வியாழன், 22 ஜூலை, 2021

அகில இந்திய ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு

 

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் - ஒன்றிய அரசு செயல்படாதது ஏன்?

கூட்டு  முயற்சியை திராவிடர் கழகம் மேற்கொள்ளத் தவறாது

மருத்துவக் கல்வியில் அகில இந்திய ஒதுக் கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 69 விழுக்காடு இடங்கள் அளிக்கப்படவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும்ஒன்றிய அரசு செயல்படுத்தாது நீதிமன்ற அவமதிப்பு இல்லையாஇவ்வாண்டே ஒன்றிய அரசு செயல்படுத்தவேண்டும்இல்லையெனில் கூட்டு முயற்சியை  மேற்கொள்ளத் திராவிடர் கழகம் தயங்காது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்அவரது  அறிக்கை வருமாறு:

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு 69 சதவிகித இட ஒதுக்கீட்டை 2021-2022 ஆம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்தாமலும் - ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப் பினை செயல்படுத்தாமலும் இருப்பதுஒன்றிய அரசின் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை என்பதைச் சுட்டிக்காட்டி தி.மு.சார்பில் (திராவிடர் கழகம் உள்பட தமிழ்நாட்டின் அத்துணைக் கட்சிகளும் .தி.மு.உள்பட வழக்குகள் போட்டு  சென்ற ஆண்டு பெற்ற தீர்ப்பு அது!) போடப்பட்ட வழக்கு விசாரணைக்கு நேற்று (19.7.2021) சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் எடுத்துக்கொள்ளப்பட்டுஏன் இது வரை அதனை நடைமுறைப்படுத்தவில்லை என்று நீதிபதிகள் ஒன்றிய அரசைப் பார்த்து  நியாயமான - சட்ட ரீதியான கேள்வியை எழுப்பியுள்ளனர்.

உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத ஒன்றிய அரசு

‘‘சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி அமைக் கப்பட்டுள்ள குழுவின் பரிந்துரைப்படி மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத் தப்பட்டோருக்கு 2021-2022 ஆம் கல்வியாண்டு முதல் இட ஒதுக்கீடு வழங்கப்படும்'' என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு உத்தரவாதம் தந்துள்ளது.

அப்போது 1993 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழகத்தில் செயல்பட்டு வரும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படும் என்று கூறப்பட் டுள்ளதுஆனால்ஒன்றிய அரசு அந்த உத்தரவாதத்தை தற்போது நிறைவேற்றவில்லை.

உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சலோனி குமாரி வழக்கு முதலில் தீர்வுக்கு வரவிருக்கிறதுஅதன் பின்னர் இட ஒதுக்கீட்டு முறையை நடைமுறைப் படுத்துவது குறித்து முடிவு செய்வோம் என்ற எண் ணத்தில் ஒன்றிய அரசு செயல்படுகிறது.

 ஆனால்தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில்அகில இந்தியப் படிப்பில் - அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் முறைக்கு எவ்வகையிலும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சலோனி குமாரி வழக்குத் தடை யாகக் குறுக்கே நிற்கப் போவதில்லை.

இந்த வழக்கில் ஒன்றிய அரசின் செயல்பாடுஉயர் நீதிமன்ற உத்தரவுக்குக் கீழ்ப்படியாமலும்அதை அவமதிக்கும்படியாகவும் உள்ளது.

ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் காலக்கெடு

எனவே, ‘‘மருத்துவப் படிப்பில்அகில இந்திய ஒதுக்கீட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டு முறையை 2021-2022 ஆம் கல்வியாண்டு முதல் நடைமுறைப் படுத்துவது குறித்த ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை ஒரு வாரத்துக்குள் தெரியப்படுத்தவேண்டும்இந்த இட ஒதுக்கீட்டு முறையில் மட்டும்தான் தமிழ்நாட்டில் மருத் துவப் படிப்புக்கு சேர்க்கை நடத்தப்படும்விசாரணையை வருகிற 26 ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கிறோம்'' என்று தெரிவித்துள்ளனர்!

நீட்நுழைவுத் தேர்வுபற்றிய விளக்க சட்டத்தில்கூட அந்தந்த மாநிலத்தில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு அப்படியே பின்பற்றப்படும் என்று கூறப்பட் டுள்ளது - ஏனோ காற்றில் பறக்கவிடப்பட்டது!

ஒன்றிய அரசின் பிடிவாதப் போக்கு

சென்னை உயர்நீதிமன்றத்தில் அத்துணை கட்சி களும் தொடுத்த வழக்குகள் அடிப்படையில் கொடுக் கப்பட்ட தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் இருக்கசாக்கு போக்கு சொல்லுவதற்காகவே இப்படி சலோனி குமாரி வழக்கைக் காட்டியுள்ளனர்உச்சநீதிமன்றமே இந்த வழக்குக்கும்தமிழ்நாட்டு இட ஒதுக்கீட்டுக்கும் (69 சதவிகித அடிப்படையில்எவ்வித சம்பந்தமும் இல்லை என்று தெளிவாக கூறிவிட்ட பிறகும்கூடசெயல்படவில்லை என்பதும்அதன் சட்டத்தையே ஒன்றிய அரசு மதிக்காதுசெயல்படுத்தாத கொடுமை  (நீதிமன்ற அவமதிப்பு இல்லையா?) - அலட்சியம் - சமூகநீதிக்கு எதிரான ஒன்றிய ஆர்.எஸ்.எஸ்., பா.அரசின்  பிடிவாதப் போக்கையே காட்டுகிறது!

வெற்றிகரமான தீர்ப்புகளை - ஆணைகளைப் பெற் றும்கைக்கெட்டியது தமிழ்நாட்டு மக்களுக்கு வாய்க் கெட்டாதது  என்பது அசல் சமூக அநீதி அல்லவா?

சென்னை உயர்நீதிமன்றத்தின் நேற்றைய ஆணைக் குப் பிறகாவது வழிக்கு வந்தால் - தாமதிக்கப்பட்ட நீதிமறுக்கப்படாமல் வழங்கப்படல் வேண்டும்!

மற்றொரு கூட்டு முயற்சியை திராவிடர் கழகம் மேற்கொள்ளும்!

முன்பு ஒன்று சேர்ந்த அனைத்துக் கட்சிகளும்அமைப்புகளும் ஓரணியில் திரண்டுஒன்றுபட்டு குரல் எழுப்பதிராவிடர் கழகம் மற்றொரு கூட்டு முயற்சியைத் துவக்கவும் தவறாது!

சமூகநீதியை வைத்து கண்ணாமூச்சி விளையாட்டை டில்லிஒன்றிய அரசு செய்வதுஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வு என்ற நெருப்போடு விளையாடும் விபரீத விளையாட்டே என்பதைப் புரிந்துகொள்வீர்!

தி.மு.தலைமைக்கும்வாதாடிய வழக்குரைஞர் பி.வில்சன் எம்.பி.,  அவர்களுக்கும் நமது நன்றியும்பாராட்டும்!

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை       

20.7.2021           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக