
தூண்கள் அமைக்கும் பணிக்கு கான்கிரீட் கலவை போடும் பணியை திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தொடங்கி வைத்தார். உடன் பொறியாளர்கள் கழக நிருவாகிகள், தோழர்கள் உள்ளனர்.
திருச்சி, செப். 14 சமூக நீதிக்கும், சுயமரியாதைக்கும் வித்திட்ட அறிவுலகப் பேராசான் தந்தை பெரியாரின் கொள்கையை பறைசாற்றும் விதமாக திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகம் பணிகள் தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதல்படி, படிப்படியாக தொடங்கப்பட்டு வருகிறது. முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் ஒரு பகுதியாக இன்று (14.9.2024) காலை 10.30 மணியளவில் பெரியார் சிலைக்கான பீடம் அமைக்கும் பணிக்கான அடித்தளம் (கான்கிரீட்) அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
இந்நிகழ்வில் திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பேராசிரியர் ப.சுப்பிரமணியன், ஜெயபிரகாஷ், செந்தமிழ்குமார், கார்த்திக், ரமேஷ்பாபு, பாண்டியன், ஆல்பர்ட், ஞா.ஆரோக்கியராஜ், மு.சேகர், சங்கிலிமுத்து, மகாமணி, கனகராஜ், ராஜசேகர் ஆகிய கழகத் தோழர்களும் ஓசன் (ளிசிணிகிழி) குழு அரிகரன், ராம் பிரசாத், காசி, ரகுமான் உள்ளிட்ட பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
இரண்டு பெரிய காலம் (தூண்) உள்ளடக்கி மொத்தம் 28 தூண்கள் அமைக்கப்பட் டுள்ளது. இன்று (14.9.2024) மூன்று தூண் கள் அமைக்கும் வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதத்திற்குள் அனைத்து தூண்களும் கான்கிரீட் போடப்பட்டு முடிக்கப்படும். மேலும் 4 லட்சம் லிட்டர் கொள்ள ளவு கொண்ட தண்ணீர் தொட்டி அமைக்கும் பணியும் தொடங் கப்பட்டுள்ளது.
30 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள பெரியார் உலகம் வளாகத்தில் 95 அடி உயரத்தில் பெரியார் சிலை அமையவுள்ளது. இதில் நூலகம், ஆய்வகம், பயிலரங்கம், குழந்தைகளுக்கான பூங்கா உள்ளிட்ட பல்வேறு நவீன அம்சங்களுடன் அமைக்கப் படவுள்ளன.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெரியார் உலக பணி நவீன தொழில்நுட்பத்தோடு தொடங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பெரியார் பற்றாளர்கள், பெரியார் தொண்டர் களும் இப்பணிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர். அரசு அனுமதியோடு முறையாக நடைபெற்று வரும் பெரியார் உலகத் தின் கட்டுமான பணிகளின் முதல் கட்டபணி தொடங்கியது. இந்நிகழ்வில் திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் இனிப்பு வழங்கினார். முதல்கட்டமாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பெரியார் உலகம் செல்வதற்கான அணுகு சாலை (சர்வீஸ்ரோடு) 4.41 மீட்டர் தூரத்திற்கு 7.2 மீட்டர் அகலத்திற்கு அழகிய புல்வெளிகளுடன் அமைக்கப்பட்டி ருக்கிறது. புல் வெளிகள் மட்டும் 6.78 மீட்டருக்கு அமைக்கப் பட்டுள்ளது. பெரியார் உலகத்தின் நுழைவாயில் 9 மீட்டரிலும், வெளியே செல்வதற்கான வழி 9 மீட்டர் அளவிலும் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இப்பணியை ஈரோட்டைச் சேர்ந்த எம்.எம். கட்டுமான நிறுவனம் செய்து வருகிறது.
தனி உலகமாக அமையவுள்ள பெரியார் உலகத்தின் கட்டு மான பணிகள் பல்வேறு மூத்த பொறியாளர்கள் கண் காணிப்போடு சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக