‘விடுதலை' சந்தா சேர்ப்பு இயக்கத்தில் ‘விடுதலை' ஆசிரியர் கி.வீரமணி அவர்களே அண்ணா அறிவாலயம் சென்று, ‘விடுதலை'க்கு 10 ஆண்டுகள் சந்தாவிற்கான தொகை ரூ.20 ஆயிரத்தை தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மாண்புமிகு மானமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களிடம் பெற்றுக்கொண்டார் (11.7.2022).
தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத் துறை அமைச்சருமான மாண்புமிகு துரைமுருகன், தி.மு.க.வின் முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என்.நேரு ஆகியோர் தலா 10 ஆண்டு ‘விடுதலை' சந்தாவிற்கான தொகை ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.40 ஆயிரம் வழங்கினார்கள்.‘விடுதலை' ஆசிரியர் நன்றி!
60 ஆண்டு ‘விடுதலை' ஆசிரியராக இருந்துவரும் எனக்கு மதிப்புறு ‘விடுதலை' சந்தாதாரர் என்ற தன்மையில், முதலமைச்சராகிய தங்களிடம் 10 ஆண்டுக்கான சிறப்புறு ‘விடுதலை' சந்தாதாரருக்குரிய தொகையை பெற்றமையைப் பெருமையாகக் கருதுகிறேன் - நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
- கி.வீரமணி,
ஆசிரியர், விடுதலை
குறிப்பு: இவ்வாறு ‘விடுதலை' ஆசிரியர் கூறினார்; சந்தா வழங்கிய அமைச்சர் பெருமக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார் ‘விடுதலை' ஆசிரியர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக