண்டாமையை ஒழிக்க முடியுமா?

அதேபோலசமூகநீதியினுடைய தத்துவம்ஜாதியை ஒழிக்கக்கூடாது என்று சொல்கிறார்கள்தீண்டாமையை ஒழிக்கவேண்டும் என்று சொல்வார்கள்.

ஜாதியை ஒழிக்காமல் எப்படி தீண்டாமை ஒழிக்கப் படும்எனவேஅந்த அடிப்படையை எடுத்துச் சொன்னோம்.

ஜாதி வர்ணம் வேறுஜாதி வேறுஜாதி இருக்க வேண்டும்ஜாதியை ஒழிக்கக் கூடாதுஜாதி இருக்க வேண்டும்ஜாதி அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றால்அது கூடாதுஎல்லாவற்றிலும் வித்தை காட்டுகிறார்கள்.

ஆகவேதான் நண்பர்களேஇந்தப் புத்தகத்தில் எல்லா தகவல்களும் இருக்கின்றன.

எழுச்சித் தமிழர் உரையாற்றும்பொழுது சொன்னா ரல்லவாஇந்திய அரசமைப்புச் சட்டம் உருவானபோதுஉலகமே பாராட்டியதுஅரசமைப்பினுடைய முன்பகுதி யான சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவத்தைப்பற்றி சொல்லும்பொழுதுகூடஅண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஓர் அற்புதமான கருத்தைச் சொன்னார்.

புத்தருடைய கொள்கையிலிருந்து எடுத்த கருத்துதான்

‘‘நிறைய பேர் நினைக்கிறார்கள்சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவத்தை - பிரெஞ்ச் புரட்சியிலி ருந்து எடுத்தேன் என்றுஇல்லைநான் இந்த மூன்றையும் எடுத்தது புத்தருடைய கொள்கையிலிருந்து எடுத்த கருத்துதான்'' என்று அம்பேத்கர் கூறினார்.

அரசமைப்புச் சட்டம் வந்தவுடன்ஆர்.எஸ்.எஸ்பத்திரிகையில் தலையங்கம் ஒன்றை எழுதுகிறார்கள்.

‘‘இந்த அரசமைப்புச் சட்டம் மிகவும் மோசமானதுஇது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்லஏனென்றால்மனுதர் மத்தையே அது மறந்துவிட்டது.  இந்த அரசமைப்புச் சட்டத்தை எடுத்துவிட்டுஅந்த இடத்தில் மனுதர்மம்தான் இருக்கவேண்டும்'' என்று எழுதினார்கள்.

எனவேகுலதர்மம் ஆட்சி செய்வதாஇதுதான் அவர்களுடைய திட்டங்கள்.

எனவேதான்அவர்கள் முகப்பில் வேறு இருக்கும்முகமூடி போட்டிருப்பார்கள்உள்ளே வேறு சங்கதிகள் இருக்கும்.

வளர்ச்சிவளர்ச்சி என்று சொன்னார்களேஎன்ன வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது?

வித்தை காட்டுவதில் அவர்கள் கைதேர்ந்தவர்கள். 2014 இல் என்ன குரல் கொடுத்தார்கள், ‘‘சப்கா காத்சப்கா விகாஸ்'' - ‘‘வளர்ச்சிவளர்ச்சி'' என்று சொன்னார்கள்குஜராத் மாடல் என்று ஊடகங்கள் பெரிதுபடுத்தினஅங்கே எத்தனை பேர் இறந்து போனார்கள்என்ன நடந்ததுஎன்பதெல்லாம் வேறு விஷயம்.

ஆனால்நாட்டில் இன்றைக்கு என்ன வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது?

வாஜ்பேயி பிரதமராக இருந்தபொழுதுவிற்பதற்காக ஒரு  அமைச்சரை நியமித்திருந்தார்.  மோடி காலத்தில்விற்பதைவிடஅடமான இலாகாதான்இதில் என்ன வளர்ச்சி இருக்கிறது.

இரண்டாம் முறையாக பிரதமராகப் பதவியேற்கிறார் மோடிஅந்தப் பதவி விழாவினை தொலைக்காட்சியில் காட்டுகிறார்கள்உறுதிமொழியை சொல்லிவிட்டு,  அங்கே இருந்து நேராக நடந்து செல்கிறார்அங்கே ஒரு கல்வெட்டு இருக்கிறதுஅது அரசமைப்புச் சட்ட கல்வெட்டு - அதற்கு முன்பாக நின்று கும்பிட்டுமுட்டிப் போட்டு கும்பிட்டுவிட்டுஅரசமைப்புச் சட்டத்தை வணங்குகிறேன் என்று.

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் வேதனை!

நேற்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிமுக்கிய நீதிபதிகள் எல்லாம் என்ன சொல்லியிருக்கிறார்கள் தெரியுமா?

‘‘எங்களுடைய - உச்சநீதிமன்ற தீர்ப்புகளை ஒன்றிய அரசு மதிப்பதில்லைஇதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றால்அதற்கு ஒன்றுடிரிபியூனலை மூடவேண்டும்இரண்டாவதாகநீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஒன்றிய அரசின்மீது தொடரவேண்டும்'' என்று சொன்னார்கள்.

இதுதான் அரசமைப்புச் சட்டத்தை மதிப்பதா?

அரசமைப்புச் சட்டத்தின்மீது எடுத்துக்கொண்ட பிரமாணமா?

ஆகவேதான் நண்பர்களேமுன்னால் பார்த்தால் நாய்க்கர் குதிரைபின்னால் பார்த்தால் ராவுத்தர் குதிரை என்று பழமொழி சொல்வார்கள்.

அதுபோன்றுஎல்லாவற்றிலும் வேஷம் போடுவார் கள்எல்லா இடங்களிலும் இரட்டை வேடம் போடு வார்கள்.

அஜெண்டா வேறு;

ஹிடன் அஜெண்டா வேறு!

எனவேதான்அஜெண்டா வேறுஹிடன் அஜெண்டா வேறுஇதை விளக்குவதுதான், ‘‘ஆர்.எஸ்.எஸ்எனும் டிரோஜன் குதிரை'' புத்தகம்.

எனவே தோழர்களேநீங்கள் படித்தால் மட்டும் போதாதுமற்றவர்களையும் இந்தப் புத்தகத்தைப் படிக்க வைத்துபுரிய வையுங்கள்.

தமிழ்நாடுதான் இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடியதுதமிழ் மண்தான்பெரியார் மண்தான் சமூகநீதி மண்பெரியாருடைய ஆயுதம்தான்எல்லோருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய ஆயுதம்அதை ஏந்துவதற்கான அறிவாயுதம் இந்த நூல் என்று சொல்லிவாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி,

நம்முடைய அழைப்பை ஏற்று வந்த அருமைத் தோழர்கள் தயாநிதி மாறன் எம்.பி., அவர்களானாலும்எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., அவர் களானாலும்நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் பரந் தாமன் அவர்களானாலும்இராஜீவ் காந்தி அவர்க ளானாலும் எல்லோருக்கும் நம்முடைய :அன்பான நன்றியைஆசிரியர் என்கிற முறையில் சொல்லுகிறேன்.

கரோனாவைவிடவும்

மிகவும் ஆபத்தானது ஆர்.எஸ்.எஸ்.

இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள் - பிறருக்கு அளியுங்கள் - பரப்புங்கள் - எச்சரிக்கையாக இருங்கள் - கரோனாவைவிடவும் மிகவும் ஆபத்தானது ஆர்.எஸ்.எஸ். - மதவெறிநோயைவிட ஆபத்தானது.

நோய் வந்தால் நீங்கும் - மதவெறி வந்தால் அவ்வளவு சீக்கிரம் போகாதுஇதற்கு ஒரே ஒரு மருந்துபெரியார் என்கிற ஈரோட்டு மருந்தைத் தவிர,  வேறு மருந்து கிடையாது.

அந்த மருந்தினுடைய குப்பிதான் இந்தப் புத்தகம் என்பதை  எடுத்துச் சொல்லிவிடைபெறுகிறேன்.

வாழ்க பெரியார்வளர்க பகுத்தறிவு!

நன்றிவணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக