வெள்ளி, 10 ஜனவரி, 2020

குஜராத் சட்டமன்ற சபாநாயகரின் பார்ப்பன வெறிப் பேச்சு! - வாய்க்கொழுப்பு!!

அரசமைப்புச் சட்டத்தை இயற்றியவர் அம்பேத்கர் அல்ல - "ஒரு பிராமணர்"தானாம்

"பிராமணர்களுக்கு" என்று தனி மரபணு இருக்கிறதாம்!

அகமதாபாத், ஜன.7பிராமணர்களுக்கு என்று தனி மரபணு உண்டு. அவர்கள் தான் அறிவாளிகள், இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை எழுதியவர்கூட  அம்பேத்கர் அல்ல --_ ஒரு பிராமணர்தான் என்று பார்ப்பன ஜாதிவெறி தலைக்கேறி உளறிக் கொட்டியுள்ளார் குஜராத் சட்டப் பேரவை சபாநாயகர் (பிஜேபி)

நோபல் பரிசு பெற்ற இந்தியர்களில் அதிகம் பேர் பிராமணர்கள், அவர்கள் மனித குலத்திலேயே உயர்வான மரப ணுவைக் கொண்டவர்கள்  என்று குஜராத் சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி கூறியிருக்கிறார்.

குஜராத் மாநிலம், அடலாஜ் நகரில் "மெகா பிராமணர் பிசினஸ் கான்பரன்ஸ்" என்னும் பார்ப்பனர் தொழிலதிபர்கள் மாநாடு நடைபெற்றது. விழாவில் குஜராத் முதலமைச்சர் விஜய்ரூபானி கலந்து கொண்டார்.

விழாவில் அம்மாநில சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி பேசுகையில் பிரா மணர்களின் உடல்களில் வித்தியாசமான மரபணு  இருப்பதாக கூறினார். விழாவில் அவர் மேலும் பேசியதாவது:

நாங்கள் பார்ப்பனராக பிறந்திருக் கிறோம். பிராமணர்களின் மரபணு நம் மிடம் உள்ளது. இந்த மரபணுவின் சிறப்பு மற்றவர்களை  ஆசிர்வதிக்கவும், உலக மக்களின் நலன்களில் அக்கறை கொண் டவர்களாக மாற்றம் கொண்டுள்ளது..

சட்டத்தை எழுதியது அம்பேத்கர் அல்ல - ஒரு பிராமணரே

அரசியலமைப்பு சட்டம் எப்படி இயற் றப்பட்டது தெரியுமா? அதை இயற்றியவர் அம்பேத்கர் இல்லை. ஒரு பிராமணர் தான் அரசியலமைப்பு சட்டத்தை இயற்றி இருக்கிறார். ,அரசியலமைப்பு சட்டத்தின் வரைவு எப்படி தயாரிக்கப்பட்டது? 60 நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்களை படித்து அதை தயாரித்தது யார்? எல் லோரும் நினைப்பது  போன்று அம்பேத்கர் அல்ல; அதை ஒரு பிராமணர் தான்  தயாரித்தது. அவர் பெயர் பெனகல் நரசிங்க ராவ். தனித்துவமான மரபணுவைப் பெற்றதால் தான் இவ்வாறான ஒரு அரசமைப்புச் சட்டத்தை எழுத முடிந்தது.

இத்தகவலை அம்பேத்கரே கூறியிருக்கிறார். அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் அவர் பேசும் போது, இந்த பெருமை எல்லாம் இந்த பி.என்.ராவைச் சேரும் என்று அம்பேத்கர் குறிப்பிட்டிருக்கிறார். பிராமணர் எப் போதும் மற்றவர்களை முன்னுக்கு நிறுத்தி, பின்னால் இருந்து செயல்படுபவர்கள் என்பது வரலாறு. அப்படித்தான் அம் பேத்கரை முன் நிறுத்தியவர் பி.என்.ராவ்.

நோபல் பரிசுகளை இதுவரை 8 இந்தியர்கள் பெற்றுள்ளனர். அதில் 7 பேர் பிராமணர்கள். அண்மையில் அதை வென்ற அபிஜித் பானர்ஜி ஒரு பிராமணர். நண்பர்களே, ஆப்ரிக்கா சென்று பாருங்கள். அங்குள்ள மக்களின் நிறத்தை யும், அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதையும் பார்க்கலாம். சீன மக்களை பாருங்கள் அவர்களின் கண்கள் திறந் திருக்கிறதா? மூடி இருக்கிறதா என்று அறியமுடியாது. இதே போன்று தான் ஜப்பானியர்களும்.

ஆனால் நீங்கள் இந்தியா வந்தால், பஞ்சாப் , அரியானா எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். சிலர் அறிவுள்ளவர்களாக இருப்பார்கள்; பெரும்பாலானோர் அறி வற்றவர்களாக (மாடுகள்) இருப்பார்கள். இப்படி தான் நாடு முழுவதும் வித்தி யாசமான காலநிலை, மனிதர்கள் இருப் பார்கள். அதற்கு காரணம், ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் டிஎன்ஏ தான் என்று பேசினார்.

அன்று மக்களவைத் தலைவர் பேசினார்

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோடாவில் 11.9.2019-அன்று  அகில பிரா மின் மகாசபா'' நிகழ்ச்சி ஒன்றில் தலை மையேற்று பேசிய மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கூறும்போது,

பார்ப்பனர்கள் சமூகத்தில் மிகவும் உயர்ந்த தகுதியைப் பெற்றுள்ளனர். இது பிறப்பால் வந்த தகுதி ஆகும். இது எளிதாக கிடைத்ததல்ல, பார்ப் பனர்களின் அளப்பரிய தியாகம், தவம் போன்றவற்றிற்கு கிடைத்த பரிசு ஆகும். இன்றும் பார்ப்பனர்கள் மிகவும் உயர்ந்த தகுதியைப் பெற்று அனைவருக்கும் தலை சிறந்த வழிகாட்டியாக உள்ளனர் என்று கூறி னார்.

இதையே அவர் தனது சமூக வலை தளத்திலும் பதிவிட்டுள்ளார். மக்களவைத் தலைவரின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் குஜராத் மாநில சட்டப் பேரவை தலைவர் பார்ப்பனர்களுக்கு என்று உலக மனிதர்களிடமிருந்தே சிறப் பான மரபணு உள்ளது என்று கூறியுள் ளார்.

குறிப்பிட்ட ஜாதியினருக்கென்று நடத்தும் இந்த மாநாட்டில் அரசமைப்பு சட்டத்தின் படி பதவியேற்ற குஜராத், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட பல மாநில ஆளுநர்கள்  கலந்துகொண்டனர்.

 - விடுதலை நாளேடு 7 1 20

செவ்வாய், 7 ஜனவரி, 2020

சாமியும் சுயராஜ்யமும் பார்ப்பனர் நன்மைக்கே!

25.7.1947 - குடிஅரசிலிருந்து...

இன்று நாங்கள் செய்துவரும் இந்தத் திராவிடர் கழகப் பிரசாரத்துக்குப் பார்ப்பனர்கள் எதிரிகள்; காங்கிரஸ்காரர்கள் எதிரிகள்; கம்யூனிஸ்டுகள் எதிரிகள்; மதவாதிகள் எதிரிகள்; இவர்கள் எல்லோரும் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள். இவற்றிற்கெல்லாம் பார்ப்பனர்களே தலைவர்கள். பார்ப்பனர்கள் பிழைப்புக்கு ஆதரவளிப்பதற்கே இந்த ஸ்தாபனங்கள் இருக்கின்றன. ஆதலால் நாங்கள் இந்த எதிர்ப்புக்களைச் சமாளித்தால்தான் எங்கள் வேலை நடைபெறமுடியும்.

பார்ப்பானும் கல்லும் சாமிகளா? நான் சாமி இல்லை  என்று சொல்லுவதாகவே வைத்துக்கொள் ளுங்கள், அதற்காக இந்த ஆள்களுக்கு ஏன் ஆத்திரம் வரவேண்டும்? இன்று நீங்கள் யாரை சாமி என்கிறீர்கள்? பார்ப்பனனைத்தானே சாமி என்கிறீர்கள்? பிறகு கல்லுகளையும், பொம்மை களையும்தானே சாமி என்கிறீர்கள்; இவை சாமி ஆகுமா? நீங்கள் எதற்காக மனிதனைச்  சாமி என்று கூப்பிடுகிறீர்கள்? எதற்காக மனிதனைச் சாமி என்று  கூப்பிட்டுக் கையெடுத்துக் கும்பிடுகிறீர்கள்? மற்றும், கல் பொம்மை சாமிகளும் பார்ப்பான் மாதிரித்தானே செய்து  வைக்கப்பட்டிருக்கின்றன? பார்ப்பானுக்கு உச்சிக்குடுமி என்றால், சாமிக்கும் உச்சிக்குடுமி! பார்ப்பானுக்குப் பூணூல் என்றால் சாமிக்கும் பூணூல்!  பார்ப்பானுக்குப் பஞ்சகச்சம், வேட்டி என்றால் சாமிக்கும் பஞ்சகச்சம், வேட்டி! பார்ப்பானை நாம் தொடக்கூடாது என்றால், சாமியையும் நாம் தொடக்கூடாது. பார்ப்பானை நாம் தொட்டால் தோஷம் என்றால் சாமியையும் தொட்டால் தோஷம்!

இப்படியாகப் பார்ப்பானும், பார்ப்பானைப் போல் உருக்கியும், அடித்தும் வைத்த பொம்மைகளும், எழுதி வைத்த சித்திரங் களும்தான் சாமிகளாக இருக்கின்றனவே தவிர,வேறு எது உங்களுக்குச் சாமியாக இருக்கிறது?  இந்தச் சாமிகளை நாங்கள் சாமிகள் அல்ல என்கிறோம். இதில் தப்பு என்ன?

நீங்கள் சொல்லுங்கள், எதற்காக ஒரு மனிதனை சாமி என்று கூப்பிடுவது? அந்த மனிதன் எந்த விதத்தில் உங்களைவிட மேலானவன் ஆவான்? நம் ஜனங்களுக்கு வெட்கமில்லை, மானமில்லை என்ப தல்லாமல் வேறு என்ன? இந்த ஊரில் ஒன்றோ இரண்டோ, பார்ப்பன வீடுகள் இருப்பதாகக் கேள்விப்பட்டேன், அந்தப் பார்ப்பனரின் விஷமச் செய்கைதான் சுவரில் இப்படி எழுதச் செய்தது என்றும் சொன்னார்கள்.

பார்ப்பன ராஜ்யமே சுயராஜ்யம்!

உங்களுக்கு  சாமியைப்பற்றி புத்தி எவ்வளவு இருக்கிறதோ, அவ்வளவு புத்திதான் உங்களுக்கு சுயராஜ்யம், பொதுவுடைமை, நேதாஜி, ஜெய்ஹிந்த், என்பவைகளைப் பற்றியும் இருக்கிறது. சுயராஜ்யம் என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? சுயராஜ்யம் என்றால் பார்ப்பான் மந்திரி, பார்ப்பான் பெரிய அதிகாரி, பார்ப்பான் கொள்ளை என்பதல்லாமல் வேறு மாறுதல் என்ன என்று கேட்கிறேன். உங்களுக்கு சுயராஜ்யம் வந்தால் பார்ப்பானுக்குச் சாமிப்பட்டம், பிராமணப்பட்டம், மேல்ஜாதிப்பட்டம், போய்விடுமா? அல்லது உங் களுக்குச் சுயராஜ்யம் வந்தால் உங்களுக்குள்ள சூத்திரப்பட்டம், பஞ்சமப்பட்டம், கீழ்ஜாதிப் பட்டம், போய்விடுமா? சொல்லுங்கள் பார்ப்போம் அல்லது இங்கு யாராவது காங்கிரஸ்காரர் இருந் தால் இங்கு வந்து சொல்லட்டுமே பார்ப்போம். பித்தலாட்டமும், புரட்டும் சுயராஜ்யம் என்று சொல்லப்படுவதல்லாமல், யோக்கியமும், நாணய மும் தான் சுயராஜ்யம் என்று யாராவது சொல் லட்டும்! நான் இப்படிச் சொல்லுவதால் சுயராஜ்யம் வேண்டாம் என்று சொல்லுவதாக யாராவது கருதினால் அது தவறு, தவறு என்றே சொல்வேன்.

இன்று மக்களுடைய மானமற்ற தன்மையும், மடத்தனமும், ஏமாந்த தன்மையும்தான்  சாமியாக, சுயராஜ்யமாக இருந்து வருகின்றனவே தவிர உண்மைக் கடவுளும், உண்மை சுயராஜ்யமும் உங்களுக்குத் தெரியவே தெரியாது. உங்களுக்கு யாரும்  சொல்லவும் இல்லை! விளக்கவும் இல்லை!

ஓரவஞ்சனை செய்யும் சாமி

உண்மையான கடவுள் ஒன்று இருக்கிறது என்றால் பாடுபடாத சோம்பேறி,  பித்தலாட்டக் கூட்டத்தார் வயிறு வீங்கச் சாப்பிடவும், பாடுபடும் பாட்டாளி மக்கள் பட்டினி கிடந்து, உடுத்த உடையில்லாமல், இருக்க வீடில்லாமல், படிக்க எழுத்து அறிவில்லாமல் இருக்கவும் முடியுமா என்று கேட்கிறேன்?  சாமியைப் பற்றிக் கவலை கொள் ளுகிற எவனுக்காவது இந்தக் குறைகளைப் பற்றிய கவலை இருக்கிறதா? என்று கேட்கிறேன்.

கோவில்கட்டி கும்பாபிஷேகம் பண்ணின ஜாதியார் கீழ்ஜாதியார் என்றும், சூத்திரன் என்றும், அழைக்கப்படுவதை, நடத்தப்படுவதை எந்தச் சாமியாவது தடுத்ததா? என்று கேட்கிறேன்.

அதுபோலவே, எந்தச் சுயராஜ்யத்திலாவது அல்லது இப்போது பேசப்படுகிற, கொடிகள் பறக் கின்ற மகாத்மாக்களோ, ரிஷிகளோ, வீரசூர தளபதிகளோ, தியாகமூர்த்திகளோ, வீராங் கனை களோ, லட்சுமிகளோ, தேவிகளோ, தலைவர் களோ இருந்து நடத்துகின்ற எப்படிப்பட்ட சுயராஜ்யத்திலாவது பிராமணன், சூத்திரன், பஞ்சமன், மிலேச்சன் இல்லாமல் ஒரே ஜாதி மக்கள் உள்ள சுயராஜ்யமாய் இருக்குமா என்று கேட்கிறேன்? யாராவது பதில் சொல்லட்டுமே பார்ப்போம்! இங்கு பல கொடிகள் கட்டிய கொடி வீரர்களாவது, ஜெய்ஹிந்த் கூப்பாடுபோடும் நேதாஜி சங்கத்தாராவது, காங்கிரஸ் சமதர்மி களாவது, யாராவது சொல்லட்டுமே, பார்ப்போம்!  சாமி இல்லை என்கிறவனும், தேசத்தைக் காட்டிக் கொடுத்தவனும் வருகிறான்; ஒருவரும் போகா தீர்கள், என்று துண்டுப் பிரசுரம் போட்டுச் சுவரில் எழுதிவிட்டால் போதுமா? வெட்கமும் இல்லை! அறிவும் இல்லையே! என்றால், இந்தக் கூட்டத் தாரின் இழிவான வாழ்வு எதற்குப் பயன்படும் என்று கேட்கிறேன். சாமி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, சுயராஜ்யம் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, இந்த நாட்டுப் பழம் பெரும் குடிமக்களாகிய நாம் 100-க்கு 90 பேர் கொண்ட திராவிடர்கள் சூத்திரர் அல்லர், அடிமைகள் அல்லர், பஞ்சமர் அல்லர், கடை ஜாதியார் அல்லர், மக்களை ஏமாற்றி  வஞ்சித்துப் பாடுபடாமல் வயிறு வளர்க்கும் சோம்பேறிக் கூட்டத்தவரான பிராமணர் அல்லர், மேற்ஜாதியார் அல்ல யாவரும் ஒரு குல மக்களே!

தொடரும்...

மனிதனுடைய அல்லது மிருகத்தினுடைய மலம் கையிலோ காலிலோ பட்டுவிட்டால் தண்ணீர் விட்டுக் கழுவி விடுகின்றார்கள். ஆனால், மனிதர் கள் சரீரத்தின்மேலோ அல்லது சரீரத்தின்மேல் இருக்கும் துணியின் மேலோ பட்டுவிட்டால் குளித்துத் தீரவேண்டும் என்கிறார்கள். எனவே, இவர்கள் மனிதத்தன்மையுள்ள மனிதர்களா?

கோயிலைச் சுத்தப்படுத்த என்று மாட்டையும், சாணியையும், மூத்திரத்தையும் கோயிலுக்குள் கொண்டு போகிறார்கள். ஆனால், மனிதன் அக்கோயிலிலுள்ள கடவுளை வணங்க என்று உள்ளே போனால் சாமி தீட்டாகி விட்டதென்று கும்பாபிஷேகம் செய்கிறார்கள். இவர்கள் அறி வுள்ள மனிதர்களா?

-  தந்தை பெரியார்

- விடுதலை நாளேடு 3 1 20

தமிழ்நாட்டில் ஜாதிப் பிரிவினைகளை ஏற்படுத்தியது யார்?

தீண்டாமை என்பது ஒரு கற்பனையே

பேராசிரியர் எம்.சீனிவாசய்யங்கார் ஆராய்ச்சி

(வாசக நேயர்களே,

ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.

இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.

திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)

 

(தேரழர் எம்.சீனிவாச அய்யங்கார் எம். ஏ., அவர்கள் - 1914இல் வெளியிட்ட தமிழ் ஆராய்ச்சி ('Tamil Studies') என்னும் நூலில், 4, 5ஆவது அத்தியாயத்தில் எழுதியுள்ள வற்றிலிருந்து சில பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவைகள் ஒரு தமிழன் கருத்துக்களல்ல. ஆரியருடைய ஆராய்ச்சியின் பலனாக வெளியிடப்பட்ட கருத்துக்கள். ஆகவே ஆரியர்களும் தமிழர்களும் ஊன்றிப்படித்து பயன் பெறுமாறு விழைகின்றேன்)

"தென்னிந்திய கல்வெட்டுகளிலிருந்து தெரியவருவது யாதெனில் தமிழ்நாட்டு மன்னர்களின் அழைப்புக்கிணங்கி அவ்வப்போது பார்ப்பனர் வடநாடு விட்டு தமிழ்நாடு வந்து குடியேறினார்கள். அந்தப் பழங்காலத்திலேயே திராவிடர் போதிய அளவு நாகரீகம் பெற்றிருந்தமையால் பார்ப்பனர் தங்களோடு சத்திரியர்களையோ, வைசியர்களையோ தமிழ் நாட்டிற்கு அழைத்துக் கொண்டு வரும் அவசியம் ஏற்படவில்லை.

இயற்கைக்கு மாறானதொன்றுமில்லை

"தமிழ்நாட்டிலுள்ள பார்ப்பனர்களும் சூத்திரர்களும் (தமிழரைதான் ஆரியர், சூத்திரர் என்கிறார்) தனித்தனி வேறுபட்ட இரண்டு மனிதவகுப்பைச் சேந்தவர்கள். ஒரு வகையில் ஒவ்வொரு சமூகத்திற்கும், தனித்தனி, மதம், நீதி சமூகசட்டதிட்டங்கள், கலைகள் இருந்தன. ஆகவே ஒரு சமூகத்தின் கலைகள் மதம், நீதி சமூகவிதிகள் ஆகிய இவை களை மற்ற சமூகத்தில் நுழைக்கமுயல்வது மிகவிந்தை யாகவும் மதிகெட்ட ஒரு செயலாகவும் தோற்றப்பட வேண்டும். இந்த உண்மையை ஆங்கிலம் கற்ற பார்ப்பனரல் லாதார் சரியாக உணர்ந்து கொண்டு அடிப்படையான திராவிட நாகரீகத்தை நிலைநாட்ட முயற்சிக்கிறார்கள். இதில் இயற்கைக்கு மாறான தொன்றுமில்லை. அவர்கள் முயற்சிக்குக் கற்றுணர்ந்தோர் ஆதரவளிக்க வேண்டியது பொருத்தமானதே"

"ஆரியர்கள் தமிழ் நாட்டிற்குள் அடியெடுத்து வைக்குமுன் ஜாதி முறை இங்கே கிடையாது" தமிழ்நாட்டிற்கு முதன் முதல் வந்த பார்ப்பனர்கள் இந்நாட்டில் தங்கள் வர்ணாஸ்ரம தர்மத்தை புகுத்த முயன்றார்கள். இதில் அவர்கள் வெற்றியடைவதற்குள் பலத்த எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டியிருந்தது.

எந்தத் தமிழனும் பார்ப்பனர்களோடு சரிசமமாக மதிக்கப்படும் யோக்கியதை உடையவன் என்று அவர்கள் கருதவில்லை. தமிழ் மன்னர்கள் மட்டும் சத்திரியர்கள் நிலைக்கு உயர்த்தப்பட்டனர். இந்த அரசர்கள் தமிழ்க் குடிகளாள வேளிர், அல்லது வெள்ளாளர்களிடம் பெண் கள் கொண்டிருந்தபடியால் அந்த வேளாளர்களுக்கும் சூரியன், சந்திரன், நெருப்பு, இவைகளினின்றும் தோன்றிய தாக மிக மதிப்பான வம்சாவளிகளை உண்டாக்கினார்கள்.

சச்சரவுகளுக்கு விதை  ஊன்றப்பட்டது

தங்களுக்குப் பயன்படும் தொழிலைச் செய்தும் தங்க ளோடு பழகியும் வந்த குயவர், நெசுவுகாரர், கம்மியர் முதலிய, தொழிலாளர்களுக்கு உயர்ந்த பட்டங்களை பார்ப்பனர் வழங்கினார்கள். அவர்கள் தெய்வங்களுக்குப் பிறந்தவர்கள் என்று கட்டுக்கதைகள் உண்டாக்கினார்கள், இப்படிச் செய்தது தங்களோடு பழகி தங்களுக்குப் பயன் பட்டு வந்த இந்த தொழிலாளரை தமிழ் சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு ஏற்றவும் அவர்களைத் தட்டிக் கொடுத்து புதிய சமூக அமைப்பில் பிரியத்தோடு சரியாக வேலை செய்யும்படி செய்வதற்குமேயாம். இந்த மாதிரி பின்னால் நேர்ந்த பல சண்டை சச்சரவுகளுக்கு விதை ஊன்றப்பட்டது.

"பறையன் என்ற சொல் ஒரு தொழில் செய்பவர்களைக் காட்டி வந்ததே ஒழிய ஒரு ஜாதியாரைக் காட்டவில்லை. கி.பி. இரண்டாவது நூற்றாண்டில் வாழ்ந்து வந்த தமிழ் புலவரான மாங்குடிக்கிழார்.

"துடியன் பாணன் பறையன் கடம்பனென்றிந்தான் நல்லது குடியுமில்லை" என்றார்.

இந்நா£ன்கும் தொழில் பாகுபாடுகளேயன்றி ஜாதிப் பிரிவுகளல்ல. இவைகள் பாலை அல்லது குறிஞ்சி நில மக்கள் மேற்கொண்ட தொழில்கள். ராஜ ராஜ சோழன் கி.பி. 1013 காலத்தில் தான் பறையன் என்ற சொல் ஒரு ஜாதியைக் குறிப்பிடும் சொல்லாக மாறியிருக்க வேண்டும். ஆதியில் வள்ளுவர்கள் தமிழர்களின் குடும்ப புரோகிதர்களாக இருந்து வந்தனர்.

எடுத்துக் காட்டுகள்

இது 'வள்ளுவன் சாக்கையெனும் பெயர் மன்னற்குள் படு கருமத்தலைவற் கொன்றும்,' 'அரசனது ஆணையை யானை மீதிருந்து பறை பறைந்து தெரிவிப்பதும்

அவர்கள் வேலை'

'என்புழி வள்ளுவர் யானை மீமிசை

நன்பறையறைந்தனர்,' என்பனவற்றால் உணரலாகும்.

இன்றைக்கும் மலையாளத்தில் வேதப்பார்ப்பனராகிய நம்பூதிரிகளுக்கு இறுதிக் கடன் செய்து வைப்பது 'மாரையர்' என்ற நாவித வகுப்பார். "பண்டை எயினர்களின் வழி வந்தவர்களான தற்காலத்தில் பறையர்' எனப்படுவோர் கி.பி. 4ஆவது நூற்றாண்டு வரையிலும் ஆம்பூர் (அம்பு-ஊர்) வேலூர் (வேல்-ஊர்) முதலிய இடங்களில் சிற்றரசர்களாக ஆண்டுவந்தார்கள். அவர்கள் உயர்ந்தமதில்களையும் சூழ்ந்த அகழிகளையும் கொண்டவலிமை பொருந்திய கோட்டைகளையும், தானியம் நிறைந்த களஞ்சியங்களையும் கொண்டிருந்தார்கள். ஒழிவு நேரங்களில் பாடவும் ஆடவும் பாணர்களும் மற்போர் முதலிய உடற்பயிற்சியில் பழக்குவதற்கு 'பணிக்கர்களும்' செருப்பு முதலியவைகள் தைப்பதற்கு செம்மான்களும் நெசவாளிகளும், தச்சரும் வண்ணாரும் அவர்களிலேயே இருந்தனர். இவர்களின் மறைந்துபோன பண்டைப் பெருமையைப் பற்றி இவ்வளவு சொன்னோம். எயினர்களு (பறையர்கள்)க்குள்ளேயே பல தொழிலும் செய்பவர்கள் இருந்தார்கள் என்று கண்டோ மல்லவா? இவர்களில் பார்ப்பனர்களின் நலத்தின் எந்தெந்த தொழில் செய்யும் கூட்டத்தார் வேண்டியிருந்ததோ அக்கூட்டத்தார்கள் உயர்ந்த ஜாதிகளாக நாளடைவில் உயர்ந்தார்கள். இவர்களே தற்காலத்தில் உயர்ந்த ஜாதி இந்துக்களாகக் கருதப்படுகிறார்கள். இக்கூட்டத்தார்களுக்கு பார்ப்பனர்கள் மதிப்பான வம்சா வழிகளை ஏற்படுத்தி அவைகளுக்கு ஒரு புனிதத்தன்மையை கொடுக்கவேண்டி புராணங்களையும் எழுதினார்கள். பறையர்களின் கூட் டத்தின் (Tribe) அமைப்பில் பெரிய புரட்சி ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் பார்ப்பனர் பிறரோடு சேராமல் தனித்து நிற்க விரும்பிய கொள்கையே. பறையர்களை தங்கள் அக்ரகாரங்களுக்குள் நுழையவிடவில்லை. பார்ப்பனர் களின் ஆதிக்கத்திற்கு முதல் பலியான பறையர்களின் உழுவப்பறையர் என்ற கூட்டத்தார்களே இன்று இவர்கள் நிலைமை எப்படியிருக்கின்றது? தாங்கள் எந்த நிலத்திற்குச் சொந்தக்காரர்களாக இருந்தார்களோ அந்த நிலத்தை தமிழ் அரசர்களால் தங்களிடம் அண்டி வாழ்ந்த பார்ப்பனர் களுக்குப் பிடுங்கிக் கொடுக்கப்பட்டு அதே நிலத்தில் தாங்கள் அடிமைகளாக வாழவேண்டிவந்தது. நிலத்திற்கு வேறொரு எஜமானன் வரவே நிலத்தின் சொந்தக்காரனுக்கு அதே நிலத்தில் அடிமையாக வேலை செய் யும் நிலைமை ஏற்பட்டது. அதிர்ஷ்ட வசமாக நாடு ஆங்கிலேயர் வசமான தும் இவ்வடிமை வாழ்வு ஒழிந்தது.

ஹிந்துக்களின் கருத்துப்படி 'தீண்டல்' என்பது என்ன? ஆரிய ஹிந்து, ஆரியனல்லாத இந்துவுக்கும் இடையே காணப்படும் ஒரு கற்பனை. பார்ப்பனர்களின் பழக்க வழக்கங்களை எந்தெந்த தமிழ்க் கூட்டத்தார்கள். எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக கைப்பற்றினார்களோ அவ்வளவுக்கவ்வளவு தொடக் கூடிய ஜாதியாராகவும் (உயர்ந்த ஜாதியாராகவும்) எவ்வளவுக்கெவ்வளவு அவை களைப் பின்பற்ற விரும்பவில்லையோ அவ்வளவுக் கவ்வளவு தீண்டப்படாத ஜாதியாராகவும் எண்ணப் பட்டார்கள்.

பறையர்கள் தான் பார்ப்பனர்களின் பழக்க வழக்கங்களை மேற்கொள்ள சிறிதும் விருப்பமில்லாத வர்களாக இருந்தனர். ஆகவே அவர்கள் உயர்ந்தஜாதி இந்து இருக்கும் இடத்திற்கு 30 கஜத்திற்குள் வந்தால் தீட்டு என்று கருதப்பட்டது. ஆரியர்களுக்கும் பண்டைத் திராவிடர்களுக்கும் இடையில் இருந்து வந்த வெறுப்பு எவ்வளவு என்பதைக் காட்ட ஒரு உதாரணம் தருதிறேன். மலையாளத்தில் குறிச்சன் (குறிஞ்சி நிலத்தார்) என்பவர்கள் தமிழ்நாட்டில் குறவர்களுக்கு சமமான வர்கள். இவர்கள் வீட்டிற்கு எப்பொழுதாவது பார்ப்பனன் வந்து விட்டுப் போனால் அவன் வந்ததால் ஏற்பட்ட தீட்டைப்போக்க வீட்டையெல்லாம் சாணமிட்டு மெழுகும் வழக்கம் இன்றும் நாளையும் இருந்து வருகின்றது

"பண்டைத் தமிழ் நாட்டில் இல்லாத ஜாதி முறையை இந்நாட்டில் ஆரியர்கள் புகுத்தியதால் தமிழர்களுள் அதிருப்தியும், பொறாமையும், வெறுப்பும் மேலிட்டு நாள டைவில் வலங்கை; இடங்கை வழக்கு என்று தமிழ்நாடு முழுவதும் பெரிய சச்சரவு ஏற்பட்டது.

இந்த ஜாதிப்பிரிவு ஏற்பட்டகாலந்தொடங்கி ஒழியாத பூசல் தமிழர்களுக்குள் இருந்து கொண்டே இருக் கின்றது. இந்த வழக்குகளுக்கு ஆதரவளித்தும், சிலசமயங்களில் தாங்களே மூட்டிவிட்டும் வந்தார்கள். பிற் காலத்தில் தமிழ்நாட்டில் குடியேறிய ஆரியர்.

'பசவர்' பார்ப்பன வெறுப்புக் கொண்டு ஜாதி வேற்றுமை களை ஒழிக்க பல உபதேசங்கள் செய்தார். அதன்பயனாக பல தாழ்ந்த ஜாதியார் தங்களை ஸ்தநவரஜஸ்கம் பிராம ணர்கள் என்றும் துலிபரவட, பிராமணர் என்றும் இன்னும் பல பிராமணர்கள் என்றும் அழைக்க ஆரம்பித்தனர். இதைக் கண்டு பொறாமையும் கோபமும் கொண்ட ஆரியப் பார்ப்பனர்கள் தங்களை ஆதரித்து வந்த அரசர்களின் உதவியால் இந்தப் புதிய பிராமணர்களை 'இடங்கை' ஜாதிகளில் சேர்த்தினார்கள்.

இதன் நோக்கம் அவர்களுக்குள் தீராத சண்டை ஏற்பட வேண்டு மென்பதோடு இச்சண் டைகளில் தீர்ப்பளிக்கும்படி மேற்காட்டிய ஜாதியார்கள் தங்களிடமே வரவேண்டு மென்பதும் தான்.

பிராமணர்கள் ஆதிக்கம் தமிழ்நாட்டில் கி.பி. 10ஆவது நூற்றாண்டில் பூரணமாயிற்று.

- விடுதலை: 16.2.1940

-  விடுதலை நாளேடு, 3.1.20


அய்யா நினைவு நாளில் (24.12.2019) வானொலி உரை

தந்தை பெரியாரின் சுய விமர்சனம்

கலி.பூங்குன்றன்,

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 46 ஆம் ஆண்டு நினைவு நாளினையொட்டி (24.12.2019) திராவிடர் கழகத் துணைத் தலைவர் வானொலியில் உரையாற்றினார்.

அவ்வுரையின் விவரம் வருமாறு:

தந்தை பெரியார் யார்?

தன்னைப்பற்றிய அவரின் சுய விமர்சனம், மதிப்பீடு என்ன என்பது வித்தியாசமானது.

ஒரு தலைவரைப்பற்றி இன்னொருவர் மதிப்பீடு செய்வதைவிட, தன்னைப் பற்றித்தானே மதிப்பீடு செய்வது - அந்த மனிதரைப்பற்றித் துல்லியமாக உணரு வதற்கு - தெரிவதற்கு சரியானதாகவே இருக்க முடியும்.

அந்த வகையில் தந்தை பெரியார் தன்னைப்பற்றி, எப்படி விமர்சித்துக் கொள்கிறார்?

இதோ பெரியார் பேசுகிறார்:

நான் ஒரு சுதந்திர மனிதன்

எனக்கு சுதந்திர நினைப்பு, சுதந்திர அனுபவம், சுதந்திர உணர்ச்சி உண்டு. அதை உங்கள் முன் சமர்ப் பிக்கிறேன். நீங்கள் என்னைப் போலவே உங்களது சுதந்திர நினைப்பு, அனுபவம், உணர்ச்சி ஆகியவை களால் பரிசீலனை செய்து ஒப்பக் கூடியவைகளை ஒப்பி, தள்ளக் கூடியவைகளை தள்ளி விடுங்கள் என்கின்ற நிபந்தனையின் பேரிலேதான் எதையும் தெரிவிக்கிறேன்.

எப்படிப்பட்ட பழைமை விரும்பிகளானாலும் இதற்கு இடம் கொடுக்கவில்லையானால், அது நியாயமும், ஒழுங்கும் ஆகாது.

உங்களுக்கு இவை உண்மையெனப்  புலப்படுமாகில் அவைகளை, உண்மையென ஒப்புக் கொள்வதில் மட்டும் பிரயோஜனமில்லை; அவைகளை அனுஷ்டானத்தில் கொண்டு வந்து அதன்படி நடக்க முயற்சி செய்யுங்கள்!

எனது சொந்த அனுபவங்களை நானறிந்து உங் களுக்கு உரைப்பதுதான் என்னுடைய விடுதலை. அவை களை ஆராய்ந்து அதன்படி நடப்பதுதான் உங்கள் விடுதலை!

நான் யார்?

நான் எனக்குத் தோன்றிய , எனக்குச் சரியென்று படுகிற கருத்துக்களை மறைக்காமல் அப்படியே சொல்லு கின்றேன். இது சிலருக்குச் சங்கடமாகக்கூட இருக்கலாம். சிலருக்கு அருவருப்பாக இருக்கலாம். சிலருக்குக் கோபத் தையும் உண்டாக்கலாம். என்றாலும் நான் சொல்வது அத்தனையும் ஆதாரத்தோடு கூடிய உண்மைக் கருத் துக்களே தவிர பொய்யல்ல.

(விடுதலை. 15.7.68; 3:1)

எந்தக் காரியம் எப்படி இருந்தாலும் அரசியலில், பொதுவாழ்க்கையில் கண்டிப்பாக மனித தர்மம் தவிர வேறு எந்தக் கால தர்மமோ, சமய தர்மமோ புகுத்தப்படக் கூடாது என்பதுதான் எனது ஆசையே ஒழிய, உலகத்தில் உள்ள மக்கள் எல்லாம் என் விருப்பம்போல்தான் நடக்க வேண்டும் என்பதல்ல.

- (விடுதலை, 8.9.39; 1:4)

நான் மறைந்து நின்று சிலரைத் தூண்டிவிட்டு எந்தக் காரியத்தையும் செய்யச் சம்மதிக்க மாட்டேன். ஒரு சமயம் அப்படிச் செய்ய ஆசையிருந்தாலும் எனக்கு அந்த சக்தி கிடையாது. மறைவாய் இருந்து காரியம் செய்ய, சக்தியும் சில சவுகரியமும் வேண்டும். அந்த சக்தியும் சவுகரியமும் எனக்கில்லாததாலேயே தான், நான் என் வாழ் நாள் முழுவதும் தொண்டனாகவே இருந்து தீர வேண் டியதாய் இருக்கிறது என்பதோடு, எதையும் எனக்குத் தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்தி, தாட்சண்யம் இல்லாமல் கண்டிக்க வேண்டியவனாகவும் இருக்க வேண்டியிருக்கிறது.

(குடிஅரசு. 24.11:40; 5:4)

என்னைப் பொறுத்தவரையில் நான் என்றும் கட்சிக் காரனாக இல்லவே இல்லை. எப்பொழுதும் நான் கொள் கைக்காரனாகவே இருந்தேன்.

(விடுதலை. 1.6.54; 1:3)

நரக வாழ்வு வாழ்வதாயிருந்தாலும், அங்கு நான் மனிதனாக மதிக்கப்படுவேனாகில் அவ்வாழ்வே இப் பூலோக வாழ்வைவிட மேலென்று கருதுவேன்.

நரக வாழ்வு மட்டுமல்ல, அதைவிடப் பல கொடிய துன்பங்களை அனுபவிக்க நேரும் இடமானாலும் அவ்வி டத்தில் நான் மனிதனாக மதிக்கப்படுவேன் என்றால் அவ் வாழ்வே இவ்விழிசாதி வாழ்வைவிடச் சுகமான வாழ்வு என்று கருதுவேன்,

(குடிஅரசு.. 1.5. 48; 1:8)

‘‘தீண்டப்படாதவர்களைக் கிணற்றில் தண்ணீர் எடுக்கவிடாவிட்டால் வேறு தனிக்கிணறு கட்டிக்கொடு; கோயிலுக்குள் விடாவிட்டால் வேறு தனிக் கோயில் கட்டிக் கொடு” என்றார் காந்தியார், அப்போது நான், ‘‘கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாதென்று இழிவுப் படுத்தும் இழி வுக்குப் பரிகாரமில்லாவிட்டால், அவன் தண்ணீரில்லாம லேயே சாகட்டும்; அவனுக்கு இழிவு நீங்க வேண்டு மென்பது முக்கியமே தவிர, தண்ணீரல்ல’’ என்றேன்.

(விடுதலை. 9.10.57; 3:2)

இந்த நாட்டில் ஜாதி இழிவைப் போக்கப் பாடுபட்டவர் எல்லாம் மலேரியாவுக்கு மருந்து கொடுப்பவர்கள் போன்றவர்கள். மற்றவர்களுக்கு வராமல் தடுக்கக் கூடிய வர்கள் அல்ல. நானோ மலேரியாவுக்குக் காரண மான கொசு வசிக்கின்ற தண்ணீர்த் தேக்கத்தைக் கண்டு, கொசுவை அழித்துத் தடுக்கும் வைத்தியன் போன்றவன்.

(விடுதலை, .4.11.61; 3:3)

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிருகங்கள் போல் நடத்தப்படுகிற பாட்டாளி, கூலி, ஏழை மக்கள் தான் எனக்குக் கண்வலியாய் இருப்பவர்கள். அவர்களைச் சமமனிதர்களாக ஆக்குவதுதான் எனது கண்ணோய்க் குப் பரிகாரம்.

(விடுதலை, 15.10.67; 2:1)

எனக்கு 60 வயதுக்குமேல் ஆகியும் இளைஞர் சகவாசத்தாலேயே எனது உணர்ச்சி முதுமையை அடைய வில்லை . ஏதாவது ஒரு காரியம் செய்யாமலிருக்க, எப்பொழுதும் மனம் வருவதில்லை. ஓய்வு, சலிப்பு என்பவற்றைத் தற்கொலை என்றே நான் கருதுகிறேன்.

(குடிஅரசு, 19.1.36; 8:2)

மக்கள் உலகம் முழுவதும் ஒன்றுபட வேண்டும். மற்ற உயிர்களுக்குத் தன்னால் கெடுதி இல்லாத வாழ்வு பெற வேண்டும். மனிதனிடத்திலே பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாத சாந்தி வாழ்வுக்கு வகை தேடவேண்டும். இதுதான் எனது ஆசை.

(குடிஅரசு, 7.8.38; 19:4)

என்னுடைய சக்தி சிறிது என்பது எனக்குத் தெரியும். ஆனால் என்னுடைய (மனிதாபிமான) ஆசை அளவிட முடியாததாய் இருக்கிறது. அதனாலேயே சக்திக்கும் தகுதிக்கும் மீறிய காரியங்களைச் சொல்லவும் செய்யவும் தூண்டப்படுகிறேன்.

(குடிஅரசு, 25.8.40; 13:1)

எனக்குச் சுய நலமில்லை என்று கருதாதீர்கள். நான் மகா பேராசைக்காரன். என்னுடைய ஆசையும், சுய நலமும் எல்லையற்றன. திராவிடச் சமுதாய நலனையே என் சொந்த நலனாக எண்ணி இருக்கிறேன். அந்தச் சுய நலத்திற்காகவே நான் உழைக்கிறேன்.

(விடுதலை, 15.1.55; 2:3)

யாவரும் கடைசியில் சாகத்தான் செய்வார்கள். சாவதற்காக ஒருவன் வாழ்வை வீணாக்குவதா? எனக்கு உயிர் வாழ்வதற்குச் சிறிதளவு பொருளிருந்தால் போதும். மற்ற பொருளையெல்லாம் பிறர்க்குப் பயன்படுத்தவே செய்கிறேன்.

(விடுதலை, 27.7.58; 3:5)

எனது கருத்துக்கள் பாராட்டப்படுகிறதா? அல்லது புறக்கணிக்கப்படுகிறதா? உயர்வாகக் கருதப்படுகிறதா? அல்லது இழிவாகக் கருதப்படுகிறதா? என்பதைக் குறித்து நான் கவலைப்படாமல், எனது கருத்துக்கள் மற்றவர் களுக்கு எவ்வளவு கசப்பாயிருந்தாலும், உண்மையை எடுத் துரைப்பதுதான் எனது வாழ்க்கையின் இலட்சியம்.

(விடுதலை, 28.9.58 ; 1:1)

நான் பதவிவேட்டை உணர்ச்சிக்காரன் அல்ல. சமு தாய வெறி உணர்ச்சி கொண்டவன் ஆவேன்; நாளைக் கும் சமுதாய நலத்தை முன்னிட்டு எதையும் துறக்கவும், எதையும் செய்யவும் காத்திருக்கிறேன்.

(விடுதலை, 2.5.68; 2 : 3)

எப்போதும் என்னிடம் எனது பணம் என்று ஒன்று மில்லை. நான் பொதுப்பணிக்கு வந்தபோது என்னிட மிருந்த பணத்தை- சொத்தையெல்லாம் இயக்கத்தின் பெயருக்கே எழுதி வைத்துவிட்டதால், இயக்கப்பணத்தில் தான் நான் சாப்பிடுவது முதல் எல்லாமாகும். நீங்கள் கொடுத்த பணத்தைத்தான் கல்லூரிக்கும் - மருத்துவ மனைக்கும் வழங்கினேனே தவிர, என் பணம் எதுவும் இல்லை. எது பொது நன்மைக்கானது என்று பார்த்து (பொது) இயக்கப் பணத்தை அதற்காகச் செலவிட்டேன்.

(விடுதலை, 8.8.68; 3 : 5)

என்னைப் பொறுத்தவரையில், ஒரு மனிதர் யாராக இருந்தாலும் தமிழர் பற்று உடையவர் என்று கருதினால், நான் அவருக்கு அடிமையே ஆவேன். குணம் குடி கொண்டால் உயிருக்கு உயிர்தான். இல்லாவிடில், அவர் யாரோ என்று கருதுகிறவனாவேன்.

(விடுதலை, 15.9.68; 2 : 1)

சாதாரண மொட்டை மரம் போன்றது என்னுடைய வாழ்க்கை. காய், பழம், பிஞ்சு இருக்குமானால், அம் மரத்தில் யாரும் கல்லெறியாமல் பாதுகாக்க வேண்டியது அவசி யமாகும். அப்படியும் எனக்கு என்னைக் காப்பாற்றிக் கொள்ளும் எண்ணமில்லை. எதற்கும் கவலையற்ற எனக்கு, யாரிடமும் பயமில்லை; தயவு வேண்டுமென்ற விருப்பமும் இல்லை .

(விடுதலை, 3.2.58: பெ.செ.)

‘ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக் கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக்கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அதுபோலத்தான் எனக்கும் தோன்றுகிறது. மற்றும் அந்தத் தாய் தனது மக்களில் - உடல் நிலையில் இளைத் துப்போய், வலிவுக் குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற போசனையைவிட எப்படி அதிகமான போசனையைக் கொடுத்து மற்ற குழந்தை களோடு சரிசமானமுள்ள குழந்தையாக ஆக்க வேண்டு மென்று பாடு படுவாளோ, அது போலத்தான் நான் மற்ற வலுக்குறை வான பின் தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவுதான் நான் உயர்ஜாதியின ரிடமும், மற்ற வகுப்புக்களிடமும் காட்டிக் கொள்ளும் உணர்ச்சி ஆகும்.

(விடுதலை, 1.1.62; 1:1)

நான் துறவி. துறவிக்கு வேந்தன் துரும்பு என்பார் கள், எனக்கு வேந்தன் மாத்திரம் துரும்பல்ல; கடவுளும் துரும்பு. வேத சாத்திரங்கள் துரும்பு. ஜாதி துரும்பு, அரசியலும் துரும்பு. துரும்பு மாத்திரமல்ல; அவைகளை, எல்லா யோக்கியக் குறைவையும் காய்ச்சிச் சுண்ட வைத்துப் பிழிந்தெடுத்த சத்து என்று சொல்லுவேன்.

(விடுதலை, 15.10.67; 2:1)

நண்பர்களே! என்னைப் பொறுத்தவரை நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அதுவும் என் மனப் பூர்த்தியாய் சொல்லுகின்றேன். என்னவென்றால், என்னை ஒருவர் மகாத்மா என்றோ , தெய்வத்தன்மை பொருந்தியவர் என்றோ, சித்தர் என்றோ, புத்தர் என்றோ, ஞானி என்றோ, கூப்பிடுவதைவிட - கருதுவதைவிட என்னை அயோக்கியன் என்றும், திருடன் என்றும், முட்டாள் என்றும், சுயநலக்காரன் என்றும், பணம் சம்பாதிப்பவன் என்றும், மற்றும் இழிவான வேலை செய்கின்றவன் என்றும் சொல்லுவதில் எனக்கு லாபம் இருக்கின்றது என்று கருதுகிறேன்.

ஏனெனில், எனது வேலையானது இராமசாமி என்று ஒரு மகாத்மாவோ, மற்றும் தெய்வத்தன்மை பொருந்திய ஒரு ஒப்பற்ற மனிதர் இருந்தார் என்றுமூடஜனங் கள் சொல்லிக் கொள்ளவோ, எனது படத்தை பூஜையில் வைத்து பூஜிக்கவோ, தேரில் வைத்து இழுக்கவோ, கோவிலில் என்பேரில் ‘விக்கிரகம் செய்து பூஜை, உற்சவம் செய்யவோ நான் கருதவில்லை. அந்தக் குணத்தை அடியோடு ஒழிக்க வேண்டுமென்று கருதி வெளிப் பட்டவன். ஆகவே என்னை அக்கதிக்கு ஆளாக்காத வர்களே எனது நண்பர்கள் ஆவார்கள். எனது கொள் கைக்கும் துணை புரிந்தவர்களாவார்கள்.

நான் தெய்வத்தன்மை பொருந்தியவனாகக் கருதப் பட்டு விட்டால், மக்கள் என் வார்த்தையை ஆராய்ந்து பார்க்க மாட்டார்கள். நான் ‘அயோக்கியன்’ என்று சொல் லப்பட்டால் என் வார்த்தைகள் மிகவும் ஜாக்கிரதையாக கவனிக்கப்படும்.

எனவே, எனது வார்த்தைகள், அபிப்பிராயங்கள் அதற்குண்டான சரியான மதிப்புப் பெற வேண்டுமானால், நான் - அயோக்கியனா கவும், பணம் சம்பாதிப்பவனாகவும், திருடனாகவும் கருதும்படியாக பிரச்சாரம் செய்பவர்கள் எனக்கு உதவி செய்தவர்களாகவே ஆவார்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்த குணத்தையும் என்மீது சுமத்திவிடாதீர்கள்.

4.10.1931 இல் நாகையில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டுப் பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய உரையிலிருந்து. ‘குடிஅரசு', 11.10.31

‘‘என்னைப்பற்றி முடிவு கூற

நானே தகுதி உடையவன்''

எனக்குச் சீர்திருத்தத்தில் நம்பிக்கையில்லை. கொஞ்ச நஞ்சம் உள்ள நம்பிக்கையும் போய்விட்டது. புரட்சியில் தான் நம்பிக்கை. ஏதாவது செய்துவிட்டுச் சாகவேண்டும். சாவு சமீபத்தில் இருக்கிறது. நான் உழைத்தது கொஞ்சமல்ல. அது எனக்குத்தான் தெரியும். அதை மதிக்க நானே உரியவன். என்னிடத்தில்தான் நல்ல திராணி இருக்கிறது. ஆகையால் என்னைப் பற்றி முடிவு கூற நானே தகுதியுடையவனே தவிர, வேடிக்கை பார்த்துக் கொண்டு நன்மை வந்தால் அடைவதும், தீமை வந்தால் தனக்குச் சம்பந்தமில்லை என்பவர்களும் தகுதியானவர் கள் அல்ல. என்னைக் குறை கூறுபவர்களும் எனக்குப் புத்தி சொல்லுபவர்களும் தங்கள் நிலைமை உரிமை ஆகியவைகளைச் சிறிதும் கவனித்துச் சொல்லட்டும் என்கிறார் தந்தை பெரியார்.

- ஈ.வெ.ரா.

(‘விடுதலை', 1.5.1943)

இப்படி தன்னைப்பற்றி தாராளமாக தங்கு தடையின்றி விமர்சித்துக் கொள்ளும் தலைவர்களைப் பார்த்த துண்டா? பார்த்ததில்லை. அதனால்தான் இவர் பெரியார்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

-  விடுதலை நாளேடு, 2.1.20

பெரியார் நூலகம் - ஆய்வகத்தில் ‘‘டிஜிட்டல் பிரிவு'' தொடக்கம்

புத்தாண்டுப் பரிசு

நேற்று (1.1.2020) பெரியார் பகுத்தறிவு  நூலகம் மற்றும் ஆய்வகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள  டிஜிட்டில் பிரிவினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொடங்கி வைத்தார். டாக்டர் ஏ.ராஜசேகரன், திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், புலவர் பா.வீரமணி மற்றும் பலர் உடனிருந்தனர். இந்த டிஜிட்டல் பிரிவில் உள்ள தொடு திரை வாயிலாக மிக எளிதில் புத்தகங்களையும், ஏடுகளையும் வாசிக்க முடியும். வாசகர்களுக்குத் தேவையான புத்தகங்களை எளிதில் தேர்ந்தெடுத்து வாசிக்க உதவுவதோடு, அவரவர்க்குத் தேவையான அளவில் எழுத்துகளின் அளவையும் பெரிதாக்கியும் படிக்க முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும். தொடர்ந்து டிஜிட்டல் பிரிவு விரிவாக்கப்படும் என்றும் தமிழர் தலைவர் அறிவித்தார்.

- விடுதலை நாளேடு 2 .1.20

அறிவு நாணயமற்ற அக்கிரகார அம்பி ( மலம் என்றது எதை?)


இதோ ஆதாரம்:

தங்கக் கிண்ணத்தில் அமேத்தியம் (மலம்)

ஒரு சமயம் இவர் தஞ்சையில் ஒரு வாலிபர் சங்கத்தில் தலைமை தாங்கினார். அங்குப் பேசிய தமிழன்பர் ஒருவர் பெரியார் இராமா யணத்தைக் குறை கூறுவது தவறு என் றும், கலையுணர்ச்சிக் காகவும் அதனைப் போற்ற வேண்டும் என்றும் கூறினார். அதற்கு இவர் கூறிய பதில்:

"நான் கலையுணர்ச்சியையும், தமிழ் உணர்ச்சியையும் வேண்டாம் என்று கூறவில்லை. தங்கக் கிண்ணத்தில் அமேத்தியம் (மலம்) இருந்தால் தங்கக் கிண்ணம் என்பதற்காக அமேத்தியத்தைப் புசிக்க முடியுமா? அதுபோல் கம்பராமாயணப் பாட்டுகள் சிறந்தவைதான்.அவற்றில் உள்ள மூடநம்பிக்கைக்கும், தமிழர் இழிவுக்கும், ஆரியர் உயர்வுக்கும் ஆதாரமானவற்றை வைத்துக் கொண்டு எப்படி அவற்றைப் பாராட்ட முடியும்?" என்றார்.

ஆதாரம்: சாமி. சிதம்பரனார் எழுதிய 'தமிழர் தலைவர்' -  பக்.162

கம்பராமாயணத்தைப்பற்றி பெரியார் சொன்னதை  திருக்குறளுக்குச் சொன்னதாக மோசடி செய்யும் பார்ப்பனரைத் தெரிந்து கொள்வீர்!

"தமிழகத்தில் திராவிட நாத்திக வாதத்தை ஒழிக்கப் பிறந்தது 'துக்ளக்', அந்தத் திராவிட நாத்திக வாதத்தின் மிச்சம் இருக்கும் வரை 'துக்ளக்'கின் தேவையும் இருக்கிறது. தமிழகத்தில் பெரியாரை எதிர்த்தால் அது பெரிய விஷயம் என்று நினைத்த காலத்தில் மிகத் துணிச்சலாகப் பெரியாரை விமர்சனம் செய்ய முடியும் என்று காட்டியவர் சோ. 'திருக்குறளை மலம் என்று சொன்னவரை தந்தை பெரியார் என்று எப்படி அழைக் கிறீர்கள்' என்று துணிச்சலாகக் கேள்வி கேட்டவர் சோ" ('துக்ளக்' 1.1.2020)

இவ்வாறு பேசியிருப்பவர் - 'சோ'வின் வீட்டிலிருந்து 'துக்ளக்'கைக் கபளீகரம் செய்து கொண்டுள்ள எஸ். குருமூர்த்தி அய்யர்தான்.

திராவிட நாத்திக வாதத்தின் மிச்சம் இருக்கும் வரை 'துக்ளக்' இருக்குமாம்.

1971இல் நடந்தது மறந்து போய் விட்டதா? சேலத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு ஊர் வலத்தில்  ராமன் செருப்பாலடிக்கப் பட்டார்; ராமனை செருப்பாலடித்த தி.க. ஆதரிக்கிற திமுக வுக்கா ஓட்டு என்று இதே 'துக்ளக்' சிறப்பிதழை எல் லாம் வெளியிட்டு பக்கம் பக்கமாக எழுதியதே - தமிழ்நாட்டு மக்கள் என்ன பதிலடி கொடுத்தார்கள்?

ஆமாம், 'ராமனை செருப்பாலடித்த' தி.க. ஆத ரிக்கும் திமுகவுக்குதான் ஒட்டு' என்று மொத்தடி கொடுக்கவில்லையா?

1967 தேர்தலில் 138 இடங்களை மட்டும் பிடித்த  திமுக 'துக்ளக்' கும்பல் பிரச்சாரம் செய்த ராமனை செருப் பாலடித்த தி.க. ஆதரித்த திமுகவுக்கு 1971இல் கிடைத்த இடங்கள் 183 என்பது 'சோ' கும்பலுக்கு மறந்து போய் விட்டதா!

அந்தத் தேர்தல் முடிவுக்குப் பிறகு "இந்த நாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதி இழந்து விட்டது" என்று ஒப்புக் கொண்டு  இவாளின் மூதறிஞர் ராஜாஜி கையொப்பமிட்டு 'கல்கி'யில் (4.4.1971) எழுதி சரணாகதி அடைய வில்லையா?

ஆத்திகம் தோற்று நாத்திகம்  வென்றது என்பதை ஆச்சாரியாரே ஒப்புக் கொண்ட பிறகு இந்த நண்டு சிண்டு குருமூர்த்திகள் எம்மாத்திரம்!

1971ஆம் ஆண்டுக்குக்கூட  போக வேண்டாம். எட்டு மாதங்களுக்கு முன் திருவாளர் குருமூர்த்தி அய் யர்வாள் ஆசிரியராக வந்து விட்ட நிலையில், 'துக்ளக்' ஒப்புக் கொண்டு சரணா கதி அடைந்தது தெரியுமா?

கேள்வி: மனிதர்களைப் படைத்த கடவுளாலேயே மனிதர்களின் தேவை களை நிறைவேற்ற முடியாதபோது, ஒரு எம்.பி.யால் எப்படி நிறைவேற்ற முடியும் என்று மத்திய இணை அமைச்சர் மகேஷ் சர்மா கூறி யுள்ளது நியாயமா?

பதில்: நியாயமோ இல்லையோ அவர் கூறியது உண்மை ('துக்ளக்' 10.4.2019 பக்கம் 27).

இதன் மூலம் குரு மூர்த்தி அய்யர் என்ன சொல்ல வருகிறார்? கடவுளால் மனிதர் களின் தேவைகளை நிறைவேற்ற முடியாது என்று ஒப்புக் கொண்ட இந்த சிகாமணி தான் திராவிட நாத்தி கத்தைப் பற்றிச் சற்றும் வெட்கமில் லாமல் நாக்கைச் சுழற்றுகிறார்!

இன்னொரு பித்தலாட்டத்தை பிசிறு இல்லாமல் அரங்கேற்றியுள்ளார் இந்த அக்கிரகார அம்பி.

திருக்குறளை மலம் என்று சொன் னார் பெரியார் என்றும் பேசியுள்ளார்.

பலமுறை எழுதியாயிற்று. சவால் என்றும் கூறியாயிற்று.திருக்குறளை மலம் என்று எங்கே சொன்னார் பெரியார்? என்று  பல முறை 'விடுதலை' கேள்வி எழுப்பினாலும் நாணயமான முறையில் பதில் சொல்ல வக்கற்ற இந்த அறிவு நாணயமற்ற ஆசாமி மறுபடியும் திருப்பித் திருப்பி கோயபல்ஸ் பாணியில் பொய்யை அவிழ்த்துக் கொட்டி வருகிறார்.

தந்தை பெரியார் உண்மையிலே சொன்னது திருக்குறளையல்ல - கம்ப இராமணத்தைப்பற்றி தஞ்சையில் கூறியது ('தமிழர் தலைவர்' பக்கம் 162) என்று ஆதாரத்துடன் எடுத்துக் கூறிய பிறகும், குடுமி குருமூர்த்திகள் 'மூடனும் மூர்க்கனும் கொண்டது விடான்' என்ற பழமொழிக்கு ஏற்ப வாந்தி எடுப்பதை 'துக்ளக்' இதழை வாங்கும் தமிழர்கள் புரிந்து கொள் வார்களாக!

- மின்சாரம்

- விடுதலை நாளேடு 31 12 19

ஞாயிறு, 5 ஜனவரி, 2020

மறுப்புகள்! மறுப்புகள்!! மறுப்புகள்!!!

பகுத்தறிவு பற்றி 'தினமலர்' பேசுவதுதான் வேடிக்கை
சூரிய கிரகணத்தின் போது சாப்பிடக் கூடாது என்று கூறுவது மூடநம்பிக்கை என்பதை முறியடிக்க திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னைப் பெரியார் திடலில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமை யில் சூரிய கிரகணத்தின் போது சிற்றுண்டி அருந்தப்பட்டது.
அப்படி சாப்பிட்டவர்கள் நன்றாகத் தான் உள்ளனர். சூரிய கிரகணத்தால் பாதிப்பும் இல்லை; இதனை ஜீரணிக்க முடியாத கோழைகள் - சூரிய கிரகணத் தின்போது சிற்றுண்டி சாப்பிட்ட வீரமணி உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார் என்ற பொய்ப் புழுதியைப் பரப்பினர் - மறுப்பு சொன்ன வுடன் பதுங்கியவர்கள் - இப்பொழுது வேறு கதையைக் கொட்டுகிறார்கள். இன் றைய தினமலரில் ஒரு ஆசிரியர் கடிதம் வெளிவந்துள்ளது. கிறிஸ்தவர்களும், முஸ் லீம்களும் கூட உபவாசம் இருப்பதில் லையா என்று கேள்வி கேட்கிறது.
உபவாசம் இருந்துவிட்டுப் போகட்டும் - அதுவல்ல பிரச்சினை.
சூரிய கிரகணத்தின்போது சாப்பிடக் கூடாது என்ற மூடநம்பிக்கையின் மூல வேரை அறுப்பதுதான் திராவிடர் கழகத் தின் நோக்கம். மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிப் போடும் பரி தாபத்தைப் பாரீர்!
ஒப்பாரி ஏன்?
இந்தச் செய்தியை வெளியிட்ட 'தினமலர்' - செய்திக்கு மேலே தன் கருத்தையும் பதிவு செய்துள்ளது.
திராவிடர் கழகத் தலைவர் கூறிய கருத்துக்கு தினமலரால் மறுப்பு சொல்ல முடியாத நிலையில், அய்யோ பாவம் - ஒப்பாரி வைக்கிறது.
ஆண்டாள் என்பது கற்பனைப் பாத்திரம் என்பதையும் தினமலர் ஒப்புக் கொண்டு விட்டது.
அதனால்தான் அதனால் மறுப்பு சொல்ல முடியாத பரிதாபம்.
திரிநூல் 'தினமலரின்' 'கயிறு' விடுபடலம்!
'விடுதலை'யைச் சீண்டி வாங்கிக் கட்டிக் கொள்ளாவிட்டால் 'தினமலர்'க் கும்பலுக்குத் தூக்கம் வராது போலும்!
திராவிடர் கழக துணைத் தலைவர் பேசிய பேச்சில் குறை இருந்தால் மறுக்கலாம். அப்படி மறுக்க வக்கு இல்லாத நிலையில் தேவையில்லாதவற்றை உளறிக் கொட்டுவது ஏன்?
ஈ.வெ.ரா. வந்த பிறகு தான் தேவாரம், திருவாசகம் எல்லாம் வெளியே வந்தன என்று யார் சொன்னது? 'தினமலர்' தான் எழுதுகிறது. இதில் அறிவு நாணயம் இருக்கிறதா? இதில் திருக்குறளையும் இணைத்து எழுதுவது எத்தகைய பித்தலாட்டம்!
1949ஆம் ஆண்டில் பெரியார்தான் முதல் முதலாக திருக்குறள் மாநாட்டை நடத்தியவர் என்பதை தைரியம் இருந்தால் மறுக்கட்டுமே பார்க்கலாம்.
- விடுதலை நாளேடு, 5.1.2020