வியாழன், 22 ஜூலை, 2021

பிற்படுத்தப்பட்டோருக்கான 'ஓபிசி' சான்றிதழ் வழங்க புதிய ஆணை


தமிழ்நாடு முதலமைச்சர்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருக்கும் நன்றி

சென்னைஜூலை 20-- பிற்படுத்தப் பட்டோருக்கானசான்றிதழ் (ஓபிசி சான்றிதழ்வழங்குவது தொடர்பாக புதிய ஆணை வெளியிடப்பட்டுள்ளதுதமிழ்நாடு முத லமைச்சர் மு.ஸ்டாலின் அவர் களுக்கும்பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ்சிவசங்கர் அவர்களுக்கும் ஏஅய்ஓ பிசி கூட்டமைப்பு பொதுச் செய லாளர் கோ.கருணாநிதி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

கிரிமிலேயர் எனும் முறைஅரசமைப்புச் சட்டத்திற்கு எதிரா னதுஅது முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும் என்ற திராவிட முன் னேற்றக் கழகத்தின் கொள்கை அடிப்படையிலான முடிவுக்கு இன்னமும் ஒன்றிய அரசு செவி சாய்க்காத நிலையில்தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள 2011-ஆம் ஆண்டு மற்றும் 2017-ஆம் ஆண்டு ஆணைகளின்படிபிற்படுத்தப் பட்டோருக்கான (ஓபிசிசான்றி தழ் அளிப்பதில்வருமான வரம்பை கணக்கிடும்போதுஊதிய வருமா னம் மற்றும் விவசாய வருமானத் தைக் கணக்கில் எடுத்துக் கொள் ளக் கூடாது என்பதை மீண்டும் தெளிவாகக் குறிப்பிட்டுஅனைத்து மாவட்ட ஆட்சியர் / வட்டாட்சி யர் ஆகியோருக்கு ஆணை பிறப் பித்திட வேண்டும் என வேண்டுகி றோம்மேலும்சான்றிதழ் தாமத மின்றி விரைவாக வழங்கிடவும் அறிவுறுத்திட தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

இதன்மூலம்ஆயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசிசான்றிதழ் பெற்று ஒன்றிய அரசின் கல்வி நிலையங்கள் மற்றும் அரசுத் துறைகளில் சேர்ந்திட அதிக வாய்ப்பு கிடைக்கும் என்பதால்தாங்கள் இது குறித்து பிற்படுத் தப்பட்டோர் நலத் துறைக்கு உரிய அறிவுறுத்தலைச் செய்திட வேண் டுகிறோம்.

நமது அகில இந்திய பிற்படுத்தப் பட்டோர் கூட்டமைப்பின் சார் பில் 25.5.2021 அன்று கடிதம் மூலம் விடுத்த வேண்டுகோளை நிறை வேற்றிய தமிழ் நாடு முதலமைச்சர் அவர்களுக்கும்பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை அமைச்சர் அவர்களுக்கும் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நல கூட்ட மைப்பின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறுகோ.கருணாநிதி கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக