• Viduthalai
தொகுப்பு: மின்சாரம்
* 'முடித்துக் காட்டுவோம்!' என்ற அந்தத் திண்மை, திட சித்தம்தான் நமது மூலதனம்!
* எண்ணிக்கையல்ல முக்கியம்; எண்ண பலம்தான் முதன்மையானது!
* எடுத்த எந்த காரியத்திலும் நாம் தோற்க வில்லை - தோற்கவும் விடுவதில்லை.
* உழைப்புக்கு நேரமில்லை.
* குடி செய்வார்க்குப் பருவமும் இல்லை.
* உலகைப் பெரியார் மயமாக்குவோம்! பெரியாரை உலக மயமாக்குவோம்!
* இனி வரும் உலகம் பெரியார் உலகமே!
* பெரியாரே இனிவரும் உலகம்!
* இதற்கான பிரச்சாரக் கருவிகள்தாம் 'விடுதலை' 'உண்மை' ஏடுகளைப் பரப்புதலும் - சந்தா சேகரித்தலும்.
* நேர்மையே நமது அணிகலன் - அதுவே தலைசிறந்த படைக்கலன்!
* அரசு அதிகாரத்துக்குள் பெரியார் சென்றதில்லை. ஆனால் அரசை மக்கள் மத்தியில் - வீதிகளில் நின்று நடத்தியவர்.
* சட்டமன்றத்திற்குப் பெரியார் சென்ற தில்லை- ஆனால் சட்டமன்றத்தில் சட் டங்கள் அவர் விருப்பப்படி, கருத்துப்படி நிறைவேற்றம்.
* பெரியார் ஒரு சமூக விஞ்ஞானம் - விஞ்ஞானி. விஞ்ஞானத்துக்கு எல்லை இல்லை. அது வளரும் - விரியும்!
* பெரியார் ஒரு ஜீவநதி தத்துவவாதி- சமூகநீதிப் போராளி.
அவர்தம் உயர் எண்ணங்களை நாளை உலகுக்கு அறிவிப்போம் - அதற்கான வரலாற்றுக் காட்சியகம்தான் - கருவூலகம் தான் சிறுகனூர் "பெரியார் உலகம்!"
* அமெரிக்காவின் வாசிங்டனில் கறுப்பர்கள் விடுதலை பெற்ற வரலாற்றை விவரிக்கும் அருங்காட்சியகம் போன்றது- சிறுகனூரில் உருவாகவிருக்கும் பெரியார் உலகம்!
* பஞ்சமர்களும், சூத்திரர்களும், பெண் களும் இங்கே எப்படி ஒடுக்கப்பட்டார்கள் - தடைகளை உடைத்து விடுதலை பெற்றார்கள் என்பதை விளக்கும் வரலாற்று சமூகநீதி வகுப்பறையே பெரியார் உலகம்.
* பெரியாருக்காக அல்ல பெரியார் உலகம்!
* நம்மை நாம் உயர்த்திக் கொள்ள நமது நன்றி உணர்ச்சியை வெளிப்படுத்திடவே!
* சமூகவலைதளங்களில் பிரச்சாரம் நடக் கட்டும் - நடக்கட்டும்!
* உங்களால் பெரியார் உலகம் - நம்மால் பெரியார் உலகம் - மக்களால் பெரியார் உலகம் - நன்றி காட்ட நன்கொடை தாரீர்!
* அறிவின் சிரிப்பு பெரியார் உலகம்!
* உங்கள் புன்னகை எப்போது?
* கண்ணுக்குத் தெரிந்த கருஞ்சட்டையினர் உண்டு.
* கண்ணுக்குத் தெரியாத பெரியார் பற்றா ளர்கள் உண்டு.
* 'அவர் இல்லை என்றால் நாங்கள் எங்கே? என்று சொல்பவர்கள் எங்கும் உண்டு - அந்தக் கண்ணுக்குத் தெரியாதவர்களையும் அணுகுவீர்!
* நாள் ஒன்றுக்கு ஒரு மணி - வாரம் ஒன்றுக்கு ஒரு நாள்.
* களத்தில் இறங்குவீர்! கடமையாற்றுவீர்! காரியத்தை முடிப்பீர்!
* திட்டமிட்டால் திரளும் நிதி - தயங்காதீர்!
* நன்கொடையாளர்களில் இரு வகை. பெருந்த (தொ)கையாளர்கள் ஒருவகை. ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500, ரூ.1000 என நன்கொடை தருவோர் இன்னொரு வகை. சிறுதுளி பெரு வெள்ளம் என்பதை மறவாதீர்!
* வீதிவீதியாக வீடு வீடாக நன்கொடை திரட்டுவீர்.
* உள்ளந்தோறும் பெரியார் - இல்லந்தோறும் பெரியார் - பெரியார்!
* எடுத்துச் செல்வோம் - கொடுத்து மகிழ்வார் நம்மின மக்கள்! எட்டு பேரிடம் செல்லுவோம் நான்கு பேர் நல்காவிடினும் பிரச்சாரம் தானே!
* பெரியாருக்கு நன்றி என்பதைவிட நம்மை நாமே உயர்த்திக் கொள்கிறோம்.
* பெரியாரின் தோள்மீது நாம் நிற்கும்போது நாம் உயரமாகத் தெரிவோம் - ஆம் நம் உயர்வுக்கு அந்தத் தோள்கள்தானே மூல ஊற்று.
* உங்களின் பேரப் பிள்ளைகள் உங்கள் பெயரைப் பெருமையாக சொல்லட்டும்!
* அதோ கம்பீரமாகப் பொலிகிறதே - ஒளிர் கிறதே - அந்தப் பெரியார் உலகம் உருவாக் கத்திற்கு எங்கள் பாட்டன் நன்கொடை அளித்திருக்கிறார் - அவரின் பங்கும் இதில் இருக்கிறது என்று உற்சாகத்துடன் நம் பேரப் பிள்ளைகளும் சொல்லி கைதட்டி மகிழ வேண்டாமா?
* "வணக்கம் - பெரியார் உலகம்!"
திராவிடர் கழகத் தலைவர் ஆற்றிய கருத்துரை அருவியில் கிடைத்த முத்துக்கள் இவை - மாநில அளவிலான கழகக் கலந்துரையாடல் (காணொலி) கூட்டத்தில் (5.9.2021) மாலை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக