சென்னை. பிப். 7- சுயமரியா தைக்காரராக - திராவிட இயக்க தீரராக தமது வாழ் நாள் வரை வாழ்ந்த கவிக் கொண்டல் மா.செங்கட்டு வன் 5.2.2021 அன்று காலமா னார். சென்னை, இராயப் பேட்டையில் உள்ள அவரது மகன் இல்லத்தில் உடல் வைக்கப்பட்டிருந்தது.
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் 6.2.2021 அன்று மறைந்த செங் குட்டுவன் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்த இரங்கல் அறிக்கையை மா.செங்குட்டு வனது மகன்கள் மற்றும் குடும்பத்தினரிடம் வழங்கி ஆறுதல் கூறினார்.
சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் சோ.சுரேஷ், வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் கி.இராமலிங்கம், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடு மலை வடிவேல், பெரியார் திடல் பணித்தோழர்கள் ச.பாஸ்கர், ப.ஆனந்தன், மகேஷ், பெரியார் நூலக வாசகர் வட்டம் செல்லப்பன் மற்றும் கழக தோழர்கள் இறுதி மயியாதை செலுத் தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக