திங்கள், 15 பிப்ரவரி, 2021

திருமணம் செய்வதாக பொய் சொல்லி பெண்ணை வன்புணர்வு செய்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்


ஜோத்பூர், பிப்.8 ராஜஸ்தான் பாஜக சட்டமன்ற உறுப்பினர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக பெண் ஒருவர் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது

ராஜஸ்தான் மாநிலம் கோகுண்டா சட்டசபை தொகுதி யின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளவர் பிரதாப் லால் பீல். 56 வயதான இவர்மீது, தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்புணர்வு செய்து விட்டு ஏமாற்றிவிட்டதாக 35 வயது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தின் நீமுச் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு நிகழ்ச் சியில், கலந்து கொண்ட பிரதாப் லால், அங்கு அறிமுகமான தன் னுடன் நெருக்கமாக பழகி வந்தார் என்றும், தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டு தன்னை திருமணம் செய்து கொள்வதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், அவர்  தனது மனைவியை விவாகரத்து செய்துள் ளார். இதையடுத்து, கடந்த நவம்பர் 8-ஆம் தேதி குடும்பத்தினரின் சம்மதத்தை பெற்றுவிட்டதாக கூறி உதய்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு வரவழைத்து அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரதாப் லால் மீது புகார் அளித்துள்ள அந்த பாதிக்கபப்ட்ட பெண்மணி, தன்னை திருமணம் செய்யாமலும் தனது தொலைபேசி அழைப்புகளை எடுக் காமலும் இருப்பதாகவும்  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து அந்த  பெண்

ணுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாலியல் வன்புணர்வு புகாரால் ராஜஸ்தான் மாநில அரசியலில் பரபரப்பு எழுந்துள்ளது பாலியல் புகாரில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என தொடர்ந்து பெரிய புள்ளிகள் சிக்கிவருவது சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது அந்த வரிசையில் தற்போது இவரும் சேர்ந்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக