செவ்வாய், 6 ஜூலை, 2021

சென்னை அய்.அய்.டியா - ‘‘அய்யர் - அய்யங்கார் டெக்னாலஜியா?''


பார்ப்பனரல்லாத மாணவர்கள் தற்கொலை - ஆசிரியர்கள் பணி விலகல் குறித்து விசாரணை தேவை!

விரைவில் பெரும் போராட்டம் நடத்தப்படும்!

சென்னை அய்.அய்.டி.யில் பார்ப்பன ஜாதி வெறிக் கண்ணோட்டத்தோடு ஒவ்வொன்றிலும் நடந்து வருவதால்மாணவர்கள் தற்கொலைகளும்ஆசிரியர்கள் பணி விலகலும் தொடர்ந்து வரு கின்றனஇதுகுறித்து தமிழ்நாடு அரசு விசாரணை நடத்திடவேண்டும் என்றும்சமூகநீதிக் கண்ணோட் டத்தில் திராவிடர் கழகம் உரிய வகையில் போராட்டம் ஒன்றை நடத்தும் என்றும் அறிவித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அய்.அய்.டிஎன்றாலே இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அல்ல; ‘‘அய்யர் - அய்யங்கார் டெக்னாலஜி'' என்று சொல்லுவதே பொருத்தமாகும் என்று பலமுறை சுட்டியுள்ளோம்!

400 பேருக்குமேல் பார்ப்பன ஆசிரியர்கள்!

அங்கு 427 பேர் பேராசிரியர்கள்உதவிப் பேரா சிரியர்கள் பணியாற்றுகிறார்கள் என்றால்,  தாழ்த்தப்பட்ட வர்கள் வெறும் இருவரேஇதர பிற்படுத்தப்பட்டோர் 20 பேர்மீதி 400-க்கு மேற்பட்டோர் பச்சைப் பார்ப்பனர்கள் என்பது எத்தகைய அநீதி!  'பார்ப்பான் பண்ணையம் கேட்பார் இல்லைஎன்ற பழமொழியே உண்டு - பார்ப்பனக் கோரத்தாண்டவம்!

இந்தியா முழுவதும் உள்ள அய்.அய்.டி.,களில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரம் என்று கூறப்படுகிறதுதாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு 1973 முதல்தான் செயல்பாட்டில் உள்ளதுபெரும்பாலும் ஒரு பெரிய அக்கிரகாரமாகவே நடைமுறையில் இருக்கிறது.

பார்ப்பனர் அல்லாதாரைப் பாகுபடுத்தியும்தனி மைப்படுத்தியும்இழிவுபடுத்தியும் பார்க்கும் போக்குகள் - இந்த 2021 ஆம் ஆண்டிலும் நடக்கின்றன என்றால்இதனை எப்படி அனுமதிப்பதுசகிப்பது?

தற்கொலையும் - பதவி விலகலும்!

இரண்டாண்டுகளுக்கு முன் பாத்திமா லத்தீப் என்ற மாணவி அய்.அய்.டிவளாகத்தில் 'மர்ம'மான முறையில் மரணமடைந்தார்.

இரண்டு நாட்களுக்குமுன் சென்னை அய்.அய்.டிவளாகத்தில் பகுதி நேரப் பேராசிரியர் உன்னிகிருஷ்ணன் (வயது 30) உடல் கருகிய நிலையில்அய்.அய்.டிவளாகத்திற்குள் ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் கிடந்தது.

இந்த அதிர்ச்சியூட்டும் தகவலின் ஈரம் காய்வதற்கு முன்பாகவே சென்னை அய்.அய்.டி.யில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிய விபின் தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

ராஜினாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ள காரணம் சமூகநீதியாளர்களின் குருதியைக் கொதிப் பேறச் செய்கிறது.

ஜாதி ரீதியான பாகுபாட்டைத் தொடர்ந்து வெளிப் படுத்திக் கொண்டு இருப்பதால்தம்மால் அங்கு பணிபுரிய இயலாத நிலை உருவாகி விட்டது என்று ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனை சாதாரண  ஒன்றாக எண்ணிடவோஎடுத்துக் கொள்ளவோ முடியாதுகூடாது!

முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும்!

இதன்மீது உரிய விசாரணை நடத்தப்படவேண்டும் - தொடர்ந்து இப்படி ஜாதி வெறிப் பாகுபாட்டால் ஒடுக்கப்பட்ட மக்கள் உயிர்ப் பலியாவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும்குற்றவாளிகள் கூண்டில் ஏற்றப்படவேண்டும் - உரிய தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும்.

மாணவராகநுழைந்து - பிணமாக'த் திரும்புவதா?

உயர்கல்வி நிறுவனம் ஒன்றில் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற கனவோடு அய்அய்.டி.க்குள் நுழை வோர் பிணமாக வெளிவருவது - வேதனைக்குரியது - வெட்கப்படத்தக்கது!

சென்னை அய்.அய்.டிவளாகமே தனிப் பார்ப்பனத் தீவாக காட்சியளிக்கிறதுஅதன் நிர்வாகம் முழுக்க முழுக்க மனுதர்மத்தின் மூர்க்க வடிவமாகவே காணப்படுகிறது.

தமிழ்நாட்டு மக்களின் சமூகநீதிப் பார்வைஅதன்மீது பாய்ந்திடவேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதில் அய்யமில்லை.

அதிர்ச்சித் தகவல்!

இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2019 வரை இந்தியாவில் உள்ள அய்.அய்.டி.களில் தற்கொலை செய்து கொண்ட மாணவ-மாணவிகளின் எண்ணிக்கையை கேட்டு ஒன்றிய மனிதவள மேம்பாட் டுத்துறை அமைச்சகத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சந்திரசேகர் கவுர் என்பவர் மனு அளித்திருந்தார்.

இதற்கு அய்.அய்.டிநிர்வாகம் அளித்த பதிலில் இந்தியாவில் உள்ள அய்.அய்.டி.களில் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 27 மாணவமாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் சென்னை அய்.அய்.டி. (7 பேர்முதலிடத்தில் உள்ளதுஅடுத்த இடங்களில் காரக்பூர் (5), டில்லிஅய்தராபாத் (தலா 3), மும்பைகவுகாத்திரூர்க்கி (தலா 2), வாரணாசிதன்பாத்கான்பூர் (தலா 1) ஆகிய அய்.அய்.டி.கள் உள்ளன.

சென்னை அய்.அய்.டி.யில் மட்டும் 2010-2019 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 14 மாணவர்கள் பல்வேறு காரணங்களினால் தற்கொலைக்கு உள்ளாகி யிருக்கின்றனர்.  என்னே கொடுமைஇதில் பல்வேறு உளவியல் காரணங்கள் எனக் கூறப்பட்டாலும் ஜாதிவெறிமத ரீதியான ஆதிக்க அழுத்தங்களே அதிகளவு காரணங்களாக இருந்துள்ளன.

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்துக்குத் தடை!

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தைத் தடை செய்யவில்லையாபெரும் போராட்டக் கனலுக்குப் பிறகுதானே பணிந்து வந்தனர்.

சென்னை அய்.அய்.டி.,யில் உள்ள உணவு விடுதியில் புலால் உணவு - காய்கறி உணவுநுழைவு வாயில்கள் தனித்தனி மட்டுமின்றிகைகழுவும் இடங்கள்கூட வெவ்வேறு என்பதெல்லாம் எதைக் காட்டுகிறது?

மீண்டும் ஒரு சேரன்மாதேவி!

வெளியில் இருந்து வரும் ஆசிரியர்கள் புலால் உணவு கொண்டுவரக்கூடாது என்று மறைமுக உத்தரவாம்!

1924 இல் சேரன்மாதேவியில் தந்தை பெரியார் நடத்திய போராட்டத்தை 2021-லும் சென்னை அய்.அய்.டி.,யில் நடத்தவேண்டுமா?

தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் புறக்கணிப்பு - சமஸ்கிருதப் பாடல் அரங்கேற்றம்!

ஒன்றிய அரசு சார்பில் தேசிய துறைமுகம்நீர் வழிகள்கடலோரத் தொழில்நுட்ப மய்யம் ஆகியவற்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா சென்னை அய்.அய்.டி., வளாகத்தில் நடைபெற்றது (26.2.2018).

அந்நிகழ்ச்சியில் கப்பல் போக்குவரத்துத் துறை ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிஒன்றிய இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் பங்கேற்றனர்அந்த அரசு விழாவில்என்ன நடந்ததுஅரசின் சட்டப்படி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப் பெறாமல்சமஸ்கிருதப் பாடலைப் பாடவில்லையா?

இரு ஒன்றிய அமைச்சர்கள் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் நடைபெற்ற சட்ட மீறல் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

வஞ்சிக்கப்பட்ட பேராசிரியர் வசந்தா கந்தசாமியும் - முதலமைச்சர் கலைஞரின் பதிலடியும்!

பேராசிரியர் வசந்தா கந்தசாமி அவர்கள் உலகம் போற்றிய கணிதப் பேராசிரியர்அவர் பார்ப்பனர் அல்லாதார் என்ற ஒரே காரணத்துக்காக எப்படி எப்படி யெல்லாம் தொல்லை கொடுத்தார்கள்அவருக்கு முறையாக வந்து சேரவேண்டிய பதவி உயர்வுகள் கிடைத்தனவா?

அவருக்காக எத்தனை எத்தனையோ களப் போராட்டங்கள்சட்டப் போராட்டங்கள் நடந்தன?

இவற்றை எல்லாம் மனதிற்கொண்டுதான் முதலமைச் சராகவிருந்த முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் மானமிகு வசந்தா கந்தசாமி அவர்களுக்கு கல்பனா சாவ்லா விருது அளித்துப் பாராட்டினார்.

அதுஅய்.அய்.டிபார்ப்பன வட்டாரத்துக்குக் கொடுக்கப்பட்ட சூடு என்பதைப் பொது அறிவு அவர்களுக்கு இருந்திருந்தால் புரிந்திருக்கும்.

பெரியார் மண்ணில் போராட்டம் வெடிக்கும்!

தமிழ்நாட்டில் தந்தை பெரியார் பிறந்த சமூகநீதி மண்ணில்ஓர் அரசு நிறுவனம் அசல் பார்ப்பனத் தர்பாராகமனுநீதித் துரைத்தனமாக நடந்துகொண் டுள்ளதை இனியும் அனுமதிக்க முடியாது - கூடாதுவிரைவில் சமூகநீதி மண்ணின்  குணத்தைக் காட்டும் வகையில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்ஒத்த கருத்துள்ள அனைவரும் ஒன்று திரட்டப்படுவார்கள்தொடர் போராட்டங்களாக நடை பெறும்.

இதற்கிடையே சென்னை அய்.அய்.டி.யில் தொடர்ந்து நடைபெறும் தற்கொலைகள்பதவி விலகல்கள் குறித்து உரிய வகையில் விசாரணை ஒன்றினைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

3.7.2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக