தமிழர் தலைவர் அறிக்கை

நாளை நடைபெறவிருக்கும் நாடு தழுவிய விவசாயிகளின் அறப்போராட்டத்திற்கு திராவிடர் கழகம் ஆதரவு தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

முறையற்ற முறையில் நிறைவேற்றப்பட்ட,  விவசாயி களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் கறுப்புச் சட்டங்களான மூன்று வேளாண் சட்டங்களை மத்திய பா.ஜ.க அரசு திரும்பப் பெறும்வரை போராடுவோம் என்ற உணர்வோடு, கடந்த 6 மாதங்களுக்கு மேல் தலைநகர் டில்லியின் எல்லையில் கொளுத்தும் வெயில், வாட்டும் குளிர், கொட்டும்பனி, கடும் மழை என்று பாராமல் கொள்கை உறுதியோடு போராடும் விவசாயப் பெருங்குடி மக்கள் வரலாறு காணாத வகையில் நடத்தும் அறப்போரையும், அவர்களது அந்த நியாயமான மக்களாட்சி உரிமையையும் ஆதரிக்கும் வகையில் நாளை (26.5.2021) நடைபெற விருக்கும் நாடு தழுவிய அறப்போராட்டத்திற்குத் திராவிடர் கழகம் அதன் ஆதரவினை நல்குகிறது.

விவசாயிகளுக்கு என்றும் துணை நிற்போம்!

 கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம் 

சென்னை      

25.5.2021