
தமிழ்நாட்டு மீனவர்களை அவமானப்படுத்திய இலங்கை அரசைக் கண்டித்து நடைபெற்ற கண்டனப் பேரணி – மாபெரும் ஆர்ப்பாட்டம்

நாகை, அக். 2- தமிழ்நாட்டு மீனவர்களை அவமானப்படுத்திய இலங்கை அரசைக் கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு எழுச்சியுரை வழங்கினார்.
தமிழ்நாட்டு மீனவர்களை மொட்டையடித்து அவமானப்படுத்திய இலங்கை அரசைக் கண்டித்து பேரணி 1.10.2024 செவ்வாய்க்கிழமை மாலை 5:20 மணியளவில் தொடங்கி 6 மணியளவில் அவுரித்திடலுக்கு வந்து சேர்ந்தது. தமிழர்களின் தன்மானத்தை தட்டியெழுப்பிய இப்பேரணிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையேற்றிருந்தார். எழுச்சிகரமான இப்பேரணி நாகை பழைய பேருந்து நிலையம் CSI மேல்நிலைப்பள்ளி அருகில் இருந்து தொடங்கி, நாலுகால் மண்டபம், பாரத ஸ்டேட் வங்கி, தேவி திரையரங்கம் வழியாக அவுரித்திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், பெருந்திரள் கூட்டத்திற்கு வந்து சேர்ந்தது. அவுரித் திடல் மக்கள் கடலாக ஆர்ப்பரித்துப் பொங்கியது.
முன்னிலை வகித்து உரையாற்றியவர்கள்!
தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திராவிடர் கழக நாகை மாவட்டத் தலைவர் VSTA நெப்போலியன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா நிகழ்வை ஒருங்கிணைத்துச் சிறப்பித்தார். தி.மு.க. நாகை மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் என்.கவுதமன், மேனாள் அமைச்சர், தி.மு.க. மாநில விவசாய தொழிலாளரணிச் செயலாளர் உ. மதிவாணன், தி.மு.க. மேனாள் செயல்திட்ட உறுப்பினர், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், சி.பி.அய். நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், காங்கிரஸ் துணைத் தலைவர் மற்றும் புதுச்சேரி மேனாள் அமைச்சர் CPI நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர், புதுச்சேரி மேனாள் அமைச்சர் இரா.கமலக்கண்ணன், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை வி.பி.மாலி, நாகை நகர் மன்றத் தலைவர், தி.மு.க. நகரச் செயலாளர் இரா.மாரிமுத்து, காங்கிரஸ் கட்சி நாகை மாவட்டத் தலைவர் ஆர்.என்.அமிர்தராஜா, திராவிடர் கழக கிராமப்புற மாநில பிரச்சாரக்குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார்.
மக்கள் கடலாக ஆர்த்தெழுந்த அவுரித் திடல்
தலைமைக் கழக அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மு.க.ஜீவா, திராவிடர் கழக இளைஞரணி மாநிலச் செயலாளர் நாத்திகப் பொன்முடி, திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா. குணசேகரன் ஆகியோர் பேரணி, பெருந்திரள் ஆர்ப்பாட்டம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து சிறப்பித்தனர். இறுதியாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி சிறப்புரை ஆற்றினார். பேரணி அவுரித்திடலை அடைந்தவுடன் உணர்ச்சி ஆர்த்தெழுந்தது. தலைவர்கள் மேடையில் நிற்க, ஒலி முழக்கங்கள் பெருக்கியில் முழங்க, அவுரித்திடலை கடல் போல் நிறைந்திருந்த மக்கள் அந்த முழக்கங்களை திரும்பச் சொல்லி அந்த பகுதியையே அதிரச் செய்துவிட்டனர்.
இறுதியாக நாகை நகரத் தலைவர் செந்தில்குமார் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள்
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், மாநில ப.க.துணைத் தலைவர் இல.மேகநாதன், தலைமைக் கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, காப்பாளர்கள் மு.அய்யனார், க.குருசாமி, மாநில ஒருங்கிணைப்பாளர் வி.மோகன், திருவாரூர் மாவட்டத் தலைவர் வி.மோகன், விவசாய தொழிலாளரணி மாநில செயலாளர் வீர,கோவிந்தராசு, தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மன்னார்குடி மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், தஞ்சை மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் கடவாசல். குணசேகரன், கும்பகோணம் மாவட்டத் தலைவர் கு.நிம்மதி, திருவாரூர் மாவட்டச் செயலாளர் கவு.சுரேஷ், காரைக்கால் மாவட்டச் செயலாளர் பொன்.பன்னீர்செல்வம், மாநில ப.க. துணைத் தலைவர் பெ.வீரையன், மன்னார்குடி மாவட்டச் செயலாளர் கோ.கணேசன், பட்டுக்கோட்டை மாவட்டச் செயலாளர் வை.சிதம்பரம், நாகை மாவட்ட ப.க. தலைவர் மு.க.ஜீவா, மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் கி. தளபதிராஜ், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றி குமார், மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், மாநில ப.க.ஊடகப் பிரிவுத் தலைவர் மா.அழகிரிசாமி, சட்டக்கல்லூரி மாணவர் கழக மாநில அமைப்பாளர் மு.இளமாறன், திராவிடர் கழக மாவட்டத் துணைத் தலைவர் பொன்.செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர் ரெ.துரைசாமி, பொதுக்குழு உறுப்பினர் ந.கமலம், மாவட்ட தொழிலாளரணி இராச முருகையன், திருமருகல் ஒன்றியத் தலைவர் மு.சின்னத்துரை, கீழ்வேளூர் ஒன்றிய தலைவர் பாவா. ஜெயக்குமார், கீழையூர் ஒன்றிய தலைவர் ரெ.ரெங்கநாதன், மாவட்ட இளைஞரணி தலைவர் சு.இராஜ்மோகன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் வேதை.சுர்ஜித், திருமருகல் ஒன்றிய செயலாளர் நாக. ரவிச்சந்திரன், கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர் செருநல்லூர் பாக்கியராஜ், நாகை ஒன்றிய செயலாளர் குஞ்சு பாபு சின்னதுரை, மாவட்ட மகளிரணித் தலைவர் இரா.பேபி, மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் செ.கவிதா, வேதாரண்யம் ஒன்றிய தலைவர் வீ.ஆர்.அறிவுமணி, கீழையூர் ஒன்றிய செயலாளர் கோளிலிச்செல்வன், திருமருகல் ஒன்றிய துணைத் தலைவர் ப.காமராஜ், மாவட்ட மாணவரணி தலைவர் மு.குட்டிமணி, கீழ்வேளூர் ஒன்றிய அமைப்பாளர் செருநல்லூர் பாஸ்கர், திருமருகல் ஒன்றிய துணைச் செயலாளர் இரா.ரமேஷ், திருமருகல் வட்டார விவசாய அணி அமைப்பாளர் மருங்கூர் காமராஜ், கீழ்வேளூர் வட்டார விவசாய அணித் தலைவர் ஒக்கூர் ராஜேந்திரன், நாகை நகர அமைப்பாளர் நாகை சண்.ரவிக்குமார், தலைமைக் கழகப் பேச்சாளர் கவிஞர் நாகை நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.
தி.மு.க. கீழ்வேளூர் தெற்கு ஒன்றியச் செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர் பா.கோவிந்தராஜன், தி.மு.க. திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ.செங்குட்டுவன், தி.மு.க. ஒன்றிய குழுத்தலைவர், கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அ.தாமஸ் ஆல்வா எடிசன், தி.மு.க. நாகை வடக்கு ஒன்றிய செயலாளர் என்.ஆனந்த், தி.மு.க. கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கா.பழனியப்பன், தி.மு.க. தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் மகா.குமார், தி.மு.க. வேளாங்கண்ணி பேரூர் கழக செயலாளர் மரிய சார்லஸ் ஆகியோரும் பங்கேற்றனர். ஆசிரியர் மறுபடியும் தனது முகாம் அலுவலகம் திரும்பி, இரவு உணவுக்குப் பிறகு திருவாரூர் நோக்கி பயணத்தைத் தொடர்ந்தார். இரவு 11.20 மணிக்கு திருவாரூரில் இருந்து புறப்பட்டு அடுத்தநாள் அதிகாலை சென்னை திரும்பினார்.
நாகையைக் குலுக்கிய
மீனவர் உரிமைப் பேரணி – ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாட்டு மீனவர்களை கொடுமைப்படுத்தும் இலங்கை அரசைக் கண்டித்து அக்டோபர் 1 அன்று நாகப்பட்டினத்தில் நடைபெற்ற பேரணி மற்றும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ஏழு மாவட்டத் தோழர்கள்.
பேராவூரணி: பேராவூரணி மாவட்டத் தலைவர் பெ.வீரையன், மாவட்டச் செயலாளர் வை.சிதம்பரம், மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் இரா.காமராஜ், மாவட்ட பகுத்தறிவாளர் கழகப் புரவலர் இரா.நீலகண்டன், கழகப் பொதுக்குழு உறுப்பினர் அ.பாலசுப்பிரமணியன், மாவட்ட இளைஞரணித் தலைவர் முத்து துரைராஜ், மாவட்ட தொழிலாளரணித் தலைவர் பெ.அண்ணாதுரை, மதுக்கூர் ஒன்றியத் தலைவர் சி.சந்திரமோகன், பேராவூரணி நகரத் தலைவர் கார்த்திக் ஆகியோர் கலந்துகொண்டனர்.
திருவாரூர்: மாவட்டத் தலைவர் வி.மோகன், செயலாளர் சுரேஷ், கழகக் காப்பாளர் அ.கிருஷ்ணமூர்த்தி, மாநில விவசாய தொழிலாளரணிச் செயலாளர் வீர.கோவிந்தராஜ், மாவட்டத் துணைத் தலைவர் அருண் காந்தி, மாவட்ட இளைஞரணித் தலைவர் கோ.பிளேட்டோ, மாவட்ட மாணவர் கழகத் தலைவர் அழகேசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அரங்க ஈ.வெ.ரா, இரா. சிவக்குமார், கோ.செந்தமிழ்ச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் க.முனியாண்டி, மாவட்ட மகளிரணித் தலைவர் மகேஸ்வரி, மாவட்ட மகளிரணிச் செயலாளர் சி.சரசுவதி, மாவட்ட தொழிலாளரணிச் செயலாளர் நேரு, திருவாரூர் நகரத் தலைவர் சிவராமன், ஒன்றியத் தலைவர் கா.கவுதமன், குடவாசல் ஒன்றியத் தலைவர் ஜெயராமன், மாவட்ட விவசாய தொழிலாளரணிச் செயலாளர் வீரையன், கொறடா ஒன்றியத் தலைவர் ஏகாம்பரம், திருத்துறைப்பூண்டி நகரத் தலைவர் சித்தார்த்தன், திருத்துறைப்பூண்டி நகரச் செயலாளர் நாகராஜன், துணைச் செயலாளர் சம்பத்குமார், ஒன்றியச் செயலாளர் அறிவழகன், மகளிரணித் தோழர்கள் கலைவாணி, கலாவதி, திருவாரூர் நகர மகளிரணித் தலைவர் பிரியா சுரேஷ், நகர மகளிரணிச் செயலாளர் சர்மிளா செல்வேந்திரன், திருவாரூர் நகர இளைஞரணித் தலைவர் செல்வேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நன்னிலம்: ஒன்றியத் தலைவர் தன்ராஜ், நகரச் செயலாளர் ஆ.சரவணன், ஒன்றிய ப.க.தலைவர் கரிகாலன், ஓவியர் சங்கர், தமிழ்மணி, தி.மு.க. தோழர் இராமதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மயிலாடுதுறை: மாவட்டத் தலைவர் குடவாசல் குணசேகரன், மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ், மாவட்ட அமைப்பாளர் ஞான வள்ளுவன், சீர்காழி ஒன்றியத் தலைவர் ச.சந்திரசேகரன், மாவட்ட ப.க.செயலாளர் தங்க. செல்வராஜ், நகரத் தலைவர் சீனி முத்து, நகர துணைத் தலைவர் இரா.புத்தன், மயிலாடுதுறை ஒன்றியச் செயலாளர் அ.சாமிதுரை ஆகியோர் கலந்துகொண்டனர்.
காரைக்கால்: மாவட்டத் தலைவர் குரு.கிருட்டிணமூர்த்தி, பொன்.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் பதி.ஜெய்சங்கர், மாவட்ட துணைத் தலைவர் ஜெ.செந்தமிழன், மாவட்ட மகளிரணித் தலைவர் செ.சிறீதேவி, மாணவர் கழகத் தோழர் இனியவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தஞ்சை: மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாவட்டச் செயலாளர் அருணை குரு, மாநில ப.க. துணைத் தலைவர் பழனிவேல், பகுத்தறிவு ஊடகத்துறை மாநிலத் தலைவர் அழகிரி, செயலாளர் தமிழ்ச்செல்வன், துணைச் செயலாளர் இளவரசர், தோழர் வீரகுமார், மாவட்டக் காப்பாளர் மு.அய்யனார், கலைச்செல்வன், கலைச்செல்வன், கிராமப்புற பிரச்சாரக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அதிரடி க.அன்பழகன், இரா.வெற்றி குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கும்பகோணம்: கழகக் காப்பாளர் வை.இளங்கோவன், குடந்தை மாவட்டச் செயலாளர் துரைராஜ், திருவிடைமருதூர் ஒன்றியத் தலைவர் எம்.என்.கண்ணன், திருவிடைமருதூர் ஒன்றியச் செயலாளர் கு.முருகேசன், குடந்தை மாநகரத் தலைவர் பீ.ரமேஷ், குடந்தை மாநகரச் செயலாளர் சிவக்குமார், மாவட்ட இளைஞரணித் தலைவர் து.சரவணன், தொழிலாளரணிச் செயலாளர் ந.சிவக்குமார், திருவிடைமருதூர் ஒன்றிய துணைத் தலைவர் ந.முருகானந்தம், சிவானந்தம், த.குருமூர்த்தி, மாவட்ட தொழிலாளரணி துணைச் செயலாளர் அ.சங்கர், அன்பானந்தம், பாபநாசம் ராஜீவ்காந்தி, மாநில ப.க.பொதுச்செயலாளர் வி.மோகன், மாவட்ட மகளிரணித் தலைவர் மு.திரிபுரசுந்தரி, மாநகர மகளிரணித் தலைவர் அம்பிகா மற்றும் மன்னார்குடியைச் சேர்ந்த ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சி பொறுப்பாளர்கள், தோழர்கள், மீனவப் பெருங்குடி மக்கள் ஆகியோர் பங்கேற்று பேரணியும், பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தையும், பொதுக்கூட்டத்தையும் சிறக்கச் செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக