வியாழன், 7 அக்டோபர், 2021

வள்ளலார் பிறந்த நாள் - ‘‘தனிப்பெருங் கருணை நாள்!''

 

‘‘புலம்பெயர் தமிழர் நல வாரியம்'' - உலகத் தமிழர்களின் வரவேற்பு

தி.மு.பொற்கால ஆட்சியில்  புதுமை ‘‘மவுனப் புரட்சிகள்'' நாளும் - நாளும்!

வள்ளலாரின் பிறந்த நாள் - தனிப்பெருங் கருணை நாளாகவும்புலம்பெயர் தமிழர் நல வாரியம் அறிவிப்பு - வரவேற்கத்தக்கது - திராவிடம் வென்றதன் பலனை நாளும் நாடு அனுபவிக்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

பொற்கால ஆட்சி - விடியல் ஆட்சி

தமிழ்நாட்டில் 150 நாள்களைக் கடந்து முதல மைச்சர் மு..ஸ்டாலின் அவர்களது தலைமை யில் ஒரு விடியல் ஆட்சி - விரைந்து செயல்படும் விவேகமான ஆட்சியாக நடைபெற்று வருகிறதுநாளும் நமது முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் அவர்களால் அறிவிக்கப்படும் அறிவிப்புகள் - அனைவரையும் மகிழ வைக்கும் அரசின் பிரகடனங்களாகவே திகழ்ந்துபொற் கால ஆட்சிதான் இப்போது தமிழ்நாட்டில் என்ற விடியல் ஆட்சி என்பதை உலகுக்குப் பறை சாற்றுகிறது!

நடக்க முடியாதவை என்று கருதப்பட்டவை இன்று எளிதில் நடக்கின்றன!

வள்ளலார் பிறந்த நாள்-

தனிப்பெருங் கருணை நாளாகஅறிவிப்பு

நேற்றும்முன்னாளும் அவர் அறிவித்த இரண்டு இனிப்பான அறிவிப்புகள் தமிழ்நாட்டு மக்களால் மட்டுமல்லஉலகமெங்கும் வாழும் தமிழ்ப் பெருமக்களையும் மகிழ்ச்சிக் கடலில் மிதக்க வைக்கும் அறிவிப்புகளாகவே அமைந் துள்ளன!!

மதமான பேய் பிடியாதிருக்கவேண்டும் -

கண்மூடிப் பழக்கமெலாம் மண்மூடிப் போக!'

என்று கசையடி தந்து பாடிய சமரச சன்மார்க்க நெறிகண்ட வடலூர் வள்ளலாரின் பிறந்த நாளான அக்டோபர் 5 ஆம் நாளை தனிப் பெருங் கருணை நாளாக' தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது மிகவும் பாராட்டி வரவேற்கத்தக்கது!

புரட்டுச் சாமியார்களும்பொய் வேடம் பூண்டு விவசாயிகளின் நிலங்களை அபகரித்துபன்னாட்டு சுரண்டலைஹிந்துத்துவத்தின் ‘மாரீச வேடமணிந்துதங்கு தடையின்றி நடத்தும் ‘நடிப்புத் திலக ஆஷாடபூதிகளும்உலவும் நிலையில்காவி அணியாமல்தூய வெள்ளை உடை உடுத்திகருணை பொழிந்த மானிட விடுதலை நேயரான வள்ளலாரின் பிறந்த நாளை வெகு பொருத்தமாக கருணை நாள் (Compassion Dayஎன்ற அறிவிப்பு இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியம்.

தமிழ்நாடு அரசின் (தி.மு.அரசின்வழி காட்டும் நெறி என முன்பு - அவர்களே உறுதி கூறியபடி, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'; ‘யாதும் ஊரேயாவரும் கேளிர்என்பதே!

‘‘நால்வருணம்தோல் வருணம்சாத்திரக் குப்பைகளான ஜாதியும்மதமும்சமயமும் தவிர்த்த'' வள்ளலார் என்ற நிலைப்பாடுதான் மானிடத்தில் விடியலை ஏற்படுத்தி உண்மையான ஒருமைப்பாட்டை மக்களிடையே உருவாக்கும்.

தி.மு..வின் தேர்தல் அறிக்கையில் 419 ஆவது வாக்குறுதி இந்த அறிவிப்பின்மூலம் செயல்வடிவம் பெற்று ஒளி வீசுகிறது.

வள்ளலாரின் ஆறாம் திருமுறை பாடல்களை அச்சிட்டுப் பரப்பியவர் தந்தை பெரியார்!

தந்தை பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவன் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பே தனது ‘குடிஅரசு'ப் பதிப்பகத்தில் வள்ளலாரின் சிறப் பான (ஆறாம் திருமுறைபாடல்களை அச் சடித்து, ‘ராமலிங்கர்பாடல்என்ற தலைப்பில் லட்சக்கணக்கில் மக்கள் மத்தியில் பரப்பியவர் ஆவார்!

வயிற்றுப் பசிஅறிவுப் பசிசமத்துவப் பசி போக்கும் நெறிதந்தவர் ஆதி சுயமரியாதைச் சுடரான வள்ளலார்!

புலம்பெயர் தமிழர் நல வாரியம்' -

உலகத் தமிழர்களின் காதுகளில் தேனிசை!

அதுபோலவே உலகெங்கும் பரவி விரவி யுள்ளஎம் தமிழ்நாட்டுத் தமிழர்கள் நலனையும்உரிமைகளையும் பாதுகாக்கும் விழிப்புணர்வைக் காக்கும் வண்ணம் - ‘புலம் பெயர் தமிழர் நல வாரியம்என்பதை சுமார் 20 கோடி ரூபாய் ஒதுக்கிஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12 ஆம் நாள் அந்த நாளாகக் கொண்டாடப்படும் என்பது தேனிசையாக உலகத் தமிழர்களின் காதுகளில் கேட்டுஎல்லையற்ற மகிழ்ச்சியை - தமிழ்நாட்டின் ஈத்துவக்கும் இன்பமாக எண்ணிஎண்ணிப் பெருமிதம் கொள்ளுகிறோம்.

முதலமைச்சரைதமிழ்நாடு அரசை - வாயாரநாவாரமனமார வாழ்த்துகின்றோம்.

விடியல் ஆட்சியில் வேகமாக செயலுரு!

பற்பல நாடுகளில் நாம் சுற்றுப்பயணம் செய்தபோதெல்லாம் புலம் பெயர்ந்தோரின் வேண்டுகோளாக எது இருந்ததோஅது இன்று இந்த விடியல் ஆட்சியில் வேகமாக செயலுரு கொண்டுள்ளதுமகிழ்ச்சியுடன் உலகத் தமிழர் கள் வரவேற்றுப் பாராட்டுகின்றனர்!!

அடுக்கடுக்கான மக்கள் நலத் திட்டங்கள் -

அதிலும்கூட உலகளாவியப் பார்வை

இதுதான் ‘திராவிட மாடல்ஆட்சி!

இவ்வாட்சி வெறும் காட்சி அல்லமீட்சி என்பதை அகிலம் கண்டு அதிசயத்தில் மூக்கில் விரல் வைக்கிறது!

தொடரும் பொற்கால ஆட்சியில்புதுமை மவுனப் புரட்சிகள் நாளும் பூத்துக் குலுங்கிபுதிய வசந்தத்தைப் படைக்கின்றன!

திராவிடம் வென்றதின் பலன் கைமேல்

உள்ளூர் தமிழர்கள் முதல் உலகத் தமிழர் கள்வரை திராவிடம் வென்றதின் பலனை கைமேல் அனுபவிக்கத் தொடங்கிவிட்டனர்.

திராவிடம் வென்றதுஆரியம் தோற்றது

‘‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடுவது'' - திராவிடப் பண்பு!

கடல் தாண்டாதே - தீட்டுஎன்பது ஆரிய ஹிந்துத்துவ சாஸ்திரம்.

அவர்களே அதை மீறித்தான் சென்று சம் பாதிக்கின்றனர்அங்கேயே திராவிடம் வென்றதுஆரியம் தோற்றது.

வென்ற திராவிடம்புலம்பெயர் தமிழர் நல வாரியம்மூலம் புது வலிமையும்பெருமையும் பெறுவது திண்ணம்!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

7.10.2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக