நெய்வேலி நிலக்கரி நிறுவனத் தேர்வில் வெளிமாநிலத்தவர்கள் தேர்ச்சி - அதிர்ச்சி!
நெய்வேலி, பிப்.7 நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பயிற்சி அதி காரிகளுக்கான காலி பணியிடங்களை நிரப்ப நடைபெற்ற எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 1,582 நபர்களில் 99 சதவிகிதத்தினர் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என என்.எல்.சி. நிர் வாகம் அறிவித்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தேர்வின் முடிவின்படி வெறும் 8 பேர் மட்டுமே தமிழர்கள் எனவும், வெளிமாநிலத்தில் தேர்ச்சி பெற்றவர் களின் பெயர்களைப் பார்க்கும்போது பெரும்பாலானோர் பார்ப்பனர்கள் என்பதும் உறுதியாகியுள்ளது.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறு வனத்தில் (என்.எல்.சி.) பயிற்சி அதி காரிகள் பணியிடங்களுக்கு உரிய தேர்வு சமீபத்தில் நடந்து முடிந்தது. மும்பை, பாட்னா, லக்னோ உள்ளிட்ட வெளிமாநில தேர்வு மய்யங்களில் எழுதியவர்களில் 99 சதவிகிதம் பேர் தேர்வு பெற்றுள்ள நிலையில், தமிழகத் தேர்வு மய்யங்களில் தேர்வு எழுதிய வர்களில் ஒரு சதவிகிதம் பேர் மட்டுமே தேர்வு பெற்றிருப்பதாக முடிவுகளை வெளியிட்டுள்ளது.
குறிப்பாகத் தேர்வு பெற்றுள்ள 1,582 பேரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வர்கள் வெறும் 8 பேர் மட்டுமே என்பது வெளி மாநிலத் தேர்வு மய் யங்களில் நடைபெற்ற தேர்வின் நம்பகத்தன்மை மீது மிகப்பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
என்.எல்.சி.யில் தொழிற்பயிற்சி முடித்தவர்கள், இறந்தோர் வாரிசுகள், என்.எல்.சி. நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்தவர்கள் என ஆயிரக்கணக் கான பேருக்கு இன்னும் வேலை வாய்ப்புகளை வழங்காமல் இழுத் தடிக்கப்பட்டு வரும் நிலையில், - தமி ழகத்திற்குரிய வேலைவாய்ப்புகளையும் வெளிமாநிலத்தில் உள்ளவர்களுக்குத் தந்திரமாக தாரைவார்த்து வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளாக நெய்வேலி யின் அனைத்து ஒப்பந்தப் பணிகளும் வட மாநிலத்தவருக்கே வழங்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
2017-ஆம் ஆண்டுமுதல் ரயில்வே, அஞ்சல்துறை மற்றும் மத்திய அரசின் கீழ் வரும் பொதுப்பணித்துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கு கிடைக்காமல் வெளி மாநிலத்தவர்களுக்கே அதிகம் கிடைத்து வருகிறது. தமிழகத்தின் குக்கிராமங்களின் அஞ்சல் அலுவ லகங்களில் கூட ‘போஸ்ட் மாஸ்டர்' பணிக்கு பீகார், உத்தரப்பிரதேசம், அரியானா மாநிலத்தவர்கள் அமர்த் தப்படுகின்றனர்.
தலைமைப் பதவியில் ஒரு வட இந்தியர் அமர்த்தப்படும் போது அவரது பரிந்துரையின் பெயரில் அவருக்கு கீழே உள்ள அனைத்துப் பதவிகளிலும் வட இந்தியர்கள் வந்து விடுகின்றனர். நாகர்கோவிலின் சுற்று வட்டார அஞ்சலகங்களில் கடந்த சில ஆண்டுகளாக பணியாளர்கள் அனை வருமே வட இந்தியர்களாக நியமிக் கப்பட்டு விட்டனர்.
அதேபோல் 2019 ஆம் ஆண்டு திருச்சியில் உள்ள பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிற்பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புகள் வந்தபோது தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டு, வட மாநிலங்களைச் சேர்ந்த 323 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்ட தாக குற்றச்சாட்டு எழுந்தது.
திருச்சி பொன்மலையிலும், கோத்தகிரியில் உள்ள போத்தனூரிலும் உள்ள பணிமனைகளில் தொழில் பழகுநர்களாக இணைவதற்கான வாய்ப்புகள் அனைத்தும் வட இந்தி யர்களுக்கே வழங்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்தத் தொழில் பழகுநர் வாய்ப்பைப் பெற எவ்வளவு பேர் விண்ணப்பித்தனர், அதில் எவ்வளவு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் போன்ற விவரங்களைத் தர தென்னக ரயில்வே மறுத்துவிட்டது. தற்போது நெய்வேலியிலும் தமிழர் புறக்கணிப்பு நடந்துள்ளது குறிப் பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக