தமிழ்நாடு அரசு பங்கேற்கவில்லை ஏன்? அமைச்சர் விளக்கம்
சென்னை, மே 17 புதிய கல்விக் கொள்கை அமலாக்கம் குறித்து மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மாநிலக் கல்வி செயலாளர்களுடன் இன்று காணொலிமூலம் ஆலோசனை நடத்துகிறார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மத்திய அரசுக்கு அவசர கடிதம் எழுதியிருந்தார்.
இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் உயரதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்துவதே ஏற்புடையதாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்ட அந்த மின் னஞ்சலுக்கு பதில் வராததால் கூட்டத்தில் பங்கேற்க வில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக