வெள்ளி, 4 அக்டோபர், 2024

துணை முதலமைச்சராகப் பதவியேற்குமுன் மானமிகு மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தாய்க் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வாழ்த்து பெற்றார்!


விடுதலை நாளேடு
Published September 29, 2024

தமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சராகப் பதவியேற்குமுன் மானமிகு மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், ெசன்னை பெரியார் திடலுக்கு வருகை தந்து, தாய்க்கழகத்தின் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து, அவருக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றார். மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து, வாழ்த்துத் தெரிவித்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், அமைச்சர்கள் உள்ளனர்.

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்கும் முன் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங்களில் மரியாதை (சென்னை, 29.9.2024)

விடுதலை நாளேடு
Published September 29, 2024

தந்தை பெரியார் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கழகத் துணைத் தலைவர் பயனாடை அணிவித்து விடுதலை மலர் வழங்கினார். புதியதாக தமிழ்நாடு அரசின் அமைச்சர்களாக பொறுப்பேற்க இருக்கும் பமரத்துப்பட்டி ராஜேந்திரன், கோவி. செழியன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். (சென்னை, 29.9.2024)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக