திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை!
அறிஞர் அண்ணா அவர்களின் 52 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (3.2.2021) திராவிடர் கழகத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தந்தை பெரியாரின் தள நாயகராகத் திகழ்ந்து, தனது அறிவு ஆசானுக்கே தான் பெற்ற ஆட்சியை சட்டமன்றத்தில் காணிக்கையாக்குகிறேன் என்று பிரகடனப்படுத்தி, அவரது கொள்கைகளை சட்டங் களாக்கி ஆள வைத்து - அவனியை அதிசயப்பட வைத்த அறிஞர் அண்ணாவின் 52 ஆம் நினைவு நாள் இன்று (3.2.2021).
அறிஞர் அண்ணா மறைந்தபோது அவரை ஆளாக்கிய அவரது ஆசான் எழுதிய இரங்கலின் இரண்டு வாக்கியங்கள் என்றும் சரித்திரத்தில் ஒளி வீசச் செய்யும் அனுபவ முத்திரைகளாகும்!
அண்ணா மறைந்தார்;
அண்ணா வாழ்க!
எவ்வளவு ஆழமான பொருள் பொதிந்த கருத்து வீச்சுகள் இவை!
அண்ணா என்ற தனி மனிதருக்கு மரணம் ஏற்பட்டிருக்கலாம்.
அண்ணா என்ற கொள்கை - தத்துவம் - லட்சியம் என்றும் மறையாது வாழும் என்றார். விரித்து எவ்வளவோ எழுதலாம்!
இன்று அண்ணாவின் உண்மையான ஆட்சி மலர்வது காலத்தின் கட்டாயம்.
தி.மு.க. - அண்ணா கண்ட அரசியல் ஆயுதம். அந்த ஆயுதம் சொல்லும் செய்தி ''திராவிடம் வெல்லும்'' என்பதே!
அண்ணா வாழ்க! திராவிடம் வெல்க!!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
3.2.2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக