புதன், 12 மே, 2021

தந்தை பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை!


சென்னை, மே 7 தந்தை பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இன்று (7.5.2021) முற்பகல் ஆளுநர் மாளிகையில் பதவி யேற்புக்குப் பின்னர், அண்ணா, கலைஞர் நினைவிடங் களுக்குச் சென்று மரியாதை செலுத்தி, பெரியார் திடலுக்கு முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் வருகை தந்து, தந்தை பெரியார் நினைவிடத்திலும், அன்னை மணியம்மையார் நினைவிடத்திலும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அமைச்சர் பெருமக்களும் மரியாதை செலுத்தினர்.

கழகத் தலைவருக்கு முதலமைச்சர் சால்வை அணிவித்தார். முதலமைச்சருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சால்வை அணிவித்து, ''தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள்'' நூலினையும் அளித்து வாழ்த்துகளைத் தெரி வித்துக் கொண்டார்.

அமைச்சர்கள் அனைவருக்கும் அந்நூலினைக் கழகத் தலைவர் அளித்து வாழ்த்துகளைக் கூறினார்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், திராவிடர் கழக வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன் மற்றும் கழகத் தோழர்கள் அன்புடன் வரவேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக