விருதாளர்கள் பற்றிய குறிப்பு

இயக்குநர் நடிகர் போஸ் வெங்கட்

இவர், ”நீங்கள் தி.மு.க.வா?” என்று கேட்டால், “சமூகநீதி பேசு கிறவன் தி.மு.க. காரன் என்றால், ஆம்! நான் தி.மு.க. காரன் தான்.” என்பவர்.

இவர், “தமிழ்நாட்டில் எதைக் கொண்டு வந்தாலும் எதிர்க்கிறார் களே, ஏன்?” என்று கேட்டால், “ஒருவேளை இங்குள்ளவர்கள் தான் அறிவாளிகள் போலும்” என்கிறவர். இப்படி எதையும் மய்யமாகப் பேசாமல், நியாயத்தின் பக்கம் நிற்பவர்.  அந்தளவுக்கு சிந்தனைத் தெளிவும், துணிவும் உள்ளவர்.

அவர்தான் போஸ் வெங்கட் என்று அறியப்படும் வெங்கடேசன்.

இவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 15, மே 1975 ஆம் ஆண்டு, க. ஜெயராமன், ராசாமணி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.

பாண்டிபத்திரத்தில் 8 ஆம் வகுப்பு வரையிலும், ஆலங்குடியில் 10 ஆம் வகுப்பு வரையிலும், அறந்தாங்கியில் 12 ஆம் வகுப்பு வரையிலும் பயின்றவர். தொடர்ந்து அறந்தாங்கியிலேயே ஓவியக் கல்லூரியில் பயின்ற வர். இவரது தந்தை தி.மு.க. காரர். அவர்தான் இவருக்குப் பெரியாரை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

”மூட்டை தூக்கியதால் பாரத்தினால் கஷ்டப்பட்டிருப்பேனே தவிர, மூட்டை தூக்குவது இழிவானது என்று கருதியதில்லை” என்று பெரியார் சொன்னது போல, இவரும் இந்த உயரத்தை அடைய, தொடக்கத்தில் மூட்டை தூக்கியிருக்கிறார். பல்வேறு பணிகளைச் செய்து, ஒரு ஆட்டோ ஓட்டுநராக உயர்ந்திருக்கிறார்.

இவர் குறி வைத்ததென்னமோ வெள்ளித்திரையைத்தான். சிக்கிய தென்னமோ சின்னத்திரை. அதிலும் முத்திரை பதித்தார். ‘மெட்டி ஒலி' எனும் தலைப்பில் வெளியான அந்தத் தொலைக்காட்சித் தொடரில் இவரது கதாப்பாத்திரத்தின் பெயர் போஸ். அந்தத் தொடரில் போஸ் எனும் கதாப்பாத்திரம் நன்கு பிரபலமானது. நாளடைவில் போஸ் என்ற பெயர் இவர் பெயரோடு ஒட்டிக் கொண்டு, இவரது பெயரே ”போஸ் வெங்கட” ஆகிப் போனது.

சின்னத்திரை தொடரான மெட்டி ஒலியே இவரை வெள்ளித் திரைக்கும் இட்டுச் சென்றது.  திரையில் இவரது தனித்திறன் கண்டு, கலைஞர் தனது கைவண்ணத்தில் உருவான “கண்ணம்மா” எனும் திரைப்படத்தில் நாயகனாக இவரை அறிமுகப்படுத்தினார். அதுதான் இவர் நாயகனாக நடித்த முதல் திரைப்படம். இவர் இயக்கிய முதல் படம் கன்னிமாடம். இது 2020 ஆம் ஆண்டு வெளியானது. முதல் படமே ஆணவப் படுகொலை களை வீரியத்துடன் கண்டித்தது.

வெள்ளித் திரையிலும், சின்னத்திரையிலுமாக பல்வேறு விருதுகளை வென்றுள்ள இவர், குரல் வளக்கலைஞராகவும் விருதுகளை பெற்றுள்ளார். அதைத் தொடர்ந்து, டொரோண்டோ திரைப்பட விழாவில் கலந்துகொண்ட இவர் இயக்கிய கன்னிமாடம் திரைப்படம் சிறந்த திரைப்படமாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. அதிக பார்வையாளர்களைப் பெற்ற படமாக கன்னிமாடம் திரைப் படம் அடையாளப் படுத்தப்பட்டிருக்கிறது.

2011 க்குப் பிற்கு வெளிப்படையாகவே தன்னைத் தி.மு.க. காரன் என்று அடையாளப் படுத்திக்கொண்டு பிரச்சாரத்திற்கே சென்றவர்.

இப்படி, திராவிட இயக்கச் சித்தாந்தத்தை வாழ்க்கை நெறியாகக் கொண்டு, அதிலும் வெற்றி பெற்று, அதைத் திரைப்படத்துறையிலும் வெற்றிகரமாக செயல்படுத்திவரும் பல்துறை வித்தகர் நமது போஸ் வெங்கட் அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் நடைபெறும் திராவிடர் திருநாள் நிகழ்ச்சியில், 2021 ஆம் ஆண்டிற்கான பெரியார் விருது மகிழ்வுடன் வழங்கப்பட்டது.

இயக்குநர் கரு. பழனியப்பன்

பார்ப்பனரல்லாதாரின் அமைப்பான திராவிடர் இயக்கம், நம் மக்கள் வாழும் பகுதியெங்கும் நமது கனத்த தோலில் சுருக்கென்று சூடு போடும் படியாக சுயமரியா தைப் பிரச்சாரத்தைச் செய்து வந்த காரணத்தால், நாளடை வில் ஆயிரமாயிரம் பேர்க ளுக்கு சுயமரியாதை தமது பிறப்புரிமை என்ற எண்ணம் ஆழ வேரூன்றிவிட்டது.

அதனால் விளைந்தது என்ன? அடிமைப் பட்டுக் கிடந்த மக்களின் சுயமரியாதை, சிறகு விரித்துச் சுதந்திரமாகப் பறக்கத் தொடங்கிவிட்டது. இது தொடங்கி ஒரு நூற்றாண்டு காலம்தான் ஆனது. அதற்குள் ஏதேதோ சூழ்ச்சிகள் செய்து துளிர்த்துக் கொண்ட சனாதனம் அந்தச் சுதந்திரச் சிறகுகளை வெட்ட அசுர பலத்துடன் மீண்டும் படையெடுத்து வந்தது.

அந்தப் படையெடுப்பை நேரடியாக இயக்க வாதிகள் மட்டுமே எதிர்கொள்வார்கள் என்று எதிரி கள் எண்ணியதற்கு மாறாக, அதுவரை சுயமரியாதைச் சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டு தங்கள் துறையில் சாதனையாளர்களாகத் திகழ்ந்த ஏராளமா னோர், வசதியான அந்த வளையத்தை உதறிவிட்டு, கொள்கை எதிரிகளே திகைக்கும்படியாக, வெளிப் படையாகக் களத்திற்கு வந்தனர். அப்படி வந்தவர் களுள் முக்கியமான ஒருவர், திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன்.

இவர் மார்ச் 6, 1972 இல், காரைக்குடியில் பாலசின்னக் கருப்பையா, நாகம்மையாருக்கு மூத்த பிள்ளையாகப் பிறந்தார்.

இவரது தந்தை தீவிர புத்தக வாசிப்பாளர். பிறகென்ன? கரு.பழனியப்பனுக்கும் சிறு வயதி லேயே புத்தகங்களின் மீது ஈர்ப்பு உண்டாகி விட்டது.

இவர் மதுரை செவன்த் டே அட்வெண்டிஸ்ட் பள்ளியில், பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கிலத்தில் இளங்கலை யும், மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் இலக்கி யத்தில் முதுகலையும் கற்றார்.

ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்  கரு. பழனியப்பன்.

1994ஆம் ஆண்டு திரைப்படத்துறையில் கால் பதித்து, இயக்குநர்கள் ரா.பார்த்திபன், எழில் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். இவர் இயல் பாகவே நேர்த்தியாகக் கதை சொல்லும் திறன் கொண்டவர்.

இவர் இயக்கிய முதல் திரைப்படம் “பார்த்திபன் கனவு” எனும் பெயரில் 2003 இல் வெளியானது. இந்தப்படம் மாநில அரசின் சிறந்த இயக்குநருக் கான விருதையும், சிறந்த நாயகனுக்கான விரு தையும் பெற்றதன்மூலம் முதல் படத்திலேயே முத்திரை பதித்தார்.

தொடர்ந்து ‘சிவப்பதிகாரம்’, ‘பிரிவோம் சந்திப் போம்’, ‘மந்திரப்புன்னகை’, ‘சதுரங்கம்’,  ‘ஜன்னல் ஓரம்’ போன்ற படங்களை இயக்கியுள்ளார். இதில் 2011 இல் வெளியான ’சதுரங்கம்’ படத்திற்காகசிறந்த கதையாசிரியருக்கான விருதைப் பெற்றிருக்கிறார். திரைப்பட நடிகராகவும் தன் பயணத்தை விரித் திருக்கிறார்.

சமூக அக்கறையைத் திரைப்படங்களில் முன் வைத்ததோடு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் மேடைகளில் ஒலிக்கத் தொடங்கியது இவரது குரல்.

ஒரு தனியார் தொலைக்காட்சியில், ஜாதிப்பட் டம் தேவையா? எனும் தலைப்பில் விவாதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் இவர் கருத்தாளராக அழைக்கப்பட்டிருந்தார்.

கிடைத்த சின்னஞ்சிறு வாய்ப்பில் தமிழ்நாடு பெரியார் மண் தான் என்று சொல்லாமல் சொல்லி விட்டார்.

சமகாலத்தில் தமிழர்களின் பிரச்சினைகளப் பேசுகின்ற வெகுஜன ஊடகமான தொலைக் காட்சியில்  தொடர்ந்து ஒலிக்கத்  தொடங்கியிருக் கிறது கரு. பழனியப்பன் அவர்களின் குரல்  - “தமிழா  தமிழா” நிகழ்ச்சியின் வாயிலாக! 

நடுநிலைமை என்பது அயோக்கியத்தனம் என்பதில் உறுதியாக நிற்பவர்.

மனித சமத்துவத்துக்கான திராவிடக் கருத்தி யலை “கருநீலம்” என்ற இணையதளம் வாயிலாக தொடர்ந்து பதிவிட்டு வருபவர். ஆகவே இது சாதாரண அவதாரம் அல்ல!. ஆரிய அவதாரங் களை சம்ஹாரம் செய்யும் அறிவாயுத அவதாரம்!

பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களின் சிந்தனைகளை இளைஞர் களிடம் கொண்டு சேர்ப்பதை ஒரு கடமையாகக் கொண்டிருப்பவர்.

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் ஆரியப் பண்பாட்டைத் தகர்க்கும் பணியில், இப்படி உள்ளமும் செயலும் ஒன்றெனக் கொண்டு சளைக்காது ஈடுபட்டு வரும் திரைப்பட இயக்குநர், சமூக செயல்பாட்டாளர் மானமிகு கரு. பழனி யப்பன் அவர்களைப் பாராட்டவும், மென்மேலும் அவரை ஊக்குவிக்கும் பொருட்டும், தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில், 2021ஆம் ஆண்டுக் கான பெரியார் விருது மகிழ்வுடன் வழங்கப்பட்டது.