சென்னை, பிப். 13- அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் சென்னை மாநகர நிர்வாகிகள், அமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தின் முடிவுப்படி
1. பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசில் அமைச்சரகம் அமைக்கவேண்டும்.
2. ஜாதிவாரி கணக்கெடுப்பினை 2021 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இணைத்து நடத்திட வேண்டும்.
3. பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறிய பிரிவினர் எனும் கிரிமிலேயர் முறை முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும்.
4. தற்போது பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு பணிகளுக்காக ஜாதி சான்றிதழ் தருவதில், வருமான வரம்பை உயர்த்த வேண்டும்.
5. மண்டல் குழு பரிந்துரையை முழுமையாக அமல்படுத்தி, பதவி உயர்வில் இட ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை நிறைவேற்ற வேண்டும்.
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 27-ஆம் தேதி சனிக்கிழமை சென்னை கடற்கரை சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காலை 10.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக