சனி, 30 ஜனவரி, 2021

I. பதில் உண்டா பார்ப்பன 'துக்ளக்'கே!


மின்சாரம்

கேள்விகணவன்  - பகுத்தறிவுவாதியாகவும்மனைவி ஆன்மிகவாதியாகவும் இருப்பது பற்றி?

பதில்ஓட்டுக்குப் பகுத்தறிவு - வீட்டுக்கு ஆன்மிகம்

(‘துக்ளக்‘ 20.1.2021 பக்.10)

பதிலடிபகுத்தறிவு என்பது மற்றவர்மீது திணிப்பது அல்லமனைவிக்கு ஆன்மிகத்தில் நம்பிக்கை இருந்தால் அதனை ஏற்பதுதான் பகுத்தறிவுஇந்துத்துவா என்ற கோட்பாட்டை உருவாக்கிய வி.டிசாவர்க்கார் ஆன்மிகவாதியா - நாத்திகவாதியா?

நாத்திகத்தை ஹிந்து மதம் ஏற்கிறதா இல்லையாகோயிலுக்குச் சென்று சங்கராச்சாரி சாமி கும்பிடலாமாநானே கடவுள் என்பதுதானே சங்கராச்சாரியார்?

சிலை வணக்கம் மூடனுக்கு என்பதுதானே உத்திரகீதை?

இன்னும் சொல்லப் போனால் கடவுளை மறுப்பதல்ல நாத்திகம்வேதத்தை மறுப்பதுதான் நாத்திகம் என்று மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி திருவாய் மலர்ந்துள்ளாரேஅதற்கு என்ன பதில்?

(தெய்வத்தின் குரல் இரண்டாம் தொகுதி பக்கம் 407-408).

ஆமாம் - மனிதன் என்பதற்கு அடையாளமே அவனுக்கு ஆறாவது அறிவாகிய பகுத்தறிவு இருப்பதுதான்  ஆனால் பகுத்தறிவுபற்றி துக்ளக் திருவாளர் ‘சோ’ ராமசாமியின் நிலைப்பாடு என்ன?

இதோ ‘சோ’ துக்ளக் மூலம் பேசுகிறார்.

கேள்விபகுத்தறிவு என்று சொன்னால் உங்களுக்கு ஏன் கசக்கிறது?

பதில்: “ஏன் நிறுத்தி விட்டீர்கள்பித்தலாட்டம் என்றால் உங்களுக்கு ஏன் கசக்கிறதுமோசடிஏமாற்று வேலை போலி வேடம் என்றெல்லாம் சொன்னால் உங்களுக்கு ஏன் கசக்கிறது?” என்று கேட்க வேண்டியதுதானேஇப்போது தான் உங்கள் கேள்வி முழுமை அடையும். (‘துக்ளக்‘ 4.3.2009)

பதிலடிபகுத்தறிவு என்றால் பித்தலாட்டம்மோசடிஏமாற்று வேலை என்று கருதுகிற கூட்டத்தை எப்படிப்பட்ட மனிதர்களின் பட்டியலில் வைப்பதுஅடிக்கடி ‘துக்ளக்‘ அட்டைப் படத்தில் (ஏன் முதல் இதழிலேயேகார்ட்டூனை போடுமே  நினைவிருக்கிறதா - அதுதான் கழுதைப் படம் - அது நினைவிற்கு வந்தால் நாம் பொறுப்பல்ல.

***

கேள்விநாத்திகவாதிபகுத்தறிவுவாதி என்ன வித்தியாசம்?

பதில்நாத்திகவாதி அனைத்துக் கடவுள்களையும் மறுப்பார்நேர்மையான பகுத்தறிவுவாதி அனைத்து நம்பிக்கைகளையும் வெறுப்பார்திராவிட நாத்திக - பகுத்தறிவுவாதி ஹிந்துக் கடவுள்களை மட்டும் வெறுத்து ஹிந்து நம்பிக்கைகளை மட்டும் பழிப்பார் (‘துக்ளக்‘ 20.1.2021 பக்கம் 10).

பதிலடிகடவுள் இல்லை - இல்லவே இல்லை என்று திராவிடர் கழகம் சொல்லுவது ஹிந்து மதக் கடவுள்களை மட்டுமே அல்லவே - எல்லா மதக் கடவுள்களையும் சேர்த்துத்தானே.

ஹிந்து மதத்தின் மீது கூடுதல் தாக்குதலுக்குக் காரணம் என்னஹிந்து மதக் கடவுள் பிர்மாதானே தன் முகத்திலிருந்து பிராமணனைப் படைத்தான் என்றும்  தோளிலிருந்து சத்திரியனைப் படைத்தான் என்றும்இடுப்பிலிருந்து வைசியனையும்பாதங்களிலிருந்து சூத்திரனையும் படைத்தான் என்றும் எழுதி வைக்கப்பட்டுள்ளதுசூத்திரன் என்றால் வேசி மகன் என்றும் ஹிந்துமத சுருதியும் ஸ்மிருதியும் கூறும் நிலையில்தன்மானம் உள்ளவன் ‘அந்த ஹிந்து மதக் கடவுள்மீது தானே கூடுதலாக தன் தாக்குதலைத் தொடுப்பான்!

தங்களை ஆன்மிகவாதி - கடவுள் நம்பிக்கைவாதி என்று கூறிக் கொள்ளும் ஹிந்து மதவாதிகள் மற்ற மதக் கடவுளை ஏற்கிறார்களாஅப்படி என்றால் அந்த மதக்காரன் பார்வையில் ஹிந்து மதவாதி கடவுளை மறுக்கும் நாத்திகன் தானே - முசுலிம்கிறித்தவர்கள் பார்வையில் சங்கராச்சாரிகளும்ஜீயர்களும்சோ ராமசாமிகளும்குருமூர்த்தி அய்யர்களும்நாத்திகர்கள் தானே!

இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலத்தை உடைத்து நொறுக்கிய அத்வானிஉமாபாரதிமுரளி மனோகர் ஜோஷிஅசோக் சிங்கால் உள்ளிட்ட ஹிந்துத்துவவாதிகள் கடவுள் உடைப்பாளர்கள் (ICNOCLASTபட்டியலில் வந்து விடவில்லையா?

எண்ணாயிரம் சமணர்களைக் கழுவில் ஏற்றிக் கொன்றவர்கள் யார்நாத்திகர்களா - ஆத்திகர்களாயோக்கியமான பதில் தேவை!

ஓசையுள்ள கல்லைநீர் உடைத்திரண்டாய் செய்துமே

வாசலில் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர்

பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்துறீர்

ஈசனுக்கு உகந்தகல் எந்தக்கல் சொல்லுமே

(பாடல் 421)

***

பறைச்சியாவது ஏதடாபணத்தியாவது ஏதடா

இறைச்சி தோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ

பறைச்சி போகம் வேறதோ பணத்தி போகம் வேறதோ

பறைச்சியும் பணத்தியும் பகுந்துயிரும் உம்முளே

(பாடல் 38)

***

சட்டையிட்டு மணிதுலங்கும் சாத்திர சழக்கரே

பொஸ்தகத்தை மெத்த வைத்து போதமோதும் பொய்யரே

நிட்டைஏது ஞானமேது நீரிருந்த அட்சரம்

பட்டை ஏது சொல்வீரே பாதகக் கபடரே (பாடல் 242)

***

இட்ட குண்டம் ஏதடா இருக்குவேதம் ஏதடா

சுட்ட மண்கலத்திலே சுற்றுநூல்கள் ஏதடா

முட்டி நின்ற தூணிலே முளைத்தெழுந்த சோதியை

பற்றி நின்றது ஏதடா பட்டநாதபட்டரே!

(பாடல் 306)

இவற்றையெல்லாம் பாடிய சிவவாக்கியர் ஆத்திகராநாத்திகரா சொல்லு துக்ளக்கே - குருமூர்த்தியே!

சாஸ்திரம் பார்த்துப் பிறந்தாளாம் - பின்

சாஸ்திரம் பார்த்து சமைந்தாளாம்

சாஸ்திரம் பார்க்கின்ற பாப்பாரப் பெண்கள்

தாலியறுப்பதேன் ஞானப் பெண்ணே

என்று பாடிய ஞான வெட்டியான் ஆத்திகரா - நாத்திகரா - அய்யன்மார்களே ஆத்திரப்படாமல் பதில் சொல்வீர்களா?


II. கங்கை புனிதமா? காகப்பட்டர் சந்ததி குருமூர்த்திகளே பதில் கூறுக!

‘துக்ளக் என்னும் பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன அதிகாரப் பூர்வமற்ற (?) இதழான ‘துக்ளக்‘கின் 51ஆம் ஆண்டு விழாவில் (14.1.2021) பேசிய அதன் ஆசிரியர் சாமிநாதன் குருமூர்த்தி பார்ப்பன ஆண வத்துடன் பேசியவை - அரசியலைத் தாண் டிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

“ஊழலில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே எந்த வித்தி யாசமும் இல்லை.

வீடுபற்றி எரியும்போது கங்கை ஜலத் திற்காகக் காத்திருக்க முடியாது. சாக்கடை ஜலத்தைக்கூட வாரி வீச வேண்டும்; அதுபோல திமுகவை வீழ்த்த சசிகலாவாக இருந்தாலும் சரி அவர்களையும் அணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும்“ என்று பேசியிருக்கிறார்.

குருமூர்த்திகளின் தரம் சாக்கடை அளவுக்குக் கொப்பளித்துக் குமிழ் விடு கிறது.

மத்தியில் பார்ப்பன ஆட்சி கொலு வீற்றிருப்பதாலும், மாநிலத்தில் கூனிக் குறுகும் ஓர் அடிமை ஆட்சி நடப்பதாலும் உஞ்சி விருத்திகளின் பூணூல்கள் கூட தடி எடுத்துக் கிளம்பி விட்டனவா?

பார்ப்பனர்கள் மாநாடு கூட்டி புல்லேந்தும் கைகளில் வாளேந்துவோம் என்று ‘வீரவசனம்‘ பேசப்பட்டபோது விரல் உரலானால் உரல் என்னாகும் என்று ஒரு கட்டத்தில் பதிலடி கொடுக்கப்பட்டது.

இப்பொழுது பார்ப்பனர்களுக்குத் குளிர் விட்டுப் போய் விட்டதாகத் தெரி கிறது. துள்ளட்டும் துள்ளட்டும் - துள்ளிய மாடுகள் பொதி சுமக்கும் என்பது அனுபவ மொழி.

இந்த வார துக்ளக்கில் கூட (27.1.2021) திமுக தலைவரின் பித்தலாட்ட வாக்குறுதி கள் என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை வெளி வந்துள்ளது.

மிகப் பெரிய அரசியல் கட்சியின் தலை வரை - சட்டமன்ற எதிர்க்கட்சித் தலை வரை - அடுத்து முதல் அமைச்சராக வரப் போகிற தலைவரைப் பார்த்து “பித்தலாட் டம்“ என்ற சொல்லைப் பயன்படுத்தும் அளவுக்கு பார்ப்பனக் கொழுப்பு தலையில் வழிகிறது.

இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டும். கங்கை நீர் என்பது ஏதோ புனிதத் தன்மை வாய்ந்தது என்பதுபோல ஹிந்துத்துவா கோட்பாட்டின் அடிப்படை யில் சந்தடி சாக்கில் கந்தப் பொடி தூவும் துன்மார்க்கம் கவனிக்கத்தக்கது!

கங்கை 2525 கி.மீ. தூரம் பாய்கிறது. சிவபெருமான் தலையில் இருப்பதாகக் கூறப்படும் கங்கை நதியில்தான் -  புனித நகரம் என்று புருடா விடும் காசி நகரின் சாக்கடை எல்லாம் சங்கமமாகிறது! அதன் அளவு 20 மில்லியன் காலன் ஆகும். நாள்தோறும் கங்கையின் கரையில் 400 பிணங்கள் எரிக்கப்படுகின்றன. மோட்ச உலகுக்கு அவர்களைப் ‘பார்சல்’ செய்வதற் காக எரிக்கப்பட்ட பிணங்களின் சாம்பல் அந்தப் ‘புனித’ கங்கையில்தான் கரைக்கப் படுகிறது. ஆண்டுதோறும் 9000 கிழட்டுப் பசுக்கள் அந்த உத்தம புனித கங்கையில் தான் தள்ளப்படுகின்றன.

கோமாதா புத்திரர்களின் கொடூரத்தைக் கவனிக்கவும்.

இந்தக் கங்கை நீரைக் குளிப்பதற்கும், குடிப்பதற்கும் பயன்படுத்திய காரணத்தால் 1927, 1963, 1970 ஆகிய ஆண்டுகளில் காசியிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் கொடுமையான தொற்று நோய்க்கு மக்கள் ஆளானதுண்டு.

இந்தியாவில் குழந்தைகள் மரணம் அதிகம் என்பது கங்கை நதி பாயும் இடங் களைச் சுற்றித்தான் அதிகமாகும். கொல்கத் தா  நகரில்  296 தொழிற்சாலைகளில் உள்ள இரசாயன கழிவுகளும் கலப்பது கங்கை யில்தான்.

 உலகில் பாயும் சுகாதாரக் கேடான ஆறுகளில் கங்கைக்கு இரண்டாம் இடம்!

புளுகுகளில் மகாப் புளுகு கங்கை புனித நீர் என்பதுதான். இந்தக் கங்கையைச் சுத்தம் செய்யத்தான் மத்திய அரசு ரூ.20 ஆயிரம் கோடியைக் கொட்டியுள்ளது.

புனித கங்கையை சுத்தப்படுத்துவது என்று கூறுவது அராஜகம் - நாத்திக செயல் என்று சங்பரிவார்கள் எதிர்ப்புக் கொடி யைத் துக்காதது ஏன்? ஏன்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக