ஒற்றைப் பத்தி : கூடுவாஞ்சேரி மா.இராசு

தினமும் ‘விடுதலை', ‘உண்மை' சுவரொட்டிகளை (போஸ்டர்) பத்திரிகைக் கடை களில் தொங்க விடுவது.

வாரம் 50 நகல்கள் (‘விடு தலை', ‘உண்மை' சிறப்புச் செய்தி களை) நகல் எடுத்துத் தருவது.

மாதம் ஒரு (‘விடுதலை' அல்லது ‘உண்மை') சந்தா சேர்த்துத் தருவது.

‘விடுதலை' வளர்ச்சி நிதி அல்லது நாகம்மை குழந்தைகள் இல்லத்துக்கு (ஓராண்டில் 2, 3 நண்பர்களிடம்) நன்கொடை பெற்றுத் தருவது.

போக்குவரத்துத் தொழிற்சங் கங்களுடன் மாதம் ஒருமுறை சந்திப்பு - துண்டறிக்கை மற்றும் புத்தகங்கள் வழங்குதல்.

மாதம் ஒரு ஏழை இயக்க நண்பருக்கு ரூ.500/- கரோனா கால உதவி தருதல் (இதுவரை 20 பேருக்கு ரூ.10 ஆயிரம்).

குடியிருக்கும் பகுதி மற்றும் பணி இடங்களில் தினமும் திண் ணைப் பிரச்சாரம். (‘விடுதலை', ‘உண்மை' செய்தி அடிப்படை யில்).

பழைய ‘விடுதலை', பழைய ‘உண்மை' ஏடுகள், நமது சிறுசிறு நூல்கள், துண்டறிக்கைகளை சந் திக்கும் நண்பர்கள், தொழிலா ளர்கள், உறவினர்களிடம் தருதல்.

விழாக்கள், நிகழ்ச்சிகளிலும் வழங்குதல்.

வாரம் ஒருமுறை பெரியார் திடல் வருகை (நூல்கள் வாங்கு வது - நூலகம் செல்வது உள்பட).

சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் தமிழ் அமைப்பு, திரு வள்ளுவர் அமைப்பு, தொழிற் சங்க அமைப்பு, பெரியார் - அம்பேத்கர் அமைப்பு நிகழ்வு களில் பங்கேற்பது. நமது நூல்கள் விற்பனை - துண்டறிக்கை தருதல்.

மாதந்தோறும் செலவு:

நூல்கள் ரூ.500, துண்ட றிக்கை ரூ.500, தொழிற்சங்கம் ரூ.500, இயக்கத் தோழருக்கு ரூ.500 ஆக மொத்தம் ரூ.2000.

இவ்வளவையும் ஓர் இயக் கத் தொண்டர் செய்கிறார் என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும். அவர்தான் கூடுவாஞ்சேரி மானமிகு மா.இராசு. அவர் ஒன்றும் பெரிய செல்வந்தருமல்ல - போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் மெக்கானிக்.

திராவிடர் தொழிலாளர் கழகத்தில் பொருளாளராகவும் இருக்கிறார். உள்ளூர் நிகழ்ச்சி களாக இருந்தாலும், வெளியூர் மாநாடாக இருந்தாலும் இவர் பங்கேற்பது என்பது எழுதி வைக்கப்பட்ட ஒன்றாகும். குடும் பமே இயக்கக் கொள்கையின் பாற்பட்டது.

‘‘எங்கள் இயக்கத் தோழர்கள் துறவிக்கும் மேலானவர்கள்'' என்று தந்தை பெரியார் சொன் னாரே, அது ஒன்றும் வெற்றுச் சொற்கள் அல்ல! கணித்துச் சொல்லப்பட்ட கருவூலமாகும்.

எதை எதிர்பார்த்து இந்த இயக்கத்திலே கருஞ்சட்டைத் தோழர்கள் இருக்கிறார்கள்? இலட்சியம்தானே அவர்களை இயக்குகிறது - அந்த இலட்சி யத்தை நடத்திச் செல்லும் தலைவர் - அந்த இலட்சியத்தைக் கொண்ட இயக்கம் இம்மூன்றும் சேர்ந்துதானே கருஞ்சட்டைத் தொண்டர்!

நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாம்போல் இருக்கிறதா!

 - மயிலாடன்

- விடுதலை நாளேடு, 19.1.21