திங்கள், 7 அக்டோபர், 2024

பெரியார் மருத்துவக் குழும இயக்குநர் மருத்துவர் இரா. கவுதமன் பவள விழா – புத்தக வெளியீடு

விடுதலை நாளேடு

 பெரியார் மருத்துவக் குழும இயக்குனர் மருத்துவர் இரா. கவுதமன் அவர்களின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் (பவள) விழாவில் மருத்துவர் இரா.கவுதமன் அவர்கள் எழுதிய “பழைய வரலாறு புதிய பாடங்கள் “, “மருத்துவமும் மூடநம்பிக்கையும்”, “விதி நம்பிக்கையை வீழ்த்திய அதிநவீன மருத்துவங்கள்”, “மரணம்” ஆகிய புத்தகங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டார். தலைமை பேராயர் முனைவர் ரவிக்குமார் ஸ்டீபன், மருத்துவர் பேராசிரியர் பிரித்திவிராஜ், பேராசிரியர் முனைவர் த. ஜானகி, பேராசிரியர் முனைவர் செந்தாமரை ஆகியோர் பெற்றுக் கொண்டனர். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன் ஆகியோர் உள்ளனர்.


தமிழர் தலைவருக்கு ‘டர்பன்’ அணிவிப்பு


பெரியார் மருத்துவக் குழும இயக்குநர் மருத்துவர் இரா. கவுதமன் அவர்களின்
75 ஆம் ஆண்டு பிறந்த நாள் (பவள) விழாவில் திராவிட மறுமலர்ச்சி மய்யத்தின் நிறுவன தலைவர் தலைமை பேராயர் ரவிக்குமார் ஸ்டீபன் அவர்கள் மராட்டியத்தில் மரியாதையின் அடையாளமாக இருப்பதும், மகாத்மா ஜோதிபா பூலே அவர்கள் அணிந்தது போன்றதுமான தலைப்பாகையினை (டர்பன்) தமிழர் தலைவருக்கு அணிவித்தார்.
----------------+++++++++------+-+++++++------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக