வியாழன், 7 அக்டோபர், 2021

'துக்ளக்' குருமூர்த்தி பார்வையில் பெரியாரும், பெரியவாளும்!


மின்சாரம்

கேள்வி: தியாக வாழ்க்கை வாழ்ந்தது பெரியாராமஹாப் பெரியவரா?

பதில்நாத்திகர்களை ஒரு போதும் புண்படுத்தாத மஹா பெரியவரையும்ஆத்திகர்களை எப்போதும் புண்படுத்திய பெரியாரையும் ஒப்பிடுவது முறையல்லஒரு சந்தர்ப்பத்தில் .வெ.ரா.வை குறிப்பிட்டு மஹா பெரியவர் (கூறியதை கேட்டவர்கள்கூறியதை இங்கு கூறலாம். ‘தெய்வம்  என்பது பொய்விவகார உலகம் மட்டுமே உண்மை’ என்று .வெ.ராமசாமி நாயக்கர் போலவாழ்நாள் முழுவதும் உறுதியாக இருப்பவரும் கோடியில் ஒருவர்தெய்வம் மட்டுமே சத்தியம்மற்றவையெல்லாம் பொய் என்றுவாழ்நாள் முழுவதும் உறுதியாக இருப்பவரும்  கோடியில் ஒருவர்மற்றவர்கள் இருப்பவர்கள் தான்’ என்று ஒருமுறை கூறினாராம் பெரியவர்இன்னொரு முறை ‘.வெராமசாமி நாயக்கர் பிள்ளையாரை உடைத்ததால்தான் பிள்ளையாருக்கு தமிழ்நாட்டில் இவ்வளவு மகத்துவம்மூலை முடுக்கில் எல்லாம் அவருக்கு கோவில்’ என்று சொன்னாராம்அவர் போதனைகளுக்கு நேர் விரோதமாக .வெ.ராசெயல்பட்டாலும்  மஹானான அவர் .வெ.ரா.வைப் பற்றி கண்ணியமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

- ‘துக்ளக்‘ 2.6.2021 பக்.29

நாத்திகர்களை ஒரு போதும் புண்படுத்தாத மஹா பெரியவர் என்கிறாரே திருவாளர் குருமூர்த்தி (இதே ‘துக்ளக்கில் இன்னொரு கேள்விக்கான பதிலில் ‘காஞ்சிப் பெரியவர் உபன்யாசங்களின் தொகுப்பான ‘தெய்வத்தின் குரல்’ எல்லோரும் படிக்க வேண்டிய நூல் எனக்கு மிகவும் பிடித்தமானது என்று பதில் கூறியுள்ளார்.

எனவே அந்தத் தெய்வத்தின் குரலிலிருந்தே பதிலடி கொடுக்கிறோம்.

வேத சாஸ்திரங்களுக்கு ஒத்துப் போவதாகவே நம்முடைய வைத்திய சாஸ்திரம் இருக்க வேண்டும் என்பது முக்கியம்உடம்பைக் காப்பாற்றிக் கொள்ளுவது முக்கியம் என்பதற்காகவே வேத சாஸ்திரத்திற்கு விரோதமாகப் போகக் கூடாதுஏனென்றால்  இப்படி விரோதமாகப் போனால் அதுதான் நாஸ்திகம்நாஸ்தி கனுக்குத்தான் வைத்தியமே பண்ணக் கூடாதே!” என்கிற சங்கராச்சாரியார்தான் நாத்திகர்களைப் புண்படுத்தாத மஹா பெரியவராம்.  நாஸ்திகனுக்கு வைத்தியம் பண்ணி ஆயுளை நீடிக்கப் பண்ணினால் அவன் மேலும் நாஸ்திக பாவத்தை விருத்தி செய்து கொள்ள இடம் தருவதாக ஆவதால் அவனுக்கு வைத்தியம் பண்ணக் கூடாதாம் - (தெய்வத்தின் குரல்  3ஆம் பாகம் பக்கம் 148).

மனிதனை மனிதனாகப் பார் - பேதமற்ற இடம்தான் மேலான திருப்தியான இடம் என்கிற தந்தை பெரியார் எங்கேநாத்திகனாக இருப்பதாலேயே வைத்தியம் பார்க்கக் கூடாது என்று கூறும்மனிதத் தன்மைக்கே இலாயக்கற்ற ஆசாமி எங்கேஇந்த இலட்சணத்தில் அவர் மஹா பெரியவராம்!

அவனவன் கிரகப்படிதான் எல்லாம் நடக்கும் - நோய் நொடிகளும்கூட அவன் கர்மப் பலன் என்பதற்கு எதிராக மருந்துகளையும்தடுப்பூசிகளையும் கண்டுபிடிப்பவர் களும் அறுவைச் சிகிச்சை செய்பவர்களும்கூட நாத்திகர் தானேஏற்றுக் கொள்ளு கிறதா குருமூர்த்தி கும்பல்?

நாஸ்திகம் என்றால் ஸ்வாமியில்லை என்று சொல்கிற நிரீச்வரவாதம் என்று தானே இப்போது நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்இது தப்புஸ்வாமி இல்லை என்று சொல்லிக் கொண்டேகூட ‘ஆஸ்திகர்களாக இருக்க முடியும்  ஆஸ்திகம் என்றால் வேதத்தின்மீது நம்பிக்கையாக இருப்பது என்றுதான் அர்த்தம்ஸ்வாமியிடம் நம்பிக்கை இல்லாவிட்டால் கூடப் பரவாயில்லை” என்று குருமூர்த்தி மதிக்கும் அதே ‘தெய்வத்தின் குரலில்’ அவர் போற்றும் மஹாப் பெரியவாள் எழுதுகிறது.

கடவுளை மறுக்கலாம் - ஆனால் வேதங்களை மறுக்கக் கூடாது - இவர் ஆஸ்திகராம்.

வேதம் தானே இவர்களை பிராமணன் என்கிறதுபெரும்பாலான மக்களை சூத்திரன் என்கிறது - அதனால்தான் இவர்கள் கடவுளுக்கு மேலாக வேதங்களைத் தூக்கிச் சுமப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் வேதங்களை ஏற்காதவர் - அப்படி என்றால் சங்கராச்சாரியார் பார்வையில் அவரும் நாஸ்திகர்தான் (இன்று “ஆஸ்திகர்” என்பது உயர் ஜாதியினரின் நலம்இன்று “நாஸ்திகம்“ என்பது பெருவாரியான மக்களின் நலம்“ என்று அடிகளார் கூறியுள்ளார் -  அருமை புரிகிறதுபுரிகிறது!!)

ஹிந்து மதத்துக்குள்ளே ஆயிரம் ஆயிரம் பிரிவுகள் - பிளவுகள் உண்டுவேதங்களை ஏற்காதவர்கள் உண்டு என்பதால் அவர்களும் நாஸ்திகர்கள் தான் - அவர்களுக் கெல்லாம் வைத்தியம் பார்க்கக் கூடாது - அப்படித்தானேஅப்படி ஒருவர் கூறுகிறார் என்றால் அவர் மஹா பெரியவராக இருக்க முடியாது - மஹா மஹா மட்டமான ‘மனிதராகத்தான் (?) இருக்க முடியும்!

தீண்டாமை க்ஷேமகரமானது என்று சொல்லும் பேர்வழிதானே இந்த ஆசாமிஒரு மனிதனைப் பார்த்து தீண்டத்தகாதவன் என்று ஒரு மதம் சொல்லுமானால்ஒரு மதத் தலைவர் சொல்லுவார் என்றால்  அத்தகைய வரை எந்தப் பட்டியில் அடைப்பது?

இடஒதுக்கீடுப் பிரச்சினையில் பிராமணர்களுக்காக நான் கம்யூனல் பேஸிஸில் பேசுகிறேன் என்று சொல்லுபவர் பார்ப்பன மடத் தலைவராமஹா பெரியவாளா?

மனிதன் தானாகப் பிறக்கவில்லை - ஆகவே அவன் தனக்காகப் பிறக்கவில்லைமற்றவர்களுக்கு என்ன செய்தோம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்அப்படிஎண்ணிப் பார்த்துச் செயல்புரிவதுதான் மனிதத் தன்மை (‘விடுதலை’ 21.7.1962). என்று சொன்ன மானுடத்தின் மகத்தான தலைவர் தந்தை பெரியார் எங்கே - மற்ற மனிதனைப் பார்த்துத் தீண்டாதவன் என்று முத்திரை குத்தி தீண்டாமை க்ஷேமகரமானது என்று கூறும் காஞ்சி சந்திரசேகரேந்திரர் எங்கே - எங்கே?

தந்தை பெரியார் பற்றி சங்கராச்சாரியார் சொன்னது இருக்கட்டும்இதே சங்கராச்சாரியாருக்கு தந்தை பெரியார் செய்த உபகாரம் என்ன?

குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பல்லக்கில் போகாமல் குருமூர்த்தி போற்றும் அந்த ‘மஹா பெரியவாள்’ நடந்து செல்ல ஆரம்பித்தது எப்பொழுது? - அதற்கு யார் காரணம்என்பதை தனியே காண்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக