வியாழன், 22 ஜூலை, 2021

12ஆயிரம் ஆண்டுகள் இந்திய கலாச்சார வரலாறை ஆராயும் குழு மாற்றி அமைக்கப்படும்

 

நாடாளுமன்றத்தில் அமைச்சர் தகவல் 

புதுடில்லிஜூலை 21- 12ஆயிரம் ஆண்டு கால பண்பாட்டின் தோற்றம் மற்றும் பரிணாமம் குறித்த வரலாற்றை ஆய்வு செய்ய ஒன்றிய அரசால் அமைக் கப்பட்ட 16 பேர் குழு மாற்றி அமைக்கப்படவுள் ளது என்று நாடாளுமன் றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தக் குழுவில் பெண் கள்தாழ்த்தப்பட்டவர்பழங்குடியினர்சிறுபான் மையினர்தென்னிந்தியர் கள் ஆகியோருக்கு இடம் இல்லை என்பது கடந்த ஆண்டு இந்திய கலா சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த பிரஹலாத் சிங் படேல் எழுத்து மூலம் தகவல் அளித்தபின் தெரியவந்தது.

திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த கரு நாடக முன்னாள் முதல மைச்சர் குமாரசாமி உள் ளிட்டோர் இதற்கு கடு மையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்அக்குழு மறு சீரமைப்பு செய்யப் படவுள்ளது என தற்போ தைய ஒன்றிய கலாச்சாரத் துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி நாடாளு மன்றத்தில் அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 23, 2020 அன்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியர சுத் தலைவருக்கு இக் குழுவை கலைக்குமாறு கூட்டாக வேண்டுகோள் விடுத்தனர்.

நடப்பு நாடாளுமன் றக் கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று முன்தினம் (19.7.2021) அந்த குழு இன்னும் நீடிக் கிறதாஅக்குழு கலைக்கப் பட்டு பன்மைத்துவ பிரதிநிதித்துவத்தோடு மாற்றி அமைக்கப்படுமா என்று வெங்கடேசன் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு அளித்துள்ள பதிலில் "இக்குழு 2016இல் அமைக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு ஜனவரி 3 மற்றும் மே 2 ஆகிய தேதிகளில் இரண்டு முறை கூடியுள்ளதுஇக் குழுவை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள் ளதுஅவ்வாறு மாற்றி அமைக்கப்படும் போது அதன் உறுப்பினர் உள்ள டக்கம் பன்மைத்துவ நோக் கில் அமைவதற்கான எல்லா ஆலோசனைகளும் கருத் தில் கொள்ளப்படும்என்று அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக