• Viduthalai
சென்னை,நவ.11- திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள் ளான பகுதிகளில் பாதிக்கப்பட்ட பொதுமக் களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரணப்பொருள்கள் வழங்கப்பட்டன.
திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், பெரியார் தொண்டறத்தின் சார்பில் தமிழர் தலைவரின் வழிகாட்டுதலில் நேற்று (10.11.2021) சென்னை புளியந்தோப்பு மோதிலால் நேரு தெருவிலும், பட்டாளம் மார்க்கெட், கே.எம்.கார்டன் பகுதிகளிலும் இடுப்பளவு நீரில், மிதவைகளிலும், மீன்பாடி வண்டியிலும், தலைச்சுமையாகவும், வீடு வீடாகச் சென்று இரவு உணவு விநியோகம் செய்யப்பட்டது.
தொண்டறப் பணியில் நேற்று பங்கேற்றோர்
தளபதி பாண்டியன், மங்களபுரம் பாஸ்கர், சா.தாமோதரன், பூந்தமல்லி தமிழ்ச்செல்வன், சண்முகப்பிரியன் மகேந்திரன், சேகர், பசும்பொன் செந்தில் குமாரி, மு.பவானி, காரல்மார்க்ஸ், வை.கலையரசன், திவாகரன், தமிழ்செல்வன், இளந்தமிழ் சேரன், சோ.சுரேஷ், பிரபு, ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வீரப்பார் சுரேஷ், ராமகிருஷ்ணன், வில்லியம்ஸ், வேல்முருகன், ஆனந்த், ரங்கநாதன், ஓட்டுநர்கள் மகேஷ், கணேஷ், மாலதி, இந்திரா, நாகமணி, ஆதி லெட்சுமி, ராவணம்மாள், நித்யகுமார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக