அண்மையில் உச்சநீதிமன்றத்தில் மராத்தியர்களுக்கான தனி இடஒதுக்கீடு - 50 விழுக்காடு அளவிற்கு மேல் செல்வதாலும், அதற்கான விதி விலக்கை நிரூபிக்கத் தக்கக் காரணங்கள் இல்லாததாலும் அந்தச் சட்டம் செல்லாது என 5 நீதிபதிகளைக் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வு தீர்ப்பளித்தது. அதோடு 'சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும்' பிற்படுத்தப்பட்ட மக்களை அடையாளம் கண்டு சட்டம் இயற்றும் உரிமை அரசமைப்புச் சட்டம் 342A பிரிவுப்படி (102ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி) மத்திய அரசுக்கே உரியது; மாநிலங்களுக்கல்ல - என்ற தீர்ப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மராத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று, மாநில உரிமைகள் பற்றியும் விளக்கிட அத்தீர்ப்புக்கு மறுசீராய்வு (Review Petition) மனுவினை மத்திய பா.ஜ.க. அரசே உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முன் வந்துள்ளது!
நம்மைப் போன்ற பலரும் விடுத்த வேண்டுகோள் தக்க பலனளித்திருக்கிறது என்பது தெரிய வருகிறது.
சட்டத் தெளிவு மேலும் ஏற்பட இதன் மூலம் மேலும் வழி வகை ஏற்படும் என்பதால் அதனை வரவேற்கிறோம்.
உச்சநீதிமன்றத்தின் மறுசீராய்வு எதிர்பார்த்த பலனை தரவில்லையெனில், அரசமைப்புச் சட்ட (102-ஆவது) திருத்தத்திற்கு திருத்தம் கொண்டு வருவது தான் ஒரேவழி என்பது சட்டநிபுணர்கள் கருத்தாகும்.
- "சமூகநீதிப் போராளி"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக