திங்கள், 29 நவம்பர், 2021

273 பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலக் கல்லூரி விடுதிகளில் தலா ஒரு செம்மொழி நூலகம் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு


சென்னைநவ.29 தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப் பட்டோர்மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நலத்துறை செயலாளர் ஆர்.கார்த்திக் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: 2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கையின் போது பிற்படுத் தப்பட்டோர் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நல அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோரால்கல்லூரி விடுதிகளில் தங்கி பயின்று வரும் மாணவமாணவியரின் கல்வி அறிவு மற்றும் பொது அறிவினை வளர்க்க 273 பிற்படுத்தப்பட்டோர்மிகப்பிற்படுத்தப் பட்டோர்சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலக் கல்லூரி விடுதிகளில் தலா ஒரு நூலகம் செம்மொழி நூலகம் என்ற பெயரில் 2 கோடியே 73 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும் என அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இந்த அறிவிப்புகளை செயல்படுத்தும் பொருட்டு பிற்படுத்தப் பட்டோர் நல இயக்குநர்சிறுபான்மையினர் நல இயக்குநரின் கடிதங்களில், “273 பிற்படுத்தப்பட்டோர்மிகப்பிற்படுத்தப்பட்டோர்சீர்மரபினர் மற்றும் சிறுபான் மையினர் நல கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களின் கல்வி மற்றும் அறிவு நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு விடுதிக்கும் செம்மொழி நூலகம் என்ற பெயரில் தலா ஒரு நூலகம் அமைக்கலாம்இத்திட்டத்தினை செயல்படுத்தும் பொருட்டு ஒரு குழுவினை அமைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

நூலகம் அமைய உள்ள அறையின் நுழைவாயிலில் செம்மொழி நூலகம் என்ற பெயர் பலகை நிறுவப்படும்கல்லூரி விடுதிகளில் தலா ரூ.50,000 செலவில் புத்தகம் வழங்கப்படும்தளவாட பொருட்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்நூலகத்தில் தலைசிறந்த மற்றும் தரமான புத்தங்களை தேர்வு செய்ய மாநில அளவிலான குழு அமைக்கப்படும்இத்திட்டத்தினை செயல்படுத்த தேவைப்படும் 2 கோடியே 74 லட்சத்து 52 ஆயிரம் ஒப்புதல் வழங்கி ஆணையிடப்படுகிறதுஇவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக