வெள்ளி, 19 நவம்பர், 2021

ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன

 

விவசாயிகளுக்கு - மக்களாட்சிக்குநியாயத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி!

அறவழியில் போராடிய போராளிகளுக்கு வாழ்த்துகள் - பாராட்டுகள்!

ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்பட்டுள்ளன என்ற செய்தி விவசாயிகளுக்கும்மக்களாட்சிக்கும்நியாயத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

விவசாயிகளின் நலனுக்கு முற்றிலும் விரோதமானஅவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்தது போன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுஅதனால் பாதிக்கப்படும் விவசாயிகள் ஓராண்டுக்கு மேல் போராடி வருவதின் விளைவாகமூன்று வேளாண் சட்டங்களும் பிரதமரால் இன்று (19.11.2021) திரும்பப் பெறப்பட்டுள்ளன என்று வந்துள்ள செய்திவிவசாயிகளுக்கும்மக்களாட்சிக்கும்நியாயத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்!

வெயில்மழை பாராது எடுத்த போராட்டத்தில் குடும்பம் குடும்பமாக ஓராண்டிற்கு மேலாக உறுதியாக அறவழியில் போராடிய போராளிகளுக்குப் பாராட்டும்வாழ்த்துகளும்!

அனைத்துக் கட்சிகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்!

இதனைத் தொடக்கத்திலேயே எதிர்க்கட்சியாக இருந்தபோதும் எதிர்த்துஆளும் கட்சியான பிறகும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றிய தி.மு.அரசுக்கும்இதனை எதிர்த்து இடைவிடாமல் அறப்போராட்டம் நடத்திய அனைத்துக் கட்சிகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்!

மக்கள் சக்திக்குமுன் எந்த ஆட்சியும் தலைவணங்கித்தான் ஆகவேண்டும்தேர்தல் அச்சம் உலுக்கிவிட்டது!

இந்த சட்டங்களைக் கண்ணை மூடி ஆதரித்த சில கட்சியினரின் கண்கள் இனியாவது திறக்குமா என்பதே முக்கிய கேள்வியாகும் - பாடம் கற்கட்டும் அவர்கள்!

 கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை       

19.11.2021          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக